Wednesday, January 19, 2022

மின்சாரம்

மின்சாரம் அது செமகாரம்...
மின்சாரம் அது செமகாரம்...

மக்கள்கூட்டம் இயங்கணுன்னா
மங்காமத் தேவைப்படும்.. மின்சாரம்..
மனம்போல உலவி வரும்
மேகங்கூடத் தேக்கி வைக்கும்.. மின்சாரம்..
மழைபெய்யும் நேரம் வந்தா
மின்னலாய்ப் பாயும் மின்சாரம்..

மின்சாரம் அது செமகாரம்...
மின்சாரம் அது செமகாரம்...

சீறிவரும் ஆறக்கூட அணகட்டித் தடுதோமுன்னா பீச்சி வரும் தண்ணீரிலே.. மின்சாரம்..
சின்னஞ்சிறு அணுவக்கூட பக்குவமா பிரிச்சோமுன்னா உள்ளிருந்து பாஞ்சுவரும்.. மின்சாரம்..
உந்தன் மூளை இயங்கணுன்னா அதுக்குத்தேவை மின்சாரம்..

மின்சாரம் அது செமகாரம்...
மின்சாரம் அது செமகாரம்...

நன்றி

No comments:

Post a Comment

கல்வியின் தரம்

கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...