Wednesday, January 19, 2022

+ - °

+ - °

பல ஐரோப்பிய மொழிகளில் பயன்பாட்டிலிருக்கும் டிக்ரீ எனும் சொல் பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அந்த விக்கி பக்கம் வாயிலாகவே காணமுடிகிறது.  அச்சொல்லின் வேர் ஆய்வையும் பார்த்துவிடுவோம்:

https://www.etymonline.com/word/degree 

இதில் 'படிநிலை' என்ற பொருளில் பழங்காலங்களில் இச்சொல் பயன்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுளது. மேலும், 'டிக்ரீ (°)' என்பதானது, வெப்பத்தின்/சாய்வின்/கல்வியின்/மடங்கு-மதிப்பின்/தரத்தின்/துல்லியத்தின்/தீவிரத்தின்... ஏற்றயிறக்க கூறு/படிநிலை/பாகம் தனைக் குறிக்கிறது.  

ஆக, 'கூறு' / 'படிநிலை' ஆகிய சொற்களையோ அதன் மருவலையோ அல்லது  'பாகம்' / 'பாகை' ஆகியவற்றையோ டிக்ரீக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்.  என்றாலும் 'பாகம்' என்பது சங்கத்திலிருந்து இறக்குமதியானதோ, என்றொரு ஐயம் எனக்குண்டு.  என் ஐயப்பாட்டிற்காக என்னைத் திட்டுவொர் திட்டலாம், சங்க இலக்கியச் சான்றுகளோடு மெய்ப்பிப்போர்களுக்கு முன்னமே  நன்றி.

அடுத்தது '+' & '-' குறிகளுக்கு வருவோம்.  '±25' என்றவாறு நாம் குறிப்பிடும் மதிப்பானது, அடிப்படையில் '0 ± 25' என்பதையே குறிக்கிறது.  அதாவது, சுழியத்தைவிட 25 அலகுகள் 'நிறை'வான அல்லது 'குறை'வான மதிப்பு எனபது பொருள்.  ஆக  '+' , '-' க்கு நிறை , குறை எனப்பயன்படுத்தலாம் என சிலர் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டுள்ளனர்.

இனி, அவைகளை சொல்லிக்கேட்க பாங்கோடு இருக்கிறதா எனப் பார்ப்போம்:-
-123.45 ---- குறை[மை!] நுற்றிஇருபத்துமூன்று புள்ளி நற்பத்தைந்து

[+]37.89°C ---- [நிறை[மை!]] முப்பத்தேழு புள்ளி எண்பத்தொன்பது கூறு/படி[நிலை]/பாகை செ[ல்சியசு]

-98.65°F ---- குறை[மை!] தொண்ணுற்றெட்டு புள்ளி அறுபத்தைந்து கூறு/படி[நிலை]/பாகை பா[ரன்கீட்]

[ ] - இவ்வடைப்புக்குறