Tuesday, March 29, 2022

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாமா?

ஸ,ஷ,ஜ,ஹ,ஶ,க்ஷ,ஶ்ரீ ஆகிய வடவொலிதரும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாமா?

எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப.
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
இப்படித்தான் தன் முதல் செய்யுளிலேயே கூறுகிறது தொல்காப்பியம்.   அதாவது, தமிழ் எழுத்துகளானவை 'அ...ஔ' முதல் 'க...ன' வரை ஆகமொத்தம் முப்பது எழுத்துகளே.  'ஃ' எனும் அகேனத்தைக்கூட அலங்கடை என்கிறது.

மேலும், வட-எழுத்துகளாகிய கிரந்த எழுத்துகளை பயன்படுத்தக்கூடாது என்பதை,
வடசொற் கிளவி வடவெழுத்து 'ஒரீஇ' எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
என்ற செய்யுளின் வாயிலாக 'வடவெழுத்து ஒரீஇ' அதாவது 'கிரந்த எழுத்துகளை விலகுக' எனத் தொல்காப்பியம் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. 

கிரந்த எழுத்துகளை தமிழில் முறைப்படுத்தி பயன்படுத்த தொடங்கிவிட்டால், இந்திய மொழிகளில் தமிழுக்கென்று மிச்சமிருக்கும் பிறமொழி கலவா தனித்தமிழ் கலைச்சொல்லாக்கம் என்பது  அழிந்துவிட பெருமளவு வாய்ப்புண்டு.  தமிழ் தவிர மற்ற இந்திய மொழிகளில் கலைச்சொற்கள் பெரும்பாலும் சங்கத மொழியிலேயே உருவாக்கப்படுகின்றன என்பதைக் காண்க.

வேற்றுமொழிச் சொற்களும் ஒலிகளும் அதற்கான (கிரந்தம் பொன்ற) எழுத்துகளும் 'கூடுமானவரை' தீண்டத்தகாத நச்சு வேதிப்பொருள் உணவு நிறமிகளாகக் கருதி (முறைப்படி தடைசெய்யப்பட்டு) தள்ளியே வைக்கப்பட்டு 'வேறுவழியேயில்லை' என்ற கட்டத்தில்மட்டும் (சட்டமீறுதல்களோடும், குற்ற உணர்ச்சியோடும்) சிறிது தொட்டுகொள்ளலாம்.  இந்த 'குற்ற உணர்ச்சியே' தனித்தமிழை நோக்கிய தேடலுக்கு வழிவகுக்கும்.

"தனித்தமிழ் வைத்து என்ன பயன்?; வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில் அப்படி என்ன குறைச்சல் ஏற்பட்டுவிடப்போகிறது? இதனை ஏற்கனவே செய்திடும் பிற இந்திய மொழிகள் அழிந்தா பொய்விட்டது?;  'ஆங்கிலத்தை'ப்போல் பலமொழிக் கூறுகளை தன்னுள் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொண்டால் தானே தமிழானது பன்மடங்கு வளம்பெறும்?;  வாயால் எழுப்ப இயலக்கூடிய ஒலிகளை எழுதமுடியாத ஒரு வரிவடிவத்தை வைத்துக்கொண்டு என்ன பயன்? இவ்வகை எழுத்துகளின் சேர்ப்பால் தமிழிலிருந்து இன்னொரு 'மலையாளம்' பிரிந்து சென்றாலும் அதனால் தமிழுக்கு என்ன இழப்பு? " போன்ற கேள்விகளைக்  கேட்பவர்கள் இங்கு உள்ளனர் என்று எனக்குத்தெரியும்.  :-) அதற்கு பதிலாக ஒரு ஆய்வுக்கட்டுரை நூலையே எழுதவேண்டிவரும் என்பது என் கணிப்பு. 

பொதுவாக கிரந்த எழுத்துகள் பெயர்ச்சொற்களை எழுதுவதிலேயே பயன்படுவதைக் காணலாம்.  இவ்ழுத்துகளை தொல்காப்பியம் கூறும் முப்பது தமிழ் எழுத்துகளை மட்டும் வைத்தே எழுதிட முடியும் என்பது என் பட்டறிவு.  அதை எப்படி எனப்பார்ப்போம்.

ஸ,ஶ

பெரும்பாலான தமிழர்கள் 'ஸ'வையும் 'ச'வையும் ஒன்றாகத்தான் ஒலிக்கின்றனர். (ச்ச - தவிர). 

1} ஆகையால் 'ஸ' மற்றும் 'ஶ' ஆகிய எழுத்துகளுகக்குப்பதிலாக 'ச' தனை பயன்படுத்திவிடலாம். 
எ.கா:
ர்ப்பம் >> ர்ப்பம்
2} 'ஸ்' அல்லது 'ஶ்' ஆகியவற்றிற்குப் பதிலாக 'சு' பயன்படுத்தலாம். 
எ.கா:
ரோட்ரீகஸ் >> ரோட்ரீகசு
ஸ்க் >> சுக்கு
3} 'ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகளுக்குப் பிறகு 'ய'காரம் வந்தால் 'சி' இட்டு எழுதலாம். 
எ.கா:
ஶ்யாமளா >> சியாமளா
ஸ்யம் >> வசியம்
4} ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வந்தால் அவற்றை தவிர்த்துவிட்டு எழுதிப்பார்க்கலாம். ஒலிப்புக்கு ஒத்துவரவில்லை என்றால் 'சு' பயன்படுத்திவிடலாம். 
எ.கா:
ஸ்தாணு >> தாணு
ஸ்தலம் >> தலம்
ஸ்டாலின் >> தாலின்

 5} ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகளுக்குப் பிறகு 'ட'காரம் வந்தால் அதனை 'த்த' ஆக எழுதலாம். 

எ.கா:-
அகஸ்டின் >> அகத்தின் 
5} சில இடங்களில் 'ஸ' என்பதனை 'த'வாக எழுதும் பழக்கமும் தமிழில் உள்ளது.
எ.கா:-
ராக்ஷஸன் >> ராட்சதன் / ராக்கதன்
ஹஸ்தம் >> அத்தம்

1} இதற்கு 'ச' வைப் பயன்படுத்திவிடலாம்.
எ.கா:
ஷாநவாஸ் >> சாநவாசு
ரோஷினி >> ரோசினி
2} ஆனால், 'ஷ' ஆனது இகரத்துக்குப் பிறகு வந்தால் 'ட' என எழுதிவிடலாம். 
எ.கா:
ஜோதிம் >> சோதிம்
விம் >> விம்
வியம் >> வியம், வியம்
ரிபம் >> ரிபம், ரிபம் >> இபம் 
பாஷாணம் >> பாடாணம்
3} அதுபோல 'ஷ்' என்ற எழுத்தை 'சு' அல்லது 'சி' என எழுதிவிடலாம்.
எ.கா:
ரேஷ்மா >> ரேசுமா 
ஷ்யா >> ருசியா 
சிஷ்யர் >> சிசியர் >> சீடர்
4} ஆனால், 'ஷ்க' என்பதை 'சுக்க' எனவும், 'ஷ்ச' என்பதை 'ச்ச' எனவும், 'ஷ்ட' என்பதை 'ட்ட' எனவும், 'ஷ்ப' என்பதை 'ட்ப' அல்லது 'சுப்ப' எனவும் எழுதிவிடலாம்.
எ.கா: 
புஷ்கலா >> புசுக்கலா 
குஷ்டம் >> குட்டம் 
புஷ்பம் >> புட்பம், புசுப்பம் 
5} 'ஷ' ஆனது முதல் எழுத்தாக வரவில்லை என்றால் 'ழ' என எழுதுவது இலங்கை வழக்கு.
எ.கா:
வியம் >> வியம் >> விழையம்
ரிபம் >> ரிபம்.

1} இதற்கு பல இடங்களில் 'ச' தனையே பயன்படுத்திவிடலாம். ga, da, dha, ba வரும் இடக்களிலெல்லாம் க, ட, த, ப ஆகியவற்றை இப்போது பயன்படுத்துவதில்லையா!? அதுபோலத்தான் ஜ->ச வும்.
எ.கா:
கன் >> கன்
ஜான்ன் >> சான்ன்
ராரான் >> ராரான்
2} அதுபோல 'ஜ்' என்ற எழுத்தை 'சு' என எழுதிவிடலாம். 
எ.கா:
ஜ்வாலா >> சுவாலை
ராஜ்குமார் >> ராசுகுமார்
3} 'ஜ்'க்குப்பிறகு 'ய'காரம் வந்தால், அதனை 'சி' என எழுதிவிடலாம்.
எ.கா:
பூஜ்யம் >> பூசியம்
4} சொல்லின் முதல் எழுத்தாக வராமலும் 'ஜ்' அல்லாத ஜகர எழுத்தாக வந்தால் அதனை 'ய'கரமாகவும் எழுதிடலாம்.
எ.கா:
புங்கன் >> புங்கன்.

