Tuesday, September 15, 2020

தயவுசெய்து தமிழிலேயே எழுதுங்கள்

அன்புத் தமிழர்களே!!

நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது!!

நீங்கள் இடும் கருத்துகளை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துகளில் மட்டுமே  இடுங்கள்...

இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... தொடர்ந்து படியுங்கள்..

ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, இயூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..

காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள்  ஆகியவற்றின் அடிப்படையிலேயே  எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... 

இணையம் வாயிலாக நீங்கள் தொடர்ந்து எழுதும் இடுகைகளான கருத்துகள், பதில்கள், பதிவுகள், துவீட்டுகள், பிலாக்குகள் போன்றவை, அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும் நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக இன்று அமைகின்றன.  ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளிக்கவேண்டும், என முடிவு செய்ய உதவும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதும் மொழியும் எழுத்துகளும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..

மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும்  இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துகளிலே இடுகின்றனர்.. 

விழித்திடுங்கள் தமிழர்களே!!..

[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]

[..மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..]

இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு இயூட்டியூப் காணொளிகளிலும் , பேசுபுக் மற்றும் துவிட்டர் பதிவுகளிலும் , பலர் கண்ணில் படும் இடங்களிலும் கட்டாயம்  *பகிர்ந்திடுங்கள்*.  பலரும் இதைப்படித்த பின் தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம்.

மறக்காமல் இப்பதிவின் பின்னூட்டங்களையும் படித்துவிடுங்கள்.

யாராவது இதைப்படித்தபின்னர் தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..

திறன்பேசில் எழுதிட:-
௧) https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi 
௨) https://play.google.com/store/apps/details?id=com.mak.tamil
௩) https://play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam

ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) https://tinyurl.com/yxjh9krc
௫) https://tinyurl.com/yycn4n9w

கணினியில் எழுதிட:-
உலாவி வாயிலாக:-
௧) https://chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) https://wk.w3tamil.com/tamil99/index.html

மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html


குரல்வழி எழுதிட:-
https://tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் கீபோர்ட்:  https://play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " என்பதனை முயன்றுப் பாருங்கள்.

பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- 

#தமிழ்_எழுத்துகளில்_எழுதுவோம்

#வாழ்க #தமிழ்

#தமிங்கிலம்தவிர்'ப்போம்
#தமிழிலெழுதிநிமிர்'வோம்


நன்றி.

தாசெ, 
நாகர்கோவில்
.




48 comments:

  1. அருமையான பதிவு ... தமிழை வளர்ப்போம்.. தமிழை காப்போம்..

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு.பின்பற்றுவேன்.நன்றி ஐயா

      Delete
    2. மிக்கநன்றி நண்பரே. இச்செய்தியை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்கதமிழ்

      Delete
  2. நீண்ட நெடிய நுண்ணிய பார்வை ௨ங்களின் தமிழ் மொழி உணர்வு. மனமகிழ்ச்சி தமிழ் வாழ்க நம் ௨ணர்வு மீண்டும் புத்துயிர் பெற்றதாக க௫துகின்றேன் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி நண்பரே. இச்செய்தியை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்கதமிழ்

      Delete
    2. நண்பரே, நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். எனது அலை பேசி 8939478478.
      உங்கள் பதிவை ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் ஃபாரத்திற்கு அனுப்பியிருக்கிறேன்.
      உங்கள் மின்னஞ்சலை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  3. நான் இணைந்து விட்டேன்

    ReplyDelete
  4. சரியான பதிவு , நானும் இனைந்து விட்டேன் , நன்றிகள் பல .

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி நண்பரே. இச்செய்தியை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்கதமிழ்

      Delete
  5. மிகவும் அருமையான பதிவு.

    ReplyDelete
  6. நானும் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  7. நானும் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  8. நானும் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகின்றேன்.

    ReplyDelete
  9. Replies
    1. மிக்கநன்றி நண்பரே. இச்செய்தியை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்கதமிழ்

      Delete
  10. ஒரு நல்ல பதிவு. இதனை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. தமிழ் மொழியை வளர்க்க தங்களின் முயற்சிக்கு நன்றி. எனக்கும் இதே ஏக்கம்தான். தமிழ்ப்பற்று உடைய அனைவருக்கும் இந்த ஏக்கம் தங்களின் முயற்சியினால் தீர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி நண்பரே. இச்செய்தியை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்கதமிழ்

      Delete
  11. நல்லது சகோ. தங்கள் கருத்தை என்னுடைய முகநூலில் பகிர்ந்து உள்ளேன்.

