பண்டைய பாரசீகர்களின் 'சரதூத்திர' சமயத்தின் முதன்மை கடவுளின் பெயர் அகுர-மாசுதா. இச்சமயத்தினர் தீய ஆற்றல்களை (சாத்தானை) 'தெவா' என அழைத்தனர்.
எங்கோ இடிக்கிறதா? ஆம். இயேசு பிறப்பதற்கு சிலபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சரதுசுத்திரர் எனும் முனிவர் உருவாக்கிய ஒற்றைக்கடவுள் வழிபாட்டு முறையைக்கொண்ட சரதூத்திர சமயமானது பண்டைய வேத சமயத்தின் காலத்தை ஒத்தது.
௧} இவ்விரு சமயத்தவர்களும் நடு-ஆசியப் பகுதிகளில் அண்மை நிலப்பரப்புகளில் வாழ்ந்திருக்கிறார்கள்.
௨} இவ்விருவரும் தீ வளர்த்துத் தத்தங்கள் கடவு(ள்க)ளை வழிபடுபவர்கள்.
௩} தங்கள் உடலைச்சுற்றி நூல்மாலை(புணூல், குசுட்டி) புனிதமெனக் கருதி அணிபவர்கள்.
௪} இருபிவினரின் மொழிகளான அவசுதனும் (பண்டைய பாரசீகம்) வேதகாலச சங்கதமும் உடன்பிறந்த இரட்டையர்த்தன்மைகொண்ட மொழிகள். தமிழ்-மலையாளம், தமிழ்-கன்னடம் போல சில எழுத்துக்களை மாற்றினாலே பல சொற்கள் இரண்டில் இன்னொரு மொழியில் தெரிந்துவிடும். எ.கா: ஓமா(அசுவதன்) <-> சோமா(சங்கதம்) ; இந்து(அசுவதன்) <-> சிந்து(சங்கதம்)
௫} ஆனால் கடவுள் என்று வரும்போது எதிர்மறை நம்பிக்கையை கொண்டவர்கள். இயற்கைதானே. எதிரிகளின் கடவுள்கள் நமக்கு சாத்தான் தானே. வேத சமயத்தினர் பல இயற்கை ஆற்றல்களை (ஐம்பூதம்) தேவர்களென வழிபட்டவர்கள்.. தங்கள் எதிரி சமயத்தினரின் கடவுளான அசுரரை (அசுர-மாசுத) தீய ஆற்றலாகத் (சாத்தான்) தூற்றி பல போர்களும் அது தொடர்பான கட்டுக்கதைகளும் புனைந்துகொண்டனர். இந்த பண்பு இன்றைய சமயங்களிலும் காணலாம்.
௬} வேத சமயத்தினரும் அவர்களின் வேதக் கடவுள்களின தேவர்களும், சுரா, சோமா ஆகிய புற்களைப் பிழிந்து ஊறலிட்டு அருந்தினர் என்று வேதங்களில் உள்ளதுபோலவே சரதூத்திர சமயத்தினர் ஓமப்(சோம) புல்லின் சாறைப்பற்றி நங்கள் சமயநூலான காதாவில் எழுதிவைத்துள்ளனர். இவர்கள், சுராப் புல்லின் சாற்றூறலை அருந்தியிருக்கமாட்டார்கள்.. ஒருவேளை, அதனால்தான் தங்கள் கடவுளான மாசுதாவுக்கு, அ-சுரா என அடைமொழி இட்டனரோ என்னவோ!
No comments:
Post a Comment