1} சொல்லின் முதலில் வந்தால் 'ஹ'வோடுவரும் உயிரொலியின் எழுத்தை பயன்படுத்திவிடலாம்.  
எ.கா:
ளபீடு >> ளபீடு
ஹொகேனக்கல் >> கேனக்கல்
ஹோசூர் >> சூர்
ஹைதராபாத் >> தராபாது
ரி >> ரி
2} சொல்லின் நடுவில்/இறுதியில வந்தால் 'க' போட்டுவிடலாம்.
எ.கா:
ஹ்மான் >> குமான்
ராஹுல் >> ராகுல் 
ஹஸ்யம் >> கசியம் 
3} அதுபோல 'ஹ்' என்ற எழுது சொல்லின் முதலில் வந்தால் அதனை 'இ' என்றும், இடையில்/கடைசியில் வந்தால் 'கு' எனவும் எழுதிவிடலாம்.
எ.கா:
ஹ்ருதயம் >> இருதயம் >> தயம்.

க்ஷ

இது, 'க்'உம் 'ஷ'உம் சேர்ந்த கூட்டெழுத்து.
1} இதனை க்ச, ட்ட, ட்ச, க்க என ஒலியமைப்புக்கு ஏற்றவாறு எழுதிக்கொள்ளலாம்.
எ.கா:
க்ஷகன் >> ட்சகன்
ராக்ஷஸன் >> ராட்சசன்
தீக்ஷை >> தீக்கை
ருத்ராக்ஷம் >> ருத்திராக்கம்
க்ஷ்மி >> க்குமி
க்ஷ்மணன் >> க்குமணன் >> க்குவன்
2} சொல்லின் முதலில் வந்தால் 'ச' என எழுதிவிடலாம்.
எ.கா:
க்ஷேத்திரம் >> சேத்திரம்
க்ஷமை >> மை.

ஶ்ரீ

இது 'ஶ்'யும் 'ரீ'யும் சேர்ந்த கிரந்தக் கூட்டெழுத்து. 
1} பல காலமாகவே தமிழர்கள் இதனை 'சீ' என்றே எளிமையாக ஒலித்துவருகின்றனர்
எ.கா:
ஶ்ரீநிவாசன் >> சீனிவாசன்
ஶ்ரீதேவி >> சீதேவி
2} இதனை 'சிறீ' என வெகுகாலமாக இலங்கைத் தமிழர்கள் எழுதிவருகின்றனர்.
எ.கா:
ஶ்ரீலங்கா >> சிறீலங்கா >> திருயிலங்கை
தேவிஶ்ரீ >> தேவிசிறீ
3} இடங்களின் பெயரிலும் கடவுளர்களின் பெயரிலும் 'ஶ்ரீ' இருந்தால், அதனை 'திரு' என்றே எழுதிவிடலாம்.  
எ.கா:
ஶ்ரீரங்கம் >> திருவரங்கம்
ஶ்ரீவைகுண்டம் >> திருவைகுண்டம்

F,Z

ஆங்கில மொழியில் காணப்படும் 'F' மற்றும் 'Z' ஆகிய ஒலிகளை முறையே 'ப' மற்றும் 'ச' ஆகிய எழுத்துகளால் எழுதிவிடலாம்.  சிலர் 'F'க்குப் பதிலாக 'ஃப'வையும் 'Z'க்குப் பதிலாக 'ஜ'வையும் பயன்படுத்துகின்றனர்.  இது தமிழ் இலக்கணத்தின் அடிப்படையின் படி முற்றிலும் தவறாகும்.  ஆக, 'F'க்கு 'ப'வையும் 'Z'க்கு 'ச'வையும் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது. 
எ.கா:
FeரோZ -> பெரோசு
Faத்திமா -> பாத்திமா
Ziம்பாப்வே-> சிம்பாப்வே

