Monday, November 13, 2023

வாழ்வெனும் சோலை

வாழ்வெனும் சோலை


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும். ம்ம்ம்.  

வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


நீங்கள் எனக்கே உடைமை.  

என் கனவோ உங்கள் கடமை.  இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கும் விடிந்திருக்கும்.  நீங்கள் எனக்கே உடைமை.  

என் கனவோ உங்கள் கடமை.  இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கு விடிந்திருக்கும். 

எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


நான் அருகே இருப்பேன்.  நாம் இன்னும் நெருங்கி இருப்போம்.  

இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.  

மணமாலை மாற்றிக்கொண்டோம் நாம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். இன்னும் நெருங்கிக்கொள்வோம். 

நான் அருகே இருப்பேன்.  

இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.  

மணமாலை மாற்றிக்கொண்டோம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். 

எந்தன் சிறுதேனும் உங்கள் சிறுபூவும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம்.  அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்! 

நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.  

எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம்.  அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்! 

நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.  

எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.


வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும். 

மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.

வாழ்வெனும் சோலை...


இவ்வளவு இனிமையான இசை கொண்ட 'சீவன் கி பகியா' என்ற.இந்திப் பாடலுக்கு காதுக்கு இனிய சொற்கள் (நமக்குப் பொருள் புரியாவிட்டாலும்) அமைத்து வரிகளும் எழுதி பாடலமைத்து இருக்கிறார்கள்.  சரி, அப்படி என்னதான் அந்த இந்தி வரிகளின் பொருளாக இருக்கும் என எனக்குள் ஒரே கேள்விகள்.  இருக்கவே இருக்கு கூகுள் மொழிபெயர்ப்பி.  அதிலிட்டுப் பார்த்துவிட்டேன்.  வந்த மொழிபெயர்ப்பை பட்டிட்டிங்கரிங் பண்ணி அப்பாடலின் சந்தத்துக்கு ஏற்ப பொருள் மாறாது சொற்களை அங்குமிங்கும் மாற்றியமைத்து மேலே நான் இட்டிருக்கும் கவிதைமை சமைத்துவிட்டேன்.  பாடலின் இசையுடன் பாடிப்பாருங்கள்.  எங்கேனும் இடறினால் அதைத் எனக்குத் தெருவியுங்கள். 


இந்தச் செயலால் எனக்குக் கிடைத்த பட்டறிவில் நான் உணர்ந்த சில செய்திகள்:-

  1. தமிழை முறைப்படி கற்காது ஆங்கில வழியிலேயே பாடங்களைக் கற்ற எனக்கே, தமிழ் இவ்வளவு ஞெகிழித்தனத்தை அளிக்கிறது என்றால் (கடந்த இரு நாட்களாக பத்துப் பதினைந்துமுறை, என்னால் சொற்களை மாற்றியமைத்து பொருளையும் சுவையையும் மெருகேற்ற முடிந்தது) , சிறிதேனும் ஆழமாகத் தமிழைக் கற்றவர்கள் இன்னும் மிளிர்வான பெருட்சுவை மிகாக கவிதையை எழுதிவிடுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
  2. இந்தியில் (நிறைய பாரசீகச் சொற்களும் இபாபாடலில் உளாளதால் இதனை உருது என்றுகூடச் சொல்லிவிடலாம்) இருந்த பாடலை கோபால்தாசு என்ன நீரசு என்பவர் எழுதியுள்ளார்.  இவர் பத்மசிறீ, பத்மவிபூசனம் போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளார்.  என்றாலும் அவர் எழுதியிருந்த இக்கவிதையில் சொற்சுவை இருக்கே தவிர பொருட்சுவை என்பது துளியும் இல்லை.  தமிழில் இப்படிப்பட்ட பாடல்வரிகளை டப்பாங்குத்துப் பாடல்களுகாகுத்தான் போடுவார்கள்.  ஆக அந்த இந்திக் கவிதையில் தரம் இல்லை என்பதே அடியேனின் கருத்து.  

Wednesday, November 8, 2023

மும்முடிச்சோழபுரம்

மும்முடிச்சோழபுரம்

நாகர்கோவில், வடிவீசுவரம் அழகம்மன் கோவிலில் உள்ள சிவன் கருவரையின் தெற்குச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள கல்வெட்டு.  - கன்னியாகுமரி கல்வெட்டுகள் தொகுதி 3. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை. 1972.  

