கும்பாரி
குமரி மாவட்டத்தில் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல் கும்பாரி.
எனக்கு இரிக்யுவ கும்பாரிகள் பல தினுசு பாத்துக்கங்க. அவனுவ ஒவ்வொருத்தன்டயும் நாம ஒவ்வொருமாரி பழகுவேம். அவனுவ தினுசுதினுசா இரிக்யதுக்கு, நாம அவனுவள்ட்ட பழகுற விதம்தான் காரணமோனு ஒரு ச்சந்தேகமும் எனக்குண்டு, கியாட்டியேளா!
- ஒருத்தன்ட்ட பணிவாப் பழகுவோம்.
- இன்னொருத்தன்ட்ட நளி அடிச்சிட்டே இருப்போம். அவனும் போறவர ஒருத்தனையும் ஒருத்தியையும் விடமாட்டான்.. அத்தனபேரையும் பத்தி நமட்ட நமக்குமட்டும் கேக்கறமாரி கிழிகிழினு கிழிப்பான்..
- செல கும்பாரிகள்ட்ட ஒக்காந்து ஒலகம் இடிஞ்சிவிழற விசயமெல்லாம் பியாசுவோம்.
- இன்னொரு கும்பாரிட்ட எப்ப பேசினாலும் ஒரே சிரிப்புதான், கியாட்டீயளா.. சிரிச்சிச்சிரிச்சி நம்ம வயிறெல்லாம் வெந்துபோவும்..
- இன்னொருந்தன்ட்ட எப்ப பியாசினாலும் ஒரே பொலப்பம். எதையாவது பத்தி பொலம்பித்தள்ளுவான்.. நாமளும் அத பொறுமையா கியேட்டிட்ருப்போம்..
- செல கும்பாரிட்ட எதப்பேசினாலும் சுகிசிவௌம் மாரி ஒரே அறிவுரைகள பொழிச்சு தள்ளுவான்... இதச்செயாத அதச்செய்யாத அத அப்டி தின்னா கியான்சர் வரும் எயிட்சு வரும்ணிட்டு அறிவுரகள திருப்பரப்பு அருவிமாரி கொட்டுவான்..
இந்த கும்பாரிகள் ஒவ்வொருத்தனும் ஒரு செங்கல் மாரியாக்கும். அவனுவள நமக்கேத்த விதத்ல ஒழுங்கா அடுக்கிவெச்சு சாந்து பூசினா நல்ல அழகான வீடு கெடைக்கும். அதுல நாம மகிழ்ச்சியா வாழலாம்..
நம்ம உடலும் உள்ளமும் நல்லமுறைல இரிக்யணுன்னா நமக்கு நெறைய கும்பாரிகளோட பழக்கம் வியாணுன்னி கிடாட்டர்க சொல்லுவாவ, கியேட்டீயளா.. ஒருத்தைன் எத்தன கும்பாரிகளோடத் ஊர்சுத்தித் திரியறானோ, அவனுக்கு கவலையும் இருக்காது ஒரு மயிரும் இருக்காது, அதுமாரி அவனுக்கு மூள சம்மந்தமா எந்த பிரச்சினையும் வராதுணி சொல்லுவாவியளே..
கும்பாரிகளேட சகவாசம் ஒங்களுக்க வயச ஒரு நுப்பது கொறச்சுருமாம்.. ஏதாவது நோயி வந்தாலும் அதோர தீவிரம் ஒரு ஐம்பது விழுக்காடு கொறவாத்தான் இருக்குமாம்..
ஒங்க வாழ்கைலயும் ஒங்களுக்கு நெறய கும்பாரிகளச் சேத்துக்கங்க.. அது சம்பாதிச்சி சேத்துவெக்யும் சொத்தவிடப் பெரிசாக்கும், கியேட்டீயளா...
No comments:
Post a Comment