    ReplyDelete
  12. இதோ, கூகுள் இன்புட் டூல்ச் உதவியுடன் இதை தட்டச்சு செய்கிறேன்.
    மிக்க நன்றி நண்பரே. #வாழ்கதமிழ்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி நண்பரே. இச்செய்தியை உங்கள் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். https://thaache.blogspot.com/2020/09/blog-post.html #வாழ்கதமிழ்

      Delete
  13. தங்கள் பதிவு இன்றியமையாதது! பாராட்டும் வாழ்த்தும். சில மாற்றங்களுடன் என்னுடைய நண்பர்களிடம் பகிந்துகொள்கிறேன். நன்றி
    சொ.வினைதீர்த்தான்
    ..................................

    அமெரிக்க வாழ் பேராசிரியர் திருமிகு இராஜம் அவர்கள் கருதினைக் கீழே பகிர்ந்துள்ளேன்.
    சொ.வி.
    ............................எ

    எளிய தமிழில் எழுதலாமே ...

    1. “எழுதிடுங்கள்” என்பதுக்கும் “எழுதுங்கள்” என்பதுக்கும் என்ன வேறுபாடு? ஏன் அங்கே ஒரு மிகைப்பட்ட “இடு”?

    2. “தங்களது” என்பதில் “அது” என்ற மிகை ஏன்?

    3. “எழுதிடும்” என்பதுக்கும் “எழுதும்” என்பதுக்கும் என்ன வேறுபாடு? ஏன் அங்கே ஒரு மிகைப்பட்ட “இடு”?

    4. “அமைந்துவிடுகின்றன” என்பதுக்கும் “அமைகின்றன” என்பதுக்கும் என்ன வேறுபாடு? ஏன் அங்கே ஒரு மிகைப்பட்ட “விடு”?

    5. “இடுகைகளானவை” என்பதுக்கும் “இடுகைகள்” என்பதுக்கும் என்ன வேறுபாடு? ஏன் அங்கே ஒரு மிகையான “ஆனவை”?

    6. “துவங்கு” என்பதுக்கும் “தொடங்கு” என்பதுக்கும் என்ன வேறுபாடு?
    [“ தொடங்கினளே” என்ற சொல்லாட்சியைப் பழந்தமிழிலக்கியமான அகநானூற்றிலேயே காண்கிறோமே! அதை விடுத்து … “துவங்கு” என்ற சொல்லாட்சி எப்போது உலவத் தொடங்கியது?! “துவ” என்பதின் அடிப்படைப்பொருள் என்ன?]


    நட்புடன்,
    ராஜம்

    ReplyDelete
    Replies
    1. பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்
      #வாழ்க.#தமிழ்

      Delete
    2. நீங்கள் கூறியதை ஓரளவு செய்துவிட்டேன்.என நினைக்கிறேன்.

      Delete
  14. திருமூலர் திருமந்திரம் :
    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு.
    பாரதி :
    செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.
    பண்பாடு, கலாச்சாரம், இந்த இரண்டுக்கும் மக்களின் தெளிந்த மொழி அறிவுக்கும் தொடர்பு இருக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்
      #வாழ்க.#தமிழ்

      Delete
  15. தோழரே எனது மொபைலில் தொடர்புகள் அனைவருக்கும் அனுப்பி விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. பகிர்ந்து ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி.
      #வாழ்க.#தமிழ்

      Delete
  16. தமிழ் வளர்க வாழ்க.
    என் பதிவுகளை என் தாய் தமிழில் தான் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்
      #வாழ்க.#தமிழ்

      Delete
  17. அருமையான முயற்சி நண்பா. இம்முயற்சி இன்று நேற்று முளைத்தது அல்ல கல்லூரிக்காலத்திலேயிருந்து விடமாமல் பற்றிக்கொண்டு, அதற்காகவே பலமணிநேரம் உழைக்கும் எனது அருமை நண்பனுக்கு என்னுடைய பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி நண்பா.

