மொழிசார் அரசியலும் உண்மையும் உரிமையும் அறிவோம்
எந்த நாட்டின் அடிப்படை உரிமைகளிலும் 'மொழிநிகர்மை உரிமை' என்பதானது இடம்பெற்றிருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்பு ஆகும். ஆனால், இந்திய அரசமைப்புச்சட்டத்தில் "இந்தியனின் அடிப்படை உரிமைகள்" எனும் முதன்மையான பகுதியின் கீழ்,௨} இனம்
௩} சாதி
௪} பால்
௫} தலைமுறை
௬} பிறந்த இடம்
௭} வாழுமிடம்,
ஆகிய ஏழு கூறுகளின் அடிப்படையில், நாட்டு மக்களுக்கு இடையேயான "நிகர்மை உரிமை" என்பதானது கீழ்க்காணும் தலையாய சட்டப்பிரிவுகளால் வரையறுக்கப்படுகின்றன:-
௧} "சட்டத்தின் நிகர்மைப்பார்வை" எனும் 14ம் சட்டப்பிரிவு
௨} "வேற்றுமைகளை தடைசெய்தல்" எனும் 15ம் சட்டப்பிரிவு
௩} "(பொது பணிகளில்) நிகர்மையான வாய்ப்பு" எனும் 16ம் சட்டப்பிரிவும்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை நிகர்மைக் கூறுகளின் உரிமை பட்டியலில் "மொழி"யானது ஒரு உரிமையாகச் சேர்க்கப்படாததை கவனியுங்கள். இதன் வாயிலாக மொழி நிகர்மை அல்லது மொழி உரிமையைப் பொருத்தவரையில், நம் நாட்டின் அரசமைப்புச்சட்டமானது, அடிப்படையில் "வழு" கொண்டதாகவே காணப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு "அடிப்படை உரிமை" விளக்கம் தான் ஒரு இந்திய குடிமக்கள் யார் யார் என்பதையும் அவர்களுக்கான உரிமைகள் என்னென்ன என்பதையும் விளக்குகிறது.
காட்டாக: ஒருவரோ ஒரு அரசோ, உங்களை மொழிரீதியாக பாரபட்சமாக கையாண்டால், உங்களை பாதுகாக்க நம்நாட்டு அரசுச்சட்டத்தில் எந்த அடிப்படை உரிமையும் இல்லை. கேவலம்!..
ஆக, மேற்குறிப்பிட்ட 14, 15, 16, 120, 343-348, 351 ஆகிய அரசமைப்புச் சட்டப்பிரிவுகளானவை, நாடுதழுவிய அளவில் அனைத்துத் துறைகளிலும் சீரான இந்தி மொழிப் பரப்பலையும் பயன்பாட்டையும் படிப்படியான திணிப்பையும் உறுதி செய்து இந்தி மொழியை சங்கதம் மற்றும் இன்னபிற இந்திய மொழிகளிலிருக்கும் வங்களைப் பயன்படுத்தி வளப்படுத்தி அதனை 'நாட்டுப் பொது (தொடர்பு) மொழி' ஆக்குவதை நோக்கி நகர்த்தும் திட்டத்துக்கு மிகத்தெளிவாக வழிவகுக்கிறது. இவற்றுள் 14, 15, 16 ஆகிய சட்டப்பிரிவுகளில் "மொழி" என்பது குறிப்பிடப்படாததே, பின்வரும் சட்டப்பிரிவுகளில் உள்ள 'நிகரற்ற மொழிக் கொள்கைக்கு' வழிவகுக்கிறது. இது இந்தியாவின் பன்மைத்தன்மைக்கு முற்றிலும் எதிரான சட்டங்களாகும்.