இவை எவையும் சிலருக்கு உளநிறைவு ஏற்படுத்தாது. அவ்வாறான சிக்கலான பிறமொழிப் பெயர்களை, 'சீனர்'கள் செய்வதைப்போல, அப்பெயரின் பொருளை/ஒலியைத் தழுவிய நல்ல தமிழ்ப் பெயர்களை இட்டுக்கொள்ளலாம். 
எ.கா:
ராரான் >> மன்னர்மன்னன் 
ஸ்தலம் >> இடம்
ர்ப்பம் >> பாம்பு
ளபீடு >> பழையவீடு
ஹொகேனக்கல் >> புகையுங்கல் 
ஷூ >> காலணி

கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஶ, க்ஷ ஆகிய எழுத்துகளையும் https://www.unicode.org/charts/PDF/U11300.pdf இதில் வரும் ga, da, dha, ba (𑌗, 𑌡, 𑌦, 𑌬) ஆகியவற்றிற்கான கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே பயன்படுத்துங்கள்.  வேண்டுமென்றால் kʰa, gʰa, chʰa, jʰa, tʰa, dʰa, thʰa, dhʰa, pʰa, bʰa (𑌖, 𑌘, 𑌛, 𑌝, 𑌠, 𑌢, 𑌥, 𑌧, 𑌫, 𑌭) இவற்றையும் தமிழ் எழுத்துகளுடன் பயன்படுத்திவிடுங்கள்.  பிறகு மிச்சம் என்ன இருக்கிறது.

குறிப்பு: இலக்கண நூலான நன்னூலானது தற்சமம் மற்றும் தற்பவம் பற்றி என்ன கூறுகிறது என்பதையும் படித்துவிடுங்கள். 
கிரந்த எழுத்துகளை தவிர்ப்பது பற்றி கவிஞர் தாமரை

இது பற்றி திரு வேதரத்தினம்




Wednesday, March 23, 2022

எதற்கு>>எவ்வாறு>>எதனை

 எதற்கு -> எவ்வாறு -> எதனை

ஏதாதது உருப்படியான செயலை செய்ய நினைக்கிறீர்கள் என்றால், எதனை செய்யப்போகிறீர்கள், எவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்று நினைப்பதற்கு முன் முதலில் "எதற்கு" எதையாவது செய்யப்போகிறீர்கள் என நினைத்துப்பாருங்கள்.  அதற்கான காரணங்களை அதன் ஆழங்களில் சென்று எண்ணிப்பார்த்து ஆராயுங்கள்.  அதன் விடையை அத்துறை சார்ந்த வல்லுனர்கள் பலரிடம் சொல்லிப்பாருங்கள்.  அதற்குரிய அவர்களது கருத்துக்களையும் ஆராயுங்கள்.  அதில் உளநிறைவு ஏற்பட்டால், அவைகளை "எவ்வாறு"  செய்யப்போகிறீர்கள் என ஆராயுங்கள்.  பின்னர் "எதனை" செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள்.

.......எதற்கு -> எவ்வாறு -> எதனை.......

"எதற்கு" என்ற கேள்வியானது, உங்களின் உள்ளத்தின் ஆழத்தில் உறைந்துள்ள மெய்யான விருப்புக்களையும் வெறுப்புக்களையும் வெளிக்கொணரும்.   

"எவ்வாறு" என்பதானது, உங்களின் திறம் வளம், செல்வம், பாதுகாப்பு, உங்களால் பெறயியலும் உதவிகள் போன்றவற்றின் அளவை   வெளிக்கொணரும்.

"எதனை" என்பது மேற்கூறிய முடிவுகளின் அடிப்படையில், உங்களுக்குக் கிட்டியிருக்கும் உங்களைப்பற்றியான அறிவின் அடிப்படையில், என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்து அதற்குரிய செயலை நோக்கி இயங்கிடும் பக்குவத்தை அளித்திடும்.

- சைமன் சினெக்

Saturday, March 5, 2022

 குறிக்கோள் (குழந்தைகளுக்கானதல்ல)

 குறிக்கோள்

(குழந்தைகளுக்கானதல்ல)

::10000000000000000 மடங்கு பெரிதாக்கிக் காட்டல்....