யாரோ ஒருவர் கோவிலில் நாள்தோறும் பூசை செய்வதற்கு தேவையான பொருளுதவிக்காக, தோவாளை அருகே உள்ள பெரியகுளம் எனும் ஊரில் இரண்டு மா (0.46 ஏக்கர்) நிலத்தை தானமாகக் கொடுத்ததற்கான கல்வெட்டு.

இக்கல்வெட்டில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன:-
  1. பொறிக்கப்பட்ட ஆண்டு: கிபி 1488
  2. கல்வெட்டுக்கான ஓலை எழுதிய இடம்: 23ம் பண்ணையான திருவேங்கடமுடையார் வீடு, பொருந்தக்கரை, கல்லிடைக்குறிச்சி
  3. ஆவணப்படுத்திய பதிவாளர்: சுந்தரன் விக்கிரமன், கோட்டாறு
  4. நாகர்கோவிலின் அப்போதைய பெயர்: கோட்டாறு என்ற மும்முடிசோழபுரம் . ('தமிழகம் ஊரும் பேரும்'_ எனும் நூலில் இப்பகுதிக்கு மும்முடிச்சோழ நல்லூர் என்ற பெயர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்).  இதில் மும்முடிச்சோழன் என்பது இராசராசனையே குறிக்கும். இவர் கிபி 999ம் ஆண்டு நாஞ்சில் நாட்டைக் கையகப்படுத்தி கன்னியாகுமரிக்கும் இராசராசேச்சுரம் என்ற பெயரிட்டுள்ளார். மும்முடிசோழபுரம் போன்ற பெயர்கள் கொண்ட மற்ற ஊர்கள்: திண்டிவனம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சோழபுரம், ஆந்திராவிலுள்ள திருக்காளத்தி, குமரியிலுள்ள முட்டம் மற்றும் கடியப்பட்டினம், தஞ்சை அருகே உள்ள விண்ணணூர்ப்பட்டி.
  5. தோவாளையின் அப்போதைய பெயர்: அழகிய சொழநல்லூர்
  6. வடிவீசுவரத்தின் அப்போதைய பெயர்: வடிவினீச்சுரம்
  7. கோவிலின் இறைவனது அப்போதையப் பெயர்: வடிவினீச்சுரமுடைய நாயினார் (தற்போது: சுந்தரேசுவரன்)
  8. கோவிலின் இறைவியது அப்போதையப் பெயர்: அழகியமங்கை நாச்சியார் (தற்போது: அழகம்மன்)
  9. கருவறை: உண்ணாழி


Tuesday, November 7, 2023

தோய்க்வென்ம்பி

தோய்க்வென்ம்பி


என்ன அழகாகப் பாடுகிறார் திரு புவோங்ஙான்.  என்ன ஒரு எடுப்பான குரல் வளம்.  இவர் உலக அரங்கில் புகழ்பெற என் வாழ்த்துகள்.

இவர் பாடியிருக்கும் "தோய்க்வென்ம்பி..." என்ற அந்த முதல் பாடலை இங்கு தமிழில் அப்படியே எழுத்துப்பெயர்ப்பு செய்துள்ளேன்.  வியட்நாம் மொழி தெரிந்தவர்கள், அப்பாடலை மொழிபெயர்த்துப் பகிரவும்.

தோய்க்வென்ம்பி அங்சு மொன்னெம்தன்ங் திங்கு..

சன்காவங்து லூயி வங்வாய் கீயவன் மூசூயி..

திங்சில்ல தைங்லோயி திஙொங்ஙாயி திங்சாங் சோய்..

சோய் தாடாப்யொன் யௌவா சோ ஞௌவூடேனோ..

கோய் தௌ பங்லென் சேம் பன் தென்தஃம் ஐகும்..

பென்யௌ பூர்செய் நைசங்ஙை மைகக்ங் சான்யௌ..

சாகௌ தார்தூ பாசடூதெங் அனிலோர்ஙி..

கீதோழ்சேசிங் அங்னேயோ யூமிங்னே தன்லா..


சீன்யூடூந் துந்தூஞ்யோஞ்ய லா..

டூங் தோய் தேடேம் நைசோக்வில் லைம்பும்க்வாதீம்..

ஐம்டெம் தட் மூன்ம் கோடன் காங் சேங்மூங்..

ஞாஙையி தட்ந் ஞூடைங்ஙோய் தம்தேதோ...