தில்லியிலிருந்து நாட்டை ஆளும் எந்தவொரு அரசியல் கட்சியும் இச்சட்டங்களில் மொழிநிகர்மைக்காக மாற்றங்களைச் செய்யும் என எதிர்பார்ப்பது வீண்வேலை. இரும்புக்கோட்டை கட்டிக்கொண்டு உள்ளிருக்கும் எட்டாக்கனியாகவும் அந்த சட்டப்பிரிவுகள் உள்ளன. இந்த சட்டப்பிரிவுகளை சிறிதேனும் தொடவேண்டும் என்றாலும் கூட, அதற்கு நாடுதழுவிய அளவிலு ஒரு மிகப்பெரும் புரட்சியே வெடிக்க வேண்டியிருக்கும். மிகப்பெரிய அரசியல் அழுத்தம் தேவையிருக்கும். இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் சேர்ந்து ஒன்றிய அரசோடு ஒத்துழையாமையை மேற்கொள்ளவேண்டும். "மொழி நிகர்மை"யைப் பொறுத்தவரையில், நமது அரசமைப்புச்சட்டமானது, மிகமோசமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 'மொழி நிகர்மை' என்ற ஒன்று இல்லாமல் விடுதலை இந்தியாவில், முழு "நிகர்மை" என்பது, முழுமை பெறவே செய்யாது. மொத்த 'நிகர்மை"க்கும், "மொழி நிகர்மை"யே தலையாயதாகும்.
ஆதலால், நமக்கான அடிப்படைத் தேவையானது, "நிகர்மை உரிமை" பகுதியில் இருக்கும் பட்டியலில் கட்டாயம் "மொழி"யையும் ஓரு அடிப்படை உரிமையாகச் சேர்த்திடல், என்பதாகவே இருக்கவேண்டும். மொழியை இப்பட்டியலில் சேர்த்துவிடாதவண்ணம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கிய வரைவுக்குழுவில் இருந்த உறுப்பினர்கள் (அம்பேட்கார் உட்பட), மிகவும் நயவஞ்சகத்தோடே கவனமாக இருந்துள்ளனர். அரசமைப்புச்சட்டத்தை வரையறுக்க 1948ம் ஆண்டிலிருந்து 1950ம் ஆண்டு வரை நடந்த கலந்தாய்வுகளில், இந்நியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சென்ற சார்பாளர்களில் ஒருவர்கூட இதற்கு எதிராக குரல் எழுப்பவில்லை, என்பது வியப்பளிக்கும் ஒன்றாகும். மொத்ததில் மிக மோசம்!!
மொழியளவில் இந்தியும் மற்றமொழிகளைப்பொல் கபடமற்றதே. ஆனால், இந்தியின் பெயரால் செய்யப்படும் அரசியலானது, கபடங்களும் சுழ்ச்சிகளும் ஆதிக்கமும் ஆணவமும் நிறைந்தது.
இந்தி மொழியானது இந்திய நாட்டின் பொதுமொழி (தேசியமொழி) அல்ல - குசராத்து உயர் நீதிமன்றம்.
இந்தியாவில், விலங்கினங்களிடையே 'நாய்'கள் எண்ணிக்கையில் ஒரளவிற்கு மிகுதியாக இருக்கிறது என வைத்துக்கொண்டதால், 'குரைப்பு' என்ப்து இந்திய விலங்குகளின் நாட்டுப்பொதுவான இணைப்பு மொழியாக அறிவிக்கப்பட்டு, இனி, பூனைகள், கழுதைகள், மான்கள், மாடுகள், யானைகள், மீன்கள், பறவைகள், எலிகள், புலிகள், தால்பின்கள், சிறுத்தைகள், எருமைகள் ஆகிய அனைத்து விலங்குகளும் இனி 'குரைக்க'வும் கற்றுக்கொள்ளவேண்டும்.
௧} [கிழக்கு]பாகிசுத்தான் (வங்காளதேசம்)
௨} இலங்கை (ஈழம்)
௩} கேடலோனியா (சுபெயின்).
இந்தியை உயிரோடு இருக்கச்செய்ய ஒன்றிய அரசு பெரியதொகை செலவிடுகிறது. இதில் ஓரு துளியளவுகூட மற்ற மொழிகளுக்கு செலவிடப்படுவதில்லை.