வத்திக்குச்சியை கொளுத்தினால்கூட இருட்டாகத்தான் இருக்கும் அப்படி ஒரு கும்மிருட்டு.  யாரோசிலர் லேசாக முணுமுணுப்பது மட்டும் தள்ளியிருந்து கேட்டது..  மற்றபடி அங்கு ஒரு மயான அமைதி.  என்றாலும் என்னைச் சுற்றிமட்டுமே ஆயிரம் பேர் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருத்தரைச் சுற்றியும் எத்தனைபேர் நின்றுகொண்டிருக்கின்றனரோ.  அப்படி ஒரு கூட்டம்.  மூச்சுவிடக்கூட இடமில்லை.  இந்த கும்மிருட்டில் பக்கத்தில் நிற்கும் ஆயிரம் பேரையும் யார்யாரென எப்படிக் கண்டுகொள்வது.  இப்படி விலாவிரியாச் சொல்கிறானே இவன் யாரென்று கேட்கிறீர்களா.  என் பெயர் காமேசு அரவிந்தன்.   எப்படி, பெயர் நன்றாக இருக்கிறதா? பெயர் மட்டுமல்ல நன்றாக ஓடவும் செய்வேன்.  பிறந்ததிலிருந்து இதுநாள்வரை ஓட்டப்பயிற்சி மட்டும்தானே பெரும்பாலும் நடந்திருக்கு.  எனக்கு மட்டும் இல்லை, இங்கு நிற்கும் அனைவருமே வேகமாக ஓடுவோம்.  ஆனால் பாருங்கள், போன வாரம் நடந்த பயிற்சிப் போட்டியில் தீபிகா அரவிந்தன் எங்கள் எல்லாரைவிடவும் சரசரவென்று வேகமாக ஓடி முதல் பரிசைப் வென்றுவிட்டாள்.  அதனால் ஒரு வாரமாக யாரையும் கண்டுக்காமல் மமதையில் திரிந்தாள் அந்தக் கிராதகி.  

திடீரென நிலநடுக்கம் வந்தது போல மொத்த இடமுப் தடதடதடவென குலுங்கத்தொடங்கியது.  எல்லாரும் அச்சத்தில் கூச்சலிடத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் பெருத்த ஓசையில் "ஐயோ"வென கத்திவிட்டனர்.  என் கையை இறுக்கப்  பிடித்துக்கொண்டு நின்ற நவீன் அரவிந்தன் "டேய், இது எப்படியும் இரிட்சர் அளவில் 9.2 ஆவது இருக்கும்" என்று கூறினான்.  அவனைக் கண்டுகொள்ளாதீர்கள்.   விக்கிபீடியாவில் அரைகுறையாய் எதையாவது படித்துவிட்டு இப்படி உளறுவான்.  பெரிய படிப்பாளி என்று காட்டிக்கொள்வான்.   வீல் என்ற விசில் ஒலி கேட்டது.  "அமைதியாக இருங்கள்.. கூச்சல் போடாதீர்கள்... நம் நல்லதுக்குத்தானனே இது நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன.." இப்படி கரகரத்த குரலில் உரக்கப் பேசியது வேறு யிரும் இல்லை, அது நம் அணித் தலைவர் திருவாளர் இரகவன் அரவிந்தன்.  இரகவன் ஒரு மெழுகுவர்த்தி போல் ஒன்றைப் பற்றவைத்து அங்கிருந்த மேடையில் ஏறினான்.  அதன் வெளிச்சத்தில் அங்கு நின்றிருதோர் எல்லாம் தெளிவாகவே தெரிநதனர்.  "அன்பான உடன்பிறந்தோர்களே!" என இராகவன் உரக்கக் கூறவும் அது அந்த அரங்கத்தில் " ...களே.. களே... களே.." என எதிரொலித்தது.  அரங்கம் அமைதியாயிற்று.  ஆனாலும் இலேசான நிலநடுக்கம் இப்போதும் இருக்கத்தான் செய்தது.  தொடரியில் செல்லும்போது ஆடுமே அதுமாதிரி நாக்களெல்லாரும் அலையலையாய் ஆடிக்கொண்டிருந்தோம்.  இராகவன் "ஒன்று.. இரண்டு.. மூன்று.." என வேகமாக எங்களை எண்ணத்தொடங்கினான்.  அவன் தான் எண்ணுவதில் புலியாச்சே, கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணி முடித்திருந்தான். "எல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.. நாம் மோத்தமாக இருபது இலட்சம்பேர் இருக்கிறோம்" அரங்கம் ஆடிக்கொண்டுதான் இருந்தது.  இராகவன் தொடர்ந்தான் "நாட்டில் பொருளாதார நிலவரம் அவ்வளவாக நன்றாக இல்லை பார்த்துக்கொள்ளுங்கள்.  இப்போது நடக்கவிருக்கும் போட்டியில் உங்களில் யாராவது வெற்றி பெற்றுவிட்டாலும் வெளியில் போய் பன்முனைப் போட்டிகள் நிறைந்த சூழ்நிலையில் வெற்றிபெறுவது என்பது கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.  அதனால் இப்பொழுதே உங்கள் உள்ளங்களை அதற்காக ஆயத்தப்படுத்திவைத்துக்கொள்ளுங்கள்..". 