தோயிதே ஊலோய் சூர்டேன் தன் நோய் மெங் ஏனோ..

ஓம் நைவூட்டம் ஙூய்ஙாய்ஙோங் தோய் டுங் சம் ஙைங்..

டோய்க்வாதங் சாலம் கங்போய் ஓய் சௌசீயே..

வா தோய்பூக் பங்க்வங்வீச்சு கைலங் தேத்தூ..

சொலாய் சங்காடோ தௌ தோயிதே மோட் மென்ங்..

பங்யீயு ஊக்மா டௌசீம்பௌ கன்னூச்சூய்மௌ..

தெங்கியு லம்மம் தைமோன் பேவ்பௌவ் மகிகோகி...

தௌ டெவ்ம்வன் அம் ஓமாங்ஙு எதெங்வாவ் தீயாந்தூ..


சீன்யூடூந் துந்தூஞ்யோஞ்ய லா..

டூங் தோய் தேடேம் நைசோக்வில் லைம்பும்க்வாதீம்..

ஐம்டெம் தட் மூன்ம் கோடன் காங் சேங்மூங்..

ஞாஙையி தட்ந் ஞூடைங்ஙோய் தம்தேதோ...


தோயிதே ஊலோய் சூர்டேன் தன் நோய் மெங் ஏனோ..

ஓம் நைவூட்டம் ஙூய்ஙாய்ஙோங் தோய் டுங் சம் ஙைங்..

டோய்க்வாதங் சாலம் கங்போய் ஓய் சௌசீயே..

வா தோய்பூக் பங்க்வங்வீச்சு கைலங் தேந்தூ..

சொலாய் சங்காடோ தௌ தோயிதே மோட் மென்ங்..

பங்யீயு ஊக்மா டௌசீம்பௌ கன்னூச்சூய்மௌ..

தெங்கியு லம்மம் தைமோன் பேவ்பௌவ் மகிகோகி...

தௌ டெவ்ம்வன் அம் ஓமாங்ஙு எதெங்வாவ் தீயாந்தூ..


தெங்கியு லம்மம் தைமோன் பேவ்பௌவ் மகிகோகி...

தௌ டெவ்ம்வன் அம் ஓமாங்ஙுயி எதெங்வாவ்... தீயாந்தூ..




Saturday, November 4, 2023

இந்தியப் பொருள்கள்

 இந்தியப் பொருள்கள்

"மெட்டீரியா இன்டிகா" (1826) - மரு. வைட்லா  ஐன்சுலே  மரு. வைட்லா  ஐன்சுலே  

  1. பகுதி1 - பிடியெப்பு கோப்பு
  2. பகுதி2 - பிடியெப்பு கோப்பு

மெட்டீரியா இன்டிகாவின் இரு பகுதிகளிலும் மரு. வைட்லா, அக்காலத்திய நாட்டு மருத்துவப் பொருள்கள் பற்றி குறிப்பெடுத்துள்ளார்.   ஒவ்வொரு மூலப்பொருளுக்கும் தமிழ், தெலுங்கு,  சங்கதம், அரபு, பாரசீகம், தக்கானி(உருது), இந்துத்தானி(உருது),  சிங்களம் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் என்ன பெயர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.  இதை சேகரிக்க இவர், தஞ்சை மன்னர் தொடங்கி, பல நாட்டு மருத்துவர்களிடமும் பொதுமக்களிடமும் வயலில் உழைக்கும் உழவர்களிடமும் பிணமெரிப்பவர்களிடமும் பேசிப்பழகி பல ஏடுகளையும் படித்துள்ளார்.  இடையிடையே அவருக்கு நேர்ந்தவைகளையும் அவரின் பட்டறிவுகளையும் விளக்கியுள்ளார்.

கலவை

கலவை

ஒன்பான்நச்சு

சேர்வை-1:

  1. இதளியம் (பாதரசம்)
  2. கந்தகம் (கெந்தி)
  3. பூரம் (ஆர்சினிக்-திரை-ஆக்சைடு)
  4. மனோசிலை (ஆர்சினிக்-டை-சல்பைடு)
  5. தாழகம் ([அரி]தாரம்) (ஆர்சினிக்-டிரை-சல்பைடு)
  6. வீரம் (பாதரச-குளோரைடு)
  7. இங்கிலிகம்/இலிங்கம் (பாதரச-சல்பைடு)
  8. இரசகற்பூரம் (நாப்தலின்)
  9. கார்முகில்?

