Monday, December 25, 2023
ஐந்தாம் தமிழ்
Sunday, December 24, 2023
நிகண்டு
நிகண்டு
'நிகண்டு' என்ற சொல்லை சில இடங்களில் கேட்டிருப்போம். நிகண்டும் அகராதியும் ஒன்றா? இன்று நாம் பயன்படுத்தும் அகராதிகளானவை தமிழ் சொற்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்தும் திசைச் சொற்களுக்கும் சுருக்கமாக ஒரு பொருளையும் மாற்றுச் சொற்களையும் தந்திடும் வண்ணமாக அமைந்திருக்கிறது. ஆனால் நிகண்டுகள் இதிலிருந்து சற்றே வேறுபட்டு, ஒவ்வொரு சொற்களுக்குமான பொருளையோ மாற்றுச் சொற்களின் தொகுப்பையோ ஒரு செய்யுள் வடிவில் அளித்திடும் வண்ணத்தில் அமைந்திருக்கிறது. இதில் பலநேரம் தமிழ் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக சங்கதச் சொற்களையும் சங்கதச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களாக தமிழ்ச் சொற்களையும் அளித்திருப்பர். இச்சொற்களின் பட்டியல்கள் பெரும்பான்மையாக கடவுளர் பெயர்கள், மாந்தர் பெயர்கள், விலங்கினப் பெயர்கள், மரப்பெயர்கள், இடப்பெயர்கள் பல்பொருட் பெயர்கள், செயற்கைவடிவப் பெயர்கள், பண்புப் பெயர்கள், செயற் பெயர்கள், ஒலிப்பெயர்கள், ஒருசொல் பல்பொருள் பெயர்கள் ஆகிய தொகுதிகளைக் கொண்டதாக அமைகின்றன. தொல்காப்பியத்தில் சிலபல சொற்களுக்கு விக்கம் கூறப்பட்டுள்ளன. இவைகள் உரிச்சொல் பனுவல் என அழைக்கப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்கு விளக்கம் அளித்த முதல் ஏடாகத் திகழ்வது திவாகர நிகண்டு. தமிழில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நிகண்டுவகை நூல்கள் அறியப்பட்டு அச்சிலும் ஏறியுள்ளன. அவற்றுள் சில இங்கே:01} திவாகரம் - 6ம் நூஆ - சேந்தன் திவாகரர் - 12 தொகுதிகள் - 112518 நூற்பாக்கள் - 9500 சொற்கள்
02} பிங்கலம்/பிங்கலந்தை - 9ம் நூஆ - பிங்கலர் - 4121 நூற்பாக்கள் - 14700 சொற்கள்
03} உரிச்சொல் நிகண்டு - 11/17ம் நூஆ - காங்கேயர் - 12 தொகுதிகள் - 285 வெண்பாக்கள் - 3200 சொற்கள்
04} கயதரம்/கெயாதரம் - 15ம் நூஆ - கெயதாரர் - 566 கலித்துறை செய்யுள்கள் - 11350 சொற்கள்
05} அகராதி - 1594 - இரேவணசித்தர் - 1301 நூற்பாக்கள் - அகர வரிசையில் இயற்றப்பட்ட முதல் நிகண்டு இதுவே
06} சூடாமணி - 10/16ம் நூஆ - வீரை மண்டலப் புருடர் - 12 தொகுதிகள் - 1187 விருத்தப்பாக்கள் - 1575 சொற்கள்
07} சூத்திரவகராதி - 1594 - புலியூர் சிதம்பர ரேவண சித்தர் - 3334 நூற்பாக்கள்