 ஒரு குண்டூசியைப்போட்டால்கூட கிளாங் என்று வெண்கலப் பானையை பாறையில் போட்டமாதிரி ஓசை கேட்கும் அளவுக்கு ஒரு அமைதி.  மூச்சு விடும் ஓசைகூடக் கேட்கவில்லை.  ஆனால் அடுத்து நடக்கபாபோவதை யாரும் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.  "நான் கப்பல் கட்டும் தொழிநுட்பத்தில் வல்லுனர் ஆவேன்.  இப்போது நிலவும்.பொருளாதார மந்த நிலையானது அந்தத்துறையை பாதிக்கவில்லை" எனக் கத்தினாள் சுவேதா அரவிந்தன்.  "நான் நுண்மிகளை ஆராயும் அறிஞர் ஆவேன்" என்றான் இளம்வழுதி அரவிந்தன்.  இரசனி அரவிந்தன் தன் கீச்சுக் குரலால் சொன்னாள் "என் வாழ்க்கைக் குறிக்கோளானது மாழைகளால் கட்டப்படும் கட்டிடங்களுக்கான வடிவமைபாபாளர்" என்று.   சொன்னால் என்னை தப்பாக நினைக்கக்கூடாது, இரசனி அழகுனா அழகு அப்படியொரு அழகு, செம கட்டை!!.  அதியமான் அரவிந்தன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.  அவன் பங்குச்சந்தை புள்ளியியல் ஆய்வாளர் ஆகவேண்டும் என்று சொன்னான்.  பலரும் அவரவர் விருப்பங்களைச் சொல்லியவண்ணம் இருந்தார்கள். இராகவன் அவற்றைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.  தமன்னா அரவிந்தன் அன்னை தெரசாவைப்போல சமூக ஆர்வலராகவேண்டும் என்றாள், மோகன் அரவிந்தன் இரசினி,கமல் மாதிரி ஒரு புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர் ஆகவேண்டும் என்றான், அர்சனா அரவிந்தன் அந்தமான் நிகோபாருக்கு முதல்வர் ஆகவேண்டும் என்றாள், நான் எதுவுமே சொல்லவில்லை, நம் உள்ளத்து எண்ணங்களை எதுக்கு எல்லாரிடமும் சொல்லவேண்டும், எனக்கு ஒப்புதல் இல்லை. பொன்லிங்கம் அரவிந்தன்  சொன்னதைக் கேட்டு எல்லாரும் கொஞ்சம் ஆடித்தான்போனார்கள். வேதங்கள் உபநிடதங்கள் எல்லாம் கற்று ஒரு துறவியாகி மக்களுக்கு பகவத் கீதையை போதனை செய்யவேண்டும் என்றான். "அட, இதெல்லாம் ஒரு குறிக்கோளாடா" என நவீன் என் காதருகே வந்து கூறினான். இதற்குமேல் பெறுமை இழந்த இராகவன் "போதும்.. போதும்..உங்கள் எண்ணங்கள் எல்லாம் ஈடேற என் உளம்நிறை வாழ்த்துகள்.. அடுத்தது நான் சொல்வதை........" திடீரென அரங்கத்தின் வேப்பம் சடசடவென கூடத்தொடங்கியது.. "நாம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.." எனக் கத்தினான் இராகவன். "உங்கள் எல்லாருக்கும் என் அன்பு நிறைந்த முத்தங்களும் வாழ்த்துகளும்.. ஆயத்தமாக இருங்கள்.  நான் ஒன்று, இரண்டு, மூன்று சொல்லி விசில் ஊதியவுடன் மேற்குப் பக்கமாக இருக்கும் வாசல் வழியாக எல்லாரும் ஓடத் தொடங்குங்கள்.." நாங்கள் ஓடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் ஆயத்தமானோம்..

