Sunday, January 23, 2022

நம்பிக்கைகளை திடமாக்கும் கல்விமுறை

"பகுத்தறிவால் ஆராயப்படாத நம்பிக்கைகளைக் கொண்ட மாந்தர்கள், முறைபடுத்தப்பட்ட கல்வியறிவு பெற்றால் அந்நம்பிக்கைகளினின்று விடுபட்டு தெளிவுற்று அறிவுத்தேடலை நொக்கிச் செல்வர்" என்று வெகுகாலம் கருதிவந்தனர்..  ஆனால், அதில் மீச்சிறிய விழுக்காடே ஈடேறுகிறது என்பது கீழ்க்காணும் தகவலிலிருந்து தெளிவாகிறது..  பெரும்பாலான முறைபடுத்தப்பட்ட கல்வியறிவூட்டு முறைகள், ஒருவரை நடுநிலையை நோக்கித் தள்ளவே முயற்சிக்கிறது..  பெரும்பாலான கல்விக்கூடங்கள் கல்வியறிவினூடே சிலபல நம்பிக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தக்கவைக்கிறது அ| விதைக்கவே செய்கிறது... ஆக, இவ்வகையாகவே பெரும்பாலாகக் கிடைக்கப்பெறும் கல்வியைக்கொண்டு, மாந்தர்கள்,  தத்தங்கள் நம்பிக்கைகளை அறிவியல்ரீதியாக புதுப்பிக்கவும் நியாயப்படுத்தவும்,  அந்தந்த காலத்தின் அறிவியல் முன்னேற்றத்தின் கனிகளைக்கொண்டு அந்நம்பிக்கைகளுக்கு புத்துயிரும் புதுநிறமும்  பெருச்செலவிட்டு அளிக்க முற்படுகின்றனர் என்பது கண்கூடு....

No comments:

Post a Comment

தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் ...............