ஊரும் சிறப்பு உற்பத்திப்பொருளும்
உங்கள் ஊரானது ஏதாவது ஒரு உற்பத்திப் பொருளுக்குப் புகழ்பெற்றதாக இருக்கும். அது இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு பொருளாகவோ ஒரு உணவுப்பொருளாகவோ வேறொரு பொதுப் பயன்பாட்டுப் பொருளாகவோ இருக்கும். பல ஆண்டுகளாக அப்பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் உழைப்பையும் உற்பத்தி நேர்த்தியையும் அப்பொருளின் தரத்தில் ஏற்றியிருப்பதால், அப்பொருளானது மக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் தகவல்கள் பல இடங்களிலிருந்து சேகரித்தது. இதில் தவறுகளோ விடுபடுதலகளோ இருந்தால் அவற்றை பின்னூட்டமாகத் தெரிவியுணக்கள்.
🌐 - புவிசார் குறியீடு பெற்றவை
உணவு வகைகள்
| அம்பாசமுத்திரம் | கை முறுக்கு |
| அய்யம்பேட்டை | அச்சுவெல்லம் |
| அரியலூர் | கொத்தமல்லி முந்திரி |
| அருப்புக்கோட்டை | பக்கோடா பால் பண் முட்டாசு சேவ் |
| ஆத்தூர் | வெற்றிலை 🌐 |
| ஆம்பூர் | பிரியாணி |
| ஆலங்குடி | வேர்க்கடலை |
| ஆற்காடு | மக்கன் பேடா பிரியாணி கிசேலி |
| இராசிபுரம் | நெய் |
| இராமநாதபுரம் | மிளகாய் கணவாய் மீன் கோலா உருண்டை இறால் ஊறுகாய் வட்டலப்பம் |
| ஈத்தாமொழி | நெட்டை தென்னை வகை 🌐 |
| ஈரோடு | மஞ்சள் 🌐 |
| உசிலம்பட்டி | பிஸ்கட் |
| உடன்குடி | கருப்பட்டி 🌐 |
| ஊட்டி | வருக்கி 🌐 காரட் காவிக்கண்டு |
| ஊத்துக்குளி | வெண்ணை |
| ஏற்காடு | காப்பி மிளகு ஆரஞ்சு |
| ஒட்டன்சத்திரம் | காய்கறி |
| கடலூர் | பலாப்பழம் முந்திரி வேர்க்கடலை மீன் |
| கடையநல்லூர் | தேங்காய் சோற்று பிரியாணி |
| கம்பம் | திராட்சை |
| கம்பம் | பன்னீர் திராட்சை 🌐 |
| கரூர் | தேங்காய் மிட்டாய் |
| கல்லிடைக்குறுச்சி | அப்பளம் |
| கன்னியாகுமரி | மீன்குழம்பு தேங்காய் சோறு |
| காஞ்சீபுரம் | இட்லி |
| காயல்பட்டினம் | கஞ்சி மாசி வாடா |
| காரைக்கால் | குலாப் சாமுன் |
| காரைக்குடி | செட்டிநாட்டு சமையல் பணியாரம் மிளகு கோழிக்கறி வறுவல் |
| கிருஷ்ணகிரி | மாம்பழம் புட்டு |
| கீழக்கரை | நோதல் அல்வா |
| குடியாத்தம் | நுங்கு இளநீர் |
| குமரி மாவட்டம் | கிராம்பு 🌐 செம்மட்டி வெற்றிலை 🌐 தேன்மட்டி வெற்றிலை 🌐 மலைமட்டி வெற்றிலை 🌐 |
| கும்பகோணம் | டிகிரி காபி வெற்றிலை பூரி பாசந்தி |
| குழித்துறை | முந்திரி |
| கூத்தாநல்லூர் | தம்ருட் |
| கொடைக்கானல் | மலைப் பூண்டு 🌐 பேரிக்காய் காய்கறி காவிக்கண்டு பிளம் |