1111111111111........

2222222222222222......

3333333333333333333.....

வீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.............

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....    

மேற்குக் கதவு தானாகவே திறந்துகொண்டது...

முடிந்தமட்டில் வேகமாக ஓடினேன்.. கூட்ட நெரிசலில் நவீனின் கையை விட்டுவிட்டேன்... அவனைத் தேடுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.  பின்னால் இருந்து மிகையான அழுத்தத்தில் தள்ளுகிறார்கள்.  வேகமாக ஓடுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. இரண்டாவது கதவும் தாண்டியாயிற்று.. மூன்றாவது வாசலும். குகை போன்ற ஓடுபாதை சற்று வளைந்து வளைந்து சென்றுகொண்டிருக்கிறது.  இப்போது என்னருகில் சீவிதா அரவிந்தன் ஓடிக்கொண்டிருந்தாள்.  அவளுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த மீரா ஆரவிந்தன் "டீ இன்னும் வேகமாக ஓடு டீ" என்று சீவிதாவை அதட்டினாள்.  அவர்களைப் பார்த்து "இப்போது வந்துவிடுமா" எனக்கேட்டேன்.  "காமேசு அண்ணா, நாம் இன்னும் நீண்ட தொலைவு செல்லவேண்டும்.  உங்கள் பள்ளிக்கூடப் பாடத்தில் இதுபற்றி விரிவாகச் சொல்லிக்கொடுத்திருப்பார்களே.  விருப்பத்தெரிவில் அதைப் படிக்காமல் விட்டுவிட்டீர்களா" எனப் பகடி செய்தாள் மீரா.  "ஆனால் கவலைப்படாதீர்கள், அவள் அப்படித்தான்.  நீங்கள் வேகமாகத்தான் ஓடுகிறீர்கள் அண்ணா.  உங்களுக்கு என் வாழ்த்துகள்" என்று ஊக்கமளித்தாள் சீவிதா .  அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லிவிட்டு இன்னும் வேகமாக ஓடத்தொடங்கினேன்.  பார்த்தவர்கள் எல்லாரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லிக்கொண்டே வேகமாக ஓடினோம்.  நான் வேகமாக ஓடியதால் பெருங்கூட்டத்தை லிட்டு சற்று தள்ளி வந்துவிட்டிருந்தேன்..  என் ஓட்டத் திறமையை நினைத்து பூரிப்படைந்து எனக்கே மார்தட்டிக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் திடீரென தொலைவில் ஒரு சலசலப்பை உணரமுடிந்தது.  என்னவென்று தலையை உயர்த்தி எட்டிப் பார்த்தால் எங்கள் எல்லாரையும் விட மிக வேகமாக ஓடி முன்னேறிச் சென்ற தீபிகா அரவிந்தனும்  பிரவீன் அரவிந்தனும் பூமா அரவிந்தனும் எதையோ உரக்கக் கூறிக்கொண்டே எதிர்திசையில் தலைதேறிக்க ஓடிவந்துகொண்டிருப்பது தெரிந்தது.  இன்னும் என் தலையை எட்டிப் பார்த்தபோது அவர்கள் எங்களையும் பார்த்து திரும்பச்செல்லுமாறு சைகை காட்டியபடியே எங்களைநோக்கி ஓடிவந்துகொண்டிருந்தனர்.  இப்போது அவர்கள் கத்துவது கேட்டது "திருப்பிச் செல்லுங்கள்... திருப்பிச் செல்லுங்கள்... நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்.. நம் அனைத்து ஆசைகளும் கனவுகளும் அழுக்கில் புதைக்கப்படப்போகிறது.." என அவர்கள் ஆற்றாமையிலும் சினத்திலும் கத்திக்கொண்டே வந்துகொண்டிருந்தனர்.  என் மரமண்டைக்கு ஒன்றும் புரியவில்லை.   அதற்குள் அங்கு வேகமாக ஓடிவந்த நம் அணித்தலைவர் இராகவன் "என்ன ஆச்சு, ஏன் எதிர்பக்கமா ஒடிவருகிறீர்கள்" என கேட்டதற்கு,  பிரவீன் மூச்சிரைத்தவாறே "கடவுளே! அதை நான் எப்படிச் சொல்வேன்.." அதற்குள் பின்னால் வரும் பெருங்கூட்டம் எங்கள் எல்லாரையும் படு வேகமாக தள்ளத்தொடங்கியிருந்தார்கள்.  பிரவீன் கத்தினான்...

