உங்கள் நாட்டைப் பற்றி கீழுள்ளவற்றிலிருந்து ஓர் ஐந்து கேள்விகளுக்காவது சரியான விடை உங்களுக்குத் தெரியுமா...
௧} உங்கள் நாட்டின் இன்றைய மக்கள் தொகை என்ன?
௨} அது 2050ம் ஆண்டில் என்னவாக இருக்கும் என்று கணிக்கிறீர்கள்?
௩} உங்கள் நாட்டில் எத்தனை விழுக்காடு மக்கள், தங்களுக்கே முழு உரிமைகொண்ட வீட்டில் வாழ்கிறார்கள்?
௪} உங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மக்களின் உடல்நலத்துக்காக எத்தனை விழுக்காடு செலவிடப்படுகிறது?
௫} உங்கள் நாட்டின் மொத்தத் தனியாள் சொத்துகளில் எத்தனை விழுக்காடு, செல்வத்தில் கடைநிலையில் உள்ள 70% மக்களுக்குச் சொந்தமாக இருக்கிறது?
௬} உங்கள் நாட்டில் எத்தனை விழுக்காடினர் சட்டப்படி சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர் ?
௭} 'திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வது' பற்றி கணிப்பெடுத்தால், உங்கள் நாட்டில் எத்தனை விழுக்காட்டினர் அதனை அறமற்ற செயல் என்று கருதுவார்கள், என கணிக்கின்றீர்கள்?
௮} அதுபோல, 'கருக்கலைப்பு ஓர் அறமற்ற செயல்' என்று உங்கள் நாட்டின் எத்தனை விழுக்காட்டினர் கருதுவார்கள் என நீங்கள் கணிக்கின்றீர்கள்?
௯} அதுபோல, 'ஒருபாற் சேர்க்கை தவறானது' என்று உங்கள் நாட்டின் எத்தனை விழுக்காட்டினர் கருதுவார்கள் என நீங்கள் கணிக்கின்றீர்கள்?
கூகிளையோ வேறு எந்தத் தரவுகளையும் தேடாமல் உங்களுக்கு நினைவில் இருப்பதை மட்டும் எழுதவும்.
எல்லாக் கேள்விகளுக்கும் விடையளித்த பின்னால் கூகிளில் தேடி உங்கள் விடைக்கும் சரியான விடைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கணிக்கவும். அதுதான் உங்கள் அறியாமை அளவீடு.
No comments:
Post a Comment