      Delete
  18. உண்மை சகோ. அதனால் தான் இப்போ அமேசான் காரன் தமிழ் - ல ஆர்டர் பன்னலாம் - னு App - ல கொண்டு வந்து இருக்கிறான். தமிழர்கள் தங்கள் கருத்துக்களை நம் தமிழ் மொழியில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியது மிகசாசரியானதே.
      பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்
      #வாழ்க.#தமிழ்

      Delete
  19. என் பதிவில், தமிழை "தமிழ் எழுத்துக்களில்" எழுதவேண்டும் என்பது முதல் கருத்து. உங்கள் இடுகை பிறமொழிகளில் இருப்பின் அம்மொழியின் வளர்ச்சியை/இருப்பைத்தான் இணைய உலகில் ஊக்குவிக்கிறீர்கள் என்பது என் இரண்டாவது கருத்து. பேசுபுக், மைக்ரோசாப்ட், ஆமெசான் போன்றவற்றின் #மொழிபெயர்ப்பிகள் இப்பொழுதே எந்த ஒரு மொழியிலிருந்தும் வேறு எந்த ஒரு மொழிக்கும் மொழிபெயர்க்கும் செயலை ஓரளவுக்கு சிறப்பாக செய்கிறது. இந்த மொழிபெயர்ப்புத் திறன் மேன்மேலும் மெருகேறிவருவது கண்கூடு. பேசுபுக்கில் பெரும்பாலான பிறமொழி இடுகைகளை ஓரளவிற்கு தமிழில் மொழிபெயர்த்துப் படிக்கமுடிகிறது. இது எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கும் பொருந்தும். யூட்டியூபிலும் இந்த வசதி மிகவிரைவில் வரவிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
    தமிழ்மொழிக் காணொளிகளை கண்டுகளிப்பவர்களில் பெருபாலானோர்கள் தமிழர்களே. மிகமிகக் குறைவான தமிழ் படிக்கத்தெரியாதவர்களே தமிழ் காணொளிகளிலுள்ள பினூட்டங்களை படிக்கவருவர். இந்த இரு காரணங்களால் நம் பதிவுகளை/பதில்களை தமிழிலேயே தயங்காமல் இடலாம். நாம் நம் மொழியில் இடுகைகளை இடுவதன் வாயிலாகத்தான் கூகுள் போன்ற பெருநிறுவனங்களை "மொழிபெயர்ப்பு" வசதியை அவர்களின் சேவைகளிலெல்லாம் கொடுக்கவைக்கும் நிலைக்கு தள்ளமுடியும். இது அரசாங்கங்களுக்கும் பொருந்தும். அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் அவர்களின் எந்த ஒரு ஊடகங்களின் வாயிலாக நம்மிடம் தொடர்புகொள்ளும்போது நமது தாய் மொழியில் அதனை எதிர்பார்ப்பது தவறொன்றும் இல்லையே. அதை நோக்கிய நகர்வுதான் நான் மேலே கூறியிருப்பது.