| கோயம்பத்தூர் | தொப்பை சட்னி கசாயம் மைசூர் பாகு காளான் |
| கோவில்பட்டி | கடலை மிட்டாய் 🌐 இஞ்சிமறப்பா அச்சுவெல்லம் |
| சங்கரன்கொவில் | ஆட்டுக்கறி பிரியானி |
| சாத்தூர் | காராச்சேவு வெள்ளரிப்பிஞ்சு மிளகாய் கருப்பட்டி மிட்டாய் இஞ்சிமறப்பா |
| சாயல்குடி | கருப்பட்டிக் காப்பி |
| சிதம்பரம் | கொத்சு |
| சிம்மக்கல் | கறிதோசை |
| சிறுமலை | மலை வாழைப்பழம் 🌐 |
| சுசீந்திரம் | அனுமார் வடை |
| சுவாமிமலை | கொய்யாப் பழம் |
| செங்கோட்டை | பரோட்டா-கோழி குருமா நாட்டுக்கோழி வறுவல் |
| செஞ்சி | முட்டை மிட்டாய் |
| சென்னை | வடை கறி |
| சேலம் | மாம்பழம் 🌐 தட்டுவடை தயிர் வடை செவ்வரிசி 🌐 |
| சோழவந்தான் | வெற்றிலை 🌐 |
| தர்மபுரி | புளி |
| திண்டுக்கல் | பிரியாணி |
| திருச்சி | வாழைப்பழம் பாதுசா |
| திருச்செந்தூர் | சுத்துமிட்டாய் |
| திருநெல்வேலி | அல்வா சொதி பழக்கூழ் திருப்பாகம் |
| திருவண்ணாமலை | அதிரசம் |
| திருவரங்கம் | அக்காரவடிசல் |
| திருவானைக்காவல் | நெய் தோசை |
| திருவில்லிபுத்தூர் | பால்கோவா 🌐 |
| திருவையாறு | அசோகா |
| தூத்துக்குடி | மக்ரூன் உப்பு கொத்துபரோட்டா மசுகோத் அல்வா நெய்மிட்டாய் |
| தென்காசி | சூரியகாந்தி |
| நடுக்கடை | இடியாப்பம்-ஆட்டுக்கால் பாயா |
| நத்தம் | மாம்பழம் புளி தேங்காய் |
| நாகப்பட்டினம் | கோலா மீன் மீன் குழம்பு |
| நாகர்கோவில் | எத்தங்க்காய் வறுவல் முந்திரிக்கொத்து அடை பாயாசம் அடை அவியல் |
| நாமக்கல் | முட்டை பரோட்டா |
| நீடாமங்கலம் | பால்திரட்டு |
| நீலகிரி | உருளைக்கிழங்கு |
| நீலகிரி மாவட்டம் | தேயிலை 🌐 |
| நெய்காரப்பட்டி | நாட்டு வெல்லம் |
| பணகுடி | பதநீர் |
| பண்ருட்டி | பலாப்பழம் 🌐 முந்திரி 🌐 முந்திரி சாம்பார் |
| பரமக்குடி | கோழிக்கறி சால்னா |
| பழனி | பஞ்சாமிர்தம் 🌐 |
| பள்ளிப்பாளையம் | கோழிக்கறி |
| புதுக்கோட்டை | முட்டைமாசு |
| புளியன்குடி | எலுமிச்சை |
| பொள்ளாச்சி | தேங்காய் இளநீர் வெல்லம் |
| போடிநாயக்கனூர் | ஏலக்காய் |
| மணப்பாறை | அரிசி முறுக்கு 🌐 |
| மதுரை | சிகர்தண்டா பருத்திப்பால் கறி தோசை மல்லிகைப்பூ இட்லி பைரி (முள்ளுமுருங்கைப் பூரி) |
| மாயவரம் | கருவாடு |
| மார்த்தாண்டம் | தேன் 🌐 |
| மைலாடுதுறை | பில்டர் காப்பி மசால் வடை |
| வாணியம்பாடி | பிரியாணி |
| வால்பாறை | தேயிலை |
| விருதுநகர் | எண்ணெய் பரோட்டா |