சேர்வை-2:

  1. இதளியம் (சாதிலிங்கம்/சூதப்பாடாணம்/பாதரசம்)
  2. கந்தகம்
  3. பூரம் (வெள்ளைப்பாடாணம்) - (ஆர்சினிக்-திரை-ஆக்சைடு)
  4. மனோசிலை (சீலைப்பாடாணம்) (ஆர்சினிக்-டை-சல்பைடு)
  5. கௌரிப்பாடாணம் (ஆர்சினிக்-பென்டா-சல்பைடு)
  6. காரம் (சோடியம்-ஐதராக்சைடு)
  7. தொட்டிப்பாடாணம்?
  8. கச்சாலப்பாடாணம்?
  9. சங்குப்பாடாணம்?

சிலைகள்:

  1. பழநியாண்டவர்
  2. பூம்பாறை குழந்தை வேலப்பர்
  3. திருமாகறல் சுயம்புலிங்கம்
  4. திருச்செங்கோடு உமையொருபாகன்
  5. தேவிப்பட்டினம் நவக்கிரகம்

கடுசருக்கரை/சுடுசருக்கரை

பொருள்கள்:

  1. காவிச் செம்மண்
  2. கடுக்காய்
  3. நெல்லிக்காய்
  4. தான்றிக்காய்
  5. திப்பிலி
  6. கோழிப்பரல்?
  7. செஞ்சல்லியம்?/செஞ்சயம்?
  8. கொம்பரக்கு
  9. குலுகுலு சருக்கரை
  10. குந்திரிக்கம் [அ] பறங்கி சாம்பிராணி
  11. பலாப்பிசின்
  12. வில்வப்பிசின்
  13. சந்தணம்
  14. எள்நெய்
  15. ஆநெய்

சிலைகள்:

  1. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள்
  2. திருவனந்தபுரம் பத்துமநாபப் பெருமாள்
  3. சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலிலுள்ள திருவேங்கட விண்ணவர் எம்பெருமான்



தமிழம்பு

தமிழம்பு

சில நாட்களுக்கு முன், www.incometaxindiaefiling.gov.in வ.வ இணையதளத்தில் "ஒரு பணிவான வேண்டுகோள், ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர மற்ற இந்திய மொழிகளிலும் இத்தளத்தின் உள்ளடக்கத்தை கண்டிடும் வசதியை ஏற்படுத்திடுங்கள்" எனும் கோரிக்கையை தமிழிலும்  ஆங்கிலத்திலும் தனித்தனியாக பின்னூட்டமாக இட்டிருந்தேன்.   இன்று காலை வருமான வரித் துறையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது.  அதில் (ஆங்கிலத்தில்) பேசியவர், நான் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கத்தைக் கேட்டார்! எளிமையாக வினக்கினேன்.  நான் விளக்கவிளக்க அவர் தட்டச்சு செய்வது என் காதில் கேட்டது.  பின்னர் "உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இதனை அதற்கான துறைக்கு அனுப்பி வைக்கிறேன்" எனக்கூறினார்.
பொதுவாகவே அரசு அல்லது அரசுசார்ந்த எந்தவொரு இணையதளத்திற்கு செல்ல நேர்ந்தாலும் நான் ௸ பின்னூட்டத்தை இட்டிடுவது வழக்கம்.  கடந்த பல ஆண்டுகளாகவே இதனைச் செய்துவருகிறேன். இதுவரைக்கும் எவரும் கண்டுகொண்டதில்லை.  இன்று நடந்தது எனக்கு புதிது!..
நண்பர்களே, உங்களையும் இதுபோன்ற பின்னூட்டக்களை இட்டிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்.  அவர்கள் செவிமடுப்பார்களா மாட்டார்களா என்ற கோணத்தில் நோக்குவதைவிட, "வாய்பிருக்கும் இடுக்குகள் வழியாக எல்லாம் அம்பை எய்துகொண்டே இருப்போம், எதாவது ஒரு அம்பாவது இலக்கை தாக்கிவிடாதா என்ற குருட்டு நம்பிக்கையில். இதில் நமக்கு பெருத்த செலவேதும் இல்லையே" என எண்ணி இயங்கலாம். 
நம் ஒரே இலக்கு... "தமிழை" முழுவதுமாக பொதுப்பயனாக்குவதே!!!


பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...