    ReplyDelete
  20. ஞாலப்பெருவாரி மொழிகளான மான்டரின், ஆங்கிலம், இசுபுனியம், இந்தி/உருது மற்றும் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் செய்யாத மண்ணின் மொழிகளைத் தவிர்த்து அத்தனை மொழியினரும் தங்கள் தாய்மொழியை அடுத்த தலைமுறையினர் சரிவர அதன் தூய்மைமாறாமல் பயன்படுத்துவதில்லை என்றே நினைக்கிறனர். அடிமை வரலாறு, ஆதிக்க மொழிகளின் பரப்புதலினால் ஏற்படுள்ள கல்வி, வணிகம், ஊடகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவையே இத்தாய்மொழிகளை அடுத்த தலைமுறையினர் புறக்கணிப்பதற்கு காரணமாகிவிடுகிறது.. ஆனால் தாய்மொழி என்பது ஒருவரின் முக அமைப்பு, குரல், கைரேகை போன்ற ஒரு இன்றியமையாத தனிமாந்தர் அடையாளம் என்ற கருத்தை நாம்தான் ஆணி அடித்தாற்போல் மீண்டும்மீண்டும் சொல்லி புரியவைக்கவேண்டும்.
    சிலபல ஆய்வுகளைச் செய்தபின்னரும் கூகுளிலும் பேசுபுக்கிலும் பணிபுரியும் என் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேசித்தெளிந்ததன் அடிப்படையிலேயே இந்த செய்தியை உருவாக்கி மக்களிடையே கொண்டுசெல்லவேண்டும் என முடிவெடுத்தேன். இதற்காக யூட்டியூப், பேசுபுக், துவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் வாயிலாகவும் நட்பு வட்டாரத் தொடர்புகள் வாயிலாகவும், நாளொன்றுக்கு 10-15 இடங்களில், பலர் கண்ணில் படும் இடங்களில், பொதுமுடக்கம் தொடங்கியதிலிருந்து இதனை பதிவிட்டு வருகிறேன். பலர் இதனைப் படித்துவிட்டு "இனிமேல் தமிழிலேயே/தமிழை தமிழெழுத்துக்களிலேயே எழுதுவேன்" என எனக்கு பதிலளித்துள்ளனர்.
    பலரின் கணினியில்/திறன்பேசியில் தமிழ் விசைப்பலகையை எவ்வாறு கொணர்வது என உதவிசெய்துள்ளேன்.
    யூட்டியூபைப் பொறுத்தவரை, 'Recently uploaded videos' பகுதியில் போய் ஒரு 10 காணொளிகளிலும் இன்னபிற காணொளிகளில் ஒரு 5 கணொளிகளிலும் இச்செய்தியைப் பதிலிடுவேனபதிலிடுவேன். எந்த ஒரு வணிக நோக்கத்துடனோ கொள்கைபரப்பு நோக்கத்துடனோ இச்செய்தி பகிரப்படவில்லை. தயவுசெய்து இதனை தொல்லைச்செய்தியாகக் காணவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  21. இப்பொழுதே மொத்த இந்தியாவின் 40-50% மக்கள், இணையமும் சமூக வலைத்தளங்களும் பயன்படுத்துகிறார்கள். இதில் தமிழர்கள்/மலையாளிகளின் விழுக்காடு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். எங்கள் ஊரில் திறன்பேசியும் அதில் வாட்சாப்பும் பேசுபுக்கும் இல்லாதவர்களே இல்லை எனலாம். போகிறபோக்கைப் பார்த்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் அது 90% ஐத் தாண்டினாலும் வியப்பொன்றும் இல்லை. இன்றைய பொழுதில் ஒரு செய்தியை பெருவாரி மக்களிடையே உடனடியாகக் கொண்டுசெல்வதில் சமூகவலைத்தளங்கள் பெரும்பங்காற்றுகின்றன என்னபதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இந்தியா உட்பட பல நாடுகளில் அரசியலே இதை நம்பித்தான் நடக்கிறது. இதில் பொய்ச் செய்திகளும் பல பரப்பப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. பல சிறு சிறு ஊர்களில் கூட, யூட்டியூபில் வரும் சமையல் நிகழ்ச்சிகள் தாய்மார்களிடையே புகழ்பெற்றுவருகிறது என்ற கருத்துக்கணிப்பை அண்மையில் பார்த்தபோது வியப்பாக இருந்தது. இணையப்பயன்பாடு இப்படிப் பரவலாகிக்கொண்டிருக்க, தமிழை அதன் எழுத்துக்களில் தமிழர்களாகிய நாமே எழுதாவிட்டால் யாரைக் குறைகூறுவது.

    ReplyDelete
    Replies
    1. நானும் தமிழிலேயே இனி எழுதுவேன் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் எங்கும் எதிலும் தமிழ் மொழியிலேயே என் கருத்துக்களை செய்திகளை பரப்பு வேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்!