08} கைலாசம்/சூளாமணி - 16ம் நூஆ - கைலாசம் - 506 நூற்பாக்கள் - 15000 சொற்கள்
09} ஆசிரியம் - 17ம் நூஆ - ஆண்டிப் புலவர் - 11 தொகுதிகள் - 199 ஆசிரியவிருத்தச் செய்யுள்கள் - 12000 சொற்கள்
10} வடமலை/பல்பொருட்சூடாமணி - 17ம் நூஆ - ஈசுவர பாரதி - 1452 நூற்பாக்கள் - அமரகோசம் எனும் சங்கத நூலை பின்பற்றி இயற்றப்பட்டது
11} தமிழ்-போர்த்துகேய அகராதி - 17ம் நூஆ - ஆந்தரிக் அடிகளார் - ? - இந்த ஏடு இதுவரை கிடைக்கவில்லை
12} சதுரகராதி - 1732 - வீரமாமுனிவர் - 12000 சொற்கள்
13} அரும்பொருள் விளக்கம் - 1763 - அருமருந்தேய தேசிகர் - 740 விருத்தப்பாக்கள் - 3200 சொற்கள்
14} பொதிகை - 18ம் நூஆ - சாமிநாதக் கவிராயர் - 496 விருத்தப்பாக்களும் 2228 நூற்பாக்களும் மொத்தம் 2326 செய்யுள்கள் - 14500 சொற்கள் - இது எதுகை அகர வரிசையில் அடுக்கப்பட்டுள்ளது
16} உசிதசூடாமணி - 1894 - சிதம்பரக் கவிராயர் - 184 ஆசிரிய விருத்தப்பாக்கள்
17} நாமதீபம் - 19ம் நூஆ - சிவசுப்பிரமணியக் கவிராயர் - 808 வெண்பாக்கள் - 1200 சொற்கள்
18} பொருட்டொகை - 19ம் நூஆ - சுப்பிரமணிய பாரதி - 1000 நூற்பாக்கள் - 1000 சொற்கள்
19} நாநார்த்த தீபிகை - 1850 - முத்துசாமிக் கவிராயர் - 1102 விருத்தப்பாக்கள் - 5432 சொற்கள் - நிறைய சங்கதச் சொற்களுக்கு பொருள் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
20} கந்தசுவாமியம் - 1844 - _சுப்பிரமணிய தேசிகர்_ - 2743 நூற்பாக்கள்
21} விரிவு - 1860 - அருணாச்சல நாவலர் - 1036 விருத்தப்பாக்கள்
22} சித்தாமணி - 1874 - யாழ் வைத்தியலிங்கம் - 400 விருத்தப்பாக்கள்
23} அபிதான மணிமாலை - 1878 - திருவம்பலத்து இன்னமுதம் கோபாலசாமி - 2425 நூற்பாக்கள்
24} வேதகிரியர் சூடாமணி - 19ம் நூஆ - வேதகிரி - 11 தொகுதிகள் - 583 விருத்தப்பாக்கள்
25} நவமணிக்காரிகை - 19ம் நூஆ - அரசஞ் சண்முகனார் - ? - ?
26} தமிழுரிச்சொற் பனுவல் - 19ம் நூஆ - கவிராச இராம சுப்பிரமணிய நாவலர் - ? - ?
27} நீரரர் - 1984 - ஈழத்துப் பூராடனார் செலவராசகோபால் - 80 செய்யுள்கள்
28} மஞ்சிகன் ஐந்திண - ? மஞ்சிகன் - 122 நூற்பாக்கள்.- 122 சொற்கள் (மரஞ்செடிகொடிப் பெயர்கள்)
29} போகர் அட்டவணை - ? - போகர் - 116 சொற்கள்
மற்ற நிகண்டுகளான பொதியநிகண்டு, ஔவைநிகண்டு போன்றவற்றின் குறிப்புகள் மட்டும்தான் கிடைக்கின்றன.
Saturday, December 9, 2023
ஆந்திரிக் ஆடிகளார்
ஆந்திரிக் ஆடிகளார்
இயேசுசபையைச் செர்ந்த புனித சவேரியாரின் உதவியாளராக இந்திய நிலப்பரப்புக்கு கிறித்துவ சமயம் பரப்ப வந்த ஆந்தரிக் ஆந்தரிக்கசு எனும் போர்த்துக்கேயர், 1546 இயேசுசபையினர் 'மதுரை சமையத் திட்டம்' என்ற ஒன்று வகுக்கப்பட்டதுக்கு ஏற்ப தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார். கூடிய விரைவில் தமிழ் மொழியைக் கற்றிடவேண்டும் என்பது அவருக்கு புனித சவேரியார் இட்ட கட்டளை. 1548ல் புனித இலொயோலா இஞ்ஞாசிக்கு இவர் எழுதிய மடலில், தான் எவ்வாறு தமிழ் மொழியை விரைவாகக் கற்கிறேன் என மகிழ்ச்சிபோங்க விரிவாக குறிப்பிட்டுள்ளார். 1578-86களில் தம்பிரான் வணக்கம், கிறித்தியானி வணக்கம், அடியார் வரலாறு, மலபார் இலக்கணம் மற்றும் தமிழ்-போர்துகேய அகராதி ஆகிய இரு 16-பக்க தமிழ் ஏடுகளை எழுதி கொல்லத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.
தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் அச்சிலேறிய முதல் ஏடுகள் இவையே. இதற்கான தாள்கள் சீனத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் ஆவணங்களை எழுதுவதற்கு பனை ஓலையும் செப்புத்தகிடையும் கல்லையும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தனர். இதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் மொழி வழக்கானது, இன்னும் முழுமையான தனி அடையாளம் பெறாத அன்றைய மலையாளமான, மலபார் தமிழ் என 'தம்பிரான் வணக்கத்தில்' குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தனது பிற்கால வாழ்க்கை முழுவதும் தூத்துக்குடி மாவட்டத்திலேயே சமயப் பணிக்காகச் செலவழித்துள்ளார். அப்பகுதியில் வாழ்ந்த மீனவ மக்களையும் முத்துக்குளிப்பவர்களையும் கிறித்துவ சமையத்துக்கு அறிமுகப்படுத்தியதற்கு இவருக்குப் பெரும்பங்கு உண்டு. 'ஆந்திரிக் ஆடிகளார்' என்ற பெயரில் கிறித்துவர்களிடத்தில் மட்டுமல்லாது பிற சமயத்தினரிடத்தும் பெருமதிப்பு பெற்றிருந்தார். தென் தமிழகத்தில் மட்டும் 58 ஆண்டுகள் வாழ்ந்துவந்த இவர், தனது 80ஆவது அகவையில் (1600ல்) புன்னைக்காயல் எனும் ஊரில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்தபோது, அப்பகுதியில் வாழ்ந்த அனைந்து சமயத்து மக்களும் காயல்பட்டினத்து இசுலாமியர்களும் துயரத்தில் கடைகளை அடைத்து இரு நாள்களாக உண்ணாநோன்பிருந்தனர் என 1601 ஆண்டுக்கான இயேசு சபை ஆண்டு மலர் தெரிவிக்கிறது. அவரின் கல்லறையானது தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் உள்ளது.
தமிழில் முதல் ஏடுகளை அச்சிட்டு வெளியிட்டதால் தமிழ் அச்சுத்துறையின் தந்தை என கருதப்படுதிறார். தமிழில் முதல் உரைநடைகளை எழுதியவர் எனவும் இவர் கருதப்படுகிறார்.
கல்வியின் தரம்
கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில் நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...

-
அன்புத் தமிழர்களே!! நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது!! நீங்கள் இடும் கருத்துகளை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துகளில் மட்டுமே ...
-
நம் உறவுகள்
-
தோடர் மொழி நீலமலைத்தொடரில் ஊட்டி அருகே வாழ்ந்துவரும் தோடர்களின் மொழியின் மேல் பற்பல மொழியியலாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப்போல எனக்கும் ஒர்...