அன்புத் தமிழர்களே!!
நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது!!
நீங்கள் இடும் கருத்துகளை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துகளில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... தொடர்ந்து படியுங்கள்..
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, இயூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
இணையம் வாயிலாக நீங்கள் தொடர்ந்து எழுதும் இடுகைகளான கருத்துகள், பதில்கள், பதிவுகள், துவீட்டுகள், பிலாக்குகள் போன்றவை, அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக இன்று அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளிக்கவேண்டும், என முடிவு செய்ய உதவும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதும் மொழியும் எழுத்துகளும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துகளிலே இடுகின்றனர்..
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
[..மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..]
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு இயூட்டியூப் காணொளிகளிலும் , பேசுபுக் மற்றும் துவிட்டர் பதிவுகளிலும் , பலர் கண்ணில் படும் இடங்களிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்த பின் தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம்.
மறக்காமல் இப்பதிவின் பின்னூட்டங்களையும் படித்துவிடுங்கள்.
யாராவது இதைப்படித்தபின்னர் தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
௧) https://www.internetworldstats.com/stats7.htm
௨) https://www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
௩) https://www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
௪) http://www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
௫) https://speakt.com/top-10-languages-used-internet/
௬} https://en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
திறன்பேசில் எழுதிட:-
௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
உலாவி வாயிலாக:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) https://wk.w3tamil.com/tamil99/index.html
௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
௪) https://www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) https://askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் கீபோர்ட்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " என்பதனை முயன்றுப் பாருங்கள்.
#வாழ்க #தமிழ்
தாசெ,
நாகர்கோவில்.