      Delete
  22. சில ஆண்டுகள் முன்பு கணினியில்/திறன்பேசியிலும் தமிழில் எழுத மிகத்திணறுபவனாகவே நான் இருந்தேன். தமிழில்தான் எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தபின், "ஓரிரு வாரங்களில்" மிகச்சரளமாக எழுதப்பழகிவிட்டேன். தற்போது என்னால் கணினியிலும் கைபேசியிலும் ஆங்கிலத்தைவிட தமிழில் வேகமாக தட்டச்சு செய்யமுடிகிறது. அதில் ஆங்கில எழுத்துக்களின் வாயிலாகவே தமிழ் எழுத்துக்களை வேகமாகத் தட்டச்சு செய்யமுடிகிறது. தமிழ்நெட்99 விசைப்பலகையில் இன்னும் பழகவில்லை. திறன்பேசியில் "google indic keyboard" அல்லது "tamil keyboard" செயலிகளைப் பயன்படுத்துகிறேன்.
    கணினியிலும் திறன்பேசியிலும் தமிழில் எழுதவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அடிப்படையாக இருந்தால் போதும்.
    பலர் தமிழில் எழுதத் தயங்குவதற்கு கீழ்காணும் காரணங்கள் உள்ளதாத என் பட்டறிவில் அறிந்துள்ளேன்:
    ௧} கணினியிலோ கைபேசியிலோ தமிழில் எழுதுவதைக் கடினமான ஒன்றாகக் கருதுபவர்கள். உண்மை என்னவென்றால், தமிழில் கணினியிலோ கைபேசியிலோ சரளமாக எழுதப்பழகிட ஓரிரு வாரங்களே போதும் என்பதே.
    ௨} பலர் பயன்படுத்தும் கணினியிலோ கைபேசியிலோ தமிழ் விசைப்பலகை நிறுவப்படாமை. அத்தகையவர்களுக்கென்றேதான் என் இடுகையின் இறுதிப்பகுதியில் அதற்குத்தேவையான தொழிநுட்பத் தகவல்களை இணைத்துள்ளேன்.
    ௩} ஆங்கிலத்தில் எழுதினாலே தமிழ் தெரியாதவர்களுக்கும் தாங்கள் எழுதியது புரியும் என்பவர்கள். கூகுள், பேசுபுக் போன்றவற்றின் மொழிபெயர்ப்பிகள் இன்றளவிலேயே ஓரளவு துல்லியத்துடன் இயங்குகிறது. நாம் தொடர்ந்து தமிழைப் பயன்படுத்தின்லேதான் இந்நிறுவனங்களும் தமிழுக்கான மொழிபெயர்ப்புச் சேவையின் முதன்மையை மிகைப்படுத்தும்.
    ௪} தமிழில் எழுதுவதில் ஆர்வமில்லாதவர்கள். இவர்கள் தமிழை இணையத்தில் நாம் பயன்படுத்தாததால் பிற்காலத்தில் ஏற்படப்ப்போகும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள விழையாதவர்கள்.
    ௫} தமிழை வெறுப்பவர்கள். தமிழின்பால் பற்றுகொண்டோரை வெறுப்பவர்கள். கண்மூடித்தனமாக வெறுப்பவர்கள். இவர்கள், விழுக்காட்டளவில் மிகக்குறைவே.

    ReplyDelete
  23. ஆம் இதை பல கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் பயிற்சியின்போதும் கூறியிருக்கிறேன்
    தமிழை இணையத்தில் எளிதாகப் பயன்படுத்தும் முறைகளையும் இந்தக் காணொளியில் கூறியிருக்கிறேன் https://youtu.be/Ik8-eDnY9DQ

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. உங்கள் காணொளியும் அருமையாக இருந்தது.
      பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்
      #வாழ்க.#தமிழ்

      Delete
  24. புரிந்து கொள்ளல் தமிழருக்கு அவசியம். பரபரபுரைகள் அதிகமாகத் தேவைப்படுகிறது. தமிழ்மொழி எங்கும் பரவ வேண்டும். தமிழர் அல்லாதோரும் தமிழை அறிந்து அதைக் கற்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்க #தமிழ்

      Delete
  25. 2012 லிருந்து தமிழில் எழுதுவதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்த நடத்திகொண்டிருக்கிறேன். என்னை பின் தொடரவும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. https://www.blogger.com/profile/06186474459697578828 யில் உங்கள் தொகுப்புக்களைப் பார்த்தேன். மிக அருமை.
      உங்கள் இயக்கத்தைப்பற்றியும் அதை எவ்வாறு பின்தொடர்வது என்பதுபற்றியும் கூறுங்கள். பேசுபுக், துவிட்டரில் உள்ளீர்களா?
      பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #வாழ்க #தமிழ்

      Delete
  26. தமிழன், தமிழனுடன் தமிழில், தமிழில் மட்டுமே, பேச வேண்டும், தொடர்பு கொள்ளவேண்டும் என்பது எனக்கும் ஏற்புடையதே. தமிழை ஆங்கிலத்தில் எழுதுபவர்களை கண்டாடால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது, கோபமும் ஏற்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      #தமிங்கிலம்தவிர்
      #தமிழெழுதிநிமிர்
      #தமிழிலேயேபகிர்
      #தமிழல்லவாஉயிர்
      #வாழ்க #தமிழ்