ஒன்றிய அரசானது, ஒற்றை மொழியின் வளர்ச்சிக்காக செலவிடுவதை விடுத்து, அத்தொகையை மொழிபெயர்ப்புத் தோழிநுட்பத்திற்காக செலவிடவேண்டும்.
மொழி என்பது ஒரு தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, அது அம்மொழி பேசுபவரின் பண்பாடுகளை சுமந்துசெல்லும் ஊர்தியும் கூட.
இக்கட்டுரையானது, ஒரு தனிப்பட்ட மொழியின் மீதான வெறுப்பின் வெளிப்பாடல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நான் ஒரு மொழியியல் ஆர்வலர். ஞாலத்திலுள்ள பல மொழிகளின் வளங்களைக் கண்டு வியந்துகொண்டிருப்பவன். பன்மைத்தன்மை, அதிலும் மொழிகளின் பன்மை தான் நம் துணைக்கண்டத்தின் அழகே. ஆனால், இங்கு பலரும் அரசியலாளர்களும் அமைப்புகளும் ஏன் நம் அரசமைப்புசட்டத்தின் சில பகுதிகளுமே இப்பன்மைத்தன்மைக்கு, குறிப்பாக மொழிப்பன்மைக்கு, நேரடியான எதிர்ப்புக் கொள்கையைக் கொண்டுள்ளன.
எல்லாவற்றிலும் 'பொது', 'நாட்டுப்பொது' என்பதைத் திணித்து மக்களை 'தன்னடையாளம்-துறந்த' ஓர் நிறத்தவர்களாக மாற்ற முனைந்திட வேண்டாம். ஒரு மொழியை முன்னெடுப்பது என்பது நாட்டுமக்கள் ஒற்றுமைக்கோ ஒருமைப்பாடுக்கோ அல்ல, மாறாக நாட்டு மக்களின் தனிப்பட்ட மொழி அடையாளங்களின்பால் தாழ்வுணர்வு ஏற்படச்செய்து காலப்போக்கில் அவ்வடையாளங்களற்ற ஓர் நிறத்தவர்களாக மாற்றிடவே ஆகும். "இந்தியை யார் திணிக்கிறாரகள்? அதனை துணைமொழியாகக் கற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தியை முன்னெடுக்கத்தானே செய்கிறோம்.." என பலர் கூறக் கேட்டிருப்பீர்கள் தானே. விழித்துக்கொள்ளுங்கள், 'முன்னெடுப்பு' என்பது வெல்லப்பாகில் தோய்த்த 'திணிப்பு' தான்...
ஆக, எதைக் கற்பது என்பது நம் தனிப்பட்ட விருப்பம், அது நம் அடிப்படை உரிமையும்கூட. அவ்வுரிமையைப் பறித்து வேறொன்றை கட்டாயமாகத் திணித்திட யாருக்கும் உரிமையில்லை.
#மொழிநிகர்மை
#PromoteLinguisticEquality
#StopHindiImposition
#StopHindiImperialism
௨} இந்தி பிற மொழிகளை அழிக்கிறதா? - கண்ணன்@கோரா
௩} அருணாச்சலப் பிரதேச மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன
௪} அருணாச்சலப் பிரதேச மொழிகள் அழிகின்றனவா?
௫} அருணாச்சலப் பிரதேச மொழிகளை அழிவிலிருந்து காத்திடுங்கள்/
௬} தமிழ் நாட்டின் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்கள் - @விக்கி
௭} 1937–40 காலகட்டத்தில் நடந்த இந்தி மொழித் திணிப்பு எதிப்புப் போராட்டம்
௮} மொழி உரிமையும் நாட்டு ஒற்றுமையும் - க.திருநாவுக்கரசு, இந்து.தமிழ்
௯} மொழி நிகர்மை வேண்டும் - புகார்
௧०} மொழிநிகர்மை பற்றி தென்னாபிரிக்க நாட்டு அரசமைப்புச்சட்டம்
௧௧} மொழியுரிமை