| விருபாட்சி | மலை வாழைப்பழம் 🌐 |
| வேதாரண்யம் | உப்பு |
வியாசர்பாடி - மோலேசா/மோலெட்சங்
சிறப்புப் பொருட்கள்
| அரியலூர் | சுண்ணாம்புக்கல் சீமைக்காரை(சிமெந்து) |
| அரும்பாவூர் | மரச்சிலைகள் 🌐 |
| ஆதங்குடி | தரை ஓடு பித்தளை பாத்திரங்கள் |
| ஆரணி | பட்டு 🌐 |
| இராசபாளையம் | நாய் |
| ஈரோடு | துணி |
| உறையூர் | சுருட்டு |
| கடலூர் | கொலு பொம்மைகள் |
| கரூர் | கொசுவலை போர்வை நார்த்துணி(இலெனின்) |
| கன்னியாகுமரி | சிப்பி அணிகலன்கள் |
| காங்கேயம் | காளை |
| காஞ்சிபுரம் | பட்டு 🌐 |
| காரைக்கால் | முத்து |
| காரைக்குடி | கண்டாங்கி சேலை கடுமண் |
| கும்பகோணம் | பட்டு வெண்கலப் பாத்திரம் |
| கொடைக்கானல் | இயூகலிப்டசு தைலம் |
| கோயம்பத்தூர் | ஈரமாவாட்டிப் பொறி 🌐 கோரா பருத்திப் புடவை 🌐 இயூகலிப்டசு தைலம் |
| சடேரி | நாமக்கட்டி/திருநாமம் 🌐 |
| சத்தியமங்கலம் | மூங்கில் கூடைகள் |
| சிவகங்கை மாவட்டம் | செட்டநாடு கொட்டான் (பனையோலை கூடை) 🌐 |
| சிவகாசி | வெடி, தீப்பெட்டி |
| சின்னாளப்பட்டி | பட்டு சுங்குடி சேலை |
| சுவாமிமலை | வெண்கலச்சிலை 🌐 |
| செயங்கொண்டம் | கைத்தறிப் பட்டு பருத்தி ஆடைகள் |
| சேலம் | துருவேறா-எஃகு(எவர்சில்வர்) வெண்பட்டு 🌐 |
| தஞ்சாவூர | தலையாட்டி பொம்மை 🌐 கதம்பம் ஓவியத்தட்டு 🌐 வரைபடங்கள் 🌐 வீணை 🌐 நெட்டி கைவேலைப்பாடு 🌐 |
| திண்டுக்கல் | பூட்டு 🌐 புகையிலை |
| திருச்சி | சுருட்டு |
| திருநெல்வேலி | செடிபுட்டா சேலை 🌐 |
| திருபுவனம் | பட்டு சேலை 🌐 |
| திருப்பாச்சி | அரிவாள் |
| திருப்பூர் | உள்ளாடை டி-சட்டை |
| துறையுர் | கைத்தறி தங்க நகை |
| தைக்கல் | பிரம்புப் பொருள்கள் 🌐 |
| நாகர்கோவில் | கோவில்நகை 🌐 |
| நாகூர் | குல்லா உலுங்கி |
| நாச்சியார்கோவில் | கோவில் குத்துவிளக்கு 🌐 |
| நீலகிரி | இயூகலிப்டசு தைலம் |
| நீலகிரி மாவட்டம் | புக்கூர் (தோதர் பூப்பின்னல்) 🌐 |
| நெகமம் | பருத்தி சேலை 🌐 |
| பணகுடி | செங்கல் |
| பத்தமடை | பாய் 🌐 |
| பரமகுடி | பட்டு சேலை |
| பவானி | சமுக்காளம் 🌐 |
| மதுரை | மல்லிகை 🌐 மருக்கொழுந்து சுங்குடி சேலை 🌐 |
| மாமல்லபுரம் | கற்சிலை 🌐 |
| மானாமதுரை | குண்டு மல்லிகை கடம் மண்பாண்டம் 🌐 |
| மேட்டுர் | துணி |
| மைலாடி | கற்சிலை 🌐 |
| மைலாடுதுறை | தங்க நகை |
| வந்தவாசி | பாய் |
| வாலாசாபேட்டை | தெரிகாட்டன் மூங்கில் பொருட்கள் |