      Delete
  27. ஜ,ஸ,ஷ,ஹ என்ன பாவம் செய்தன? அவை கிரந்த எழுத்துக்கள். இலங்கை ஆறுமுக நாவலர் கூட தமிழில் ஒலி சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக இவற்றை ஏற்றுக்கொண்டார்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, கிரந்த எழுத்துக்களை எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் "எழுத்து எனப்படுப
      அகரம் முதல்
      னகர இறுவாய் **முப்பஃது** என்ப
      சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. அவைதாம்,
      குற்றியலிகரம் குற்றியலுகரம்
      ஆய்தம் என்ற
      முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன." என்றுதான் தன் முதல் செய்யுளிலேயே கூறுகிறார் தொல்காப்பியர்.
      கிரந்த எழுத்துக்களை தமிழில் முறைப்படுத்தி பயன்படுத்த தொடங்கிவிட்டால், இந்திய மொழிகளில் தமிழுக்கென்று மிச்சமிருக்கும் பிறமொழி கலவா தனித்தமிழ் கலைச்சொல்லாக்கம் என்பது கிட்டத்தட்ட அழிந்துவிட பெருமளவு வாய்ப்புண்டு... தமிழ் தவிர மற்ற இந்திய மொழிகளில் கலைச்சொற்கள் பெரும்பாலும் சங்கதத்திலேயே உருவாக்கப்படுகின்றன..
      இவ்வெழுத்துக்கள் பெயர்களில் வருமாயின்:-
      1) ஸ,ஶ: பெரும்பாலான தமிழர்கள் 'ஸ'வையும் 'ச'வையும் ஒன்றாகத்தான் ஒலிக்கின்றனர். (ச்ச - தவிர). ஆகையால் 'ஸ'க்குப்பதிலாக 'ச' தனை பயன்படுத்திவிடலாம். 'ஸ்'க்கு பதிலாக 'சு' பயன்படுத்தலாம். ஆக: ஸ/ஶ -> ச
      2) ஜ: இதற்கு பல இடங்களில் 'ச' தனையே பயன்படுத்திவிடலாம். ga, da, dha, ba வரும் இடக்களிலெல்லாம் க, ட, த, ப ஆகியவற்றை இப்போது பயன்படுத்துவதில்லையா!? அதுபோலத்தான் ஜ->ச வும்.
      காட்டு: ஜகன்->சகன், ஜான்ஸன்->சான்சன்
      4) ஹ: சொல்லின் நடுவில்/இறுதியில வந்தால் 'க' போட்டுவிடலாம் (ராஹுல் -> இராகுல்). சொல்லின் முதலில் வந்தால் 'ஹ'வோடுவரும் உயிரொலியின் எழுத்தை பயன்படுத்திவிடலாம். (ஹாவேர்ட் -> ஆவேர்ட்). இது அப்பெயரை முற்றிலும் மாற்றிவிட்டால் ஃ , ஃக என எழுதலாம் (இராஃகுல், ஃஆவேர்ட்). ஆனால் இது இலக்கண மீறல் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
      5) ஶ்ரீ: இது 'ஶ்'யும் 'ரீ'யும் சேர்ந்த கிரந்தக்கூட்டெழுத்து. இதனை 'சிறீ' என வெகுகாலமாக இலங்கைத் தமிழர்கள் எழுதிவருகின்றனர். (சிறீலங்கா)
      6) ஷ: சொல்லின் முதலில் வந்தால் 'ச' வையும் சொல்லின் நடுவில் வந்தால் 'ச' அல்லது 'ட' வையும் தமிழர்கள் வெகுகாலம்கப் பயன்படுத்திவருகின்றனர்.
      காட்டு: ரோஷினி->ரோசினி, ஜோதிஷம்->சோதிடம்
      8) க்ஷ: க்ச, ட்ட, ட்ச
      இவை எவையும் சிலருக்கு உளநிறைவு ஏற்படுத்தாது. அவ்வாறான சிக்கலான பிறமொழிப் பெயருள்ளவர்கள், 'சீனர்'கள் செய்வதைப்போல, தங்கள் இயற்பெயரின் பொருளை/ஒலியைத் தழுவிய நல்ல தமிழ்ப் பெயர்களை இட்டுக்கொள்ளலாம்.

      கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஶ, க்ஷ ஆகிய எழுத்துக்களையும் https://www.unicode.org/charts/PDF/U11300.pdf இதில் வரும் ga, da, dha, ba ஆகியவற்றிற்கான கிரந்த எழுத்துக்களையும் சேர்த்துப் பயன்படுத்துங்கள்.
      நன்றி
      ....
      அன்புடையீர்!, இணையத்திலும் சமூக ஊடகத்திலும் எங்கும், தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள். ஏனெனில், பார்க்க=> https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
      பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை, ஆய்ந்து கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
      #தமிங்கிலம்தவிர்
      #தமிழெழுதிநிமிர்
      #தமிழிலேயேபகிர்
      #தமிழல்லவாஉயிர்
      #எதிர்ப்போரெனக்குமயிர்!!!!
      #வாழ்க #தமிழ்

      Delete

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...