"அரவிந்தன் அவளோட  பின்பக்கம் வழியாகச் செய்கிறாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆன்..."

கத்தியும் பயனில்லை.. எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்திருந்தது..

::இயல்பு நிலையில் காட்டல்

சிறிது நேரத்துக்குப் பிறகு "நளினி.." 

"ம்..."  

"நளினிச் செல்லம்..."  

"ம்.. என்ன..?" 

கிசுகிசுக் குரலில் "பிடித்திருந்ததா..." 

"......."  

"இல்லை.. முதன்முதலா இதனைச் செய்கிறோம்... அதுதான்....."

"....."

"உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்.. பிடிக்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்... சரி எனக்கு ஆய் முட்டுவது மாதிரி இருக்கு.. போயிட்டு வரேன்..."

"......."

கழிவறைக்கு உள்ளிருந்து "இனிமேல் இது வேண்டவே வேண்டாம் அரவிந்தன்..."

"....."



Tuesday, March 1, 2022

மூலிகைப் பல்பொடி

 

பொதுவாக பலவகை மூலிகை/சித்தா/ஆயுர்வேத பல்பொடிகளில் இருப்பவை:
  1. உமிக்கரி
  2. ஆலம்பட்டை
  3. வேலம்பட்டை
  4. கருவேலம் பட்டை காய்
  5. வேப்பம்பட்டை
  6. மகிழம்பட்டை
  7. அரசம்பட்டை
  8. இலவங்கம்பட்டை
  9. நாவல்பட்டை
  10. கிராம்பு
  11. ஏலக்காய்
  12. அதிமதுரம்
  13. சுக்கு
  14. மிளகு
  15. திப்பிலி
  16. ஓமம்
  17. வால்மிளகு
  18. பெருஞ்சீரகம்
  19. கரிசலாங்கன்னி
  20. நிலவேம்பு
  21. கடுக்காய்
  22. நெல்லிக்காய் (காய்ந்தது)
  23. தான்றிக்காய்
  24. மாசிக்காய்
  25. சாதிக்காய்
  26. நாயுருவி (வேர்)
  27. படிகாரம் (சிறிது)
  28. கோரை
  29. மூங்கிலரிசி
  30. பாக்கு
  31. ரோசா இதழ் (காய்ந்தது)
  32. பச்சைகற்பூரம் (சிறிது)
  33. (இந்து)உப்பு
  34. மஞ்சிட்டி
  35. மஞ்சள்
  36. செங்கருங்காலி/மாரோடம்
  37. வெட்டிவேர்
  38. அக்கரகாரம் (வேர்)
  39. துளசி
  40. புதினா
  41. வெள்ளைப்போளம்
  42. யூக்காலிப்டசு
  43. எலுமிச்சை தோல்
  44. துத்தி
  45. கண்டங்கத்திரி
  46. காட்டாமணக்கு/ஆதாளி/முள்கத்திரி
  47. மரமஞ்சள்
  48. சுவற்றுக்கற்றாழை
  49. தவசி முருங்கை
  50. வாய்விடங்கம்
  51. கிரந்தி நாயகம்
  52. மாவிலங்கம்/கூவிரம்
  53. வில்வம்/கூவிளம்
  54. பேரரத்தை
இவை போக சிலர் கல்நார், சிந்தூரம், செங்கல்பொடி, மாக்கல்பொடி, சோடாக்காரம், சிப்பிச்சுண்ணம் ஆகிய கேடுவிளைவிக்க வாய்ப்புள்ள பொருள்களையும் சேர்கிறார்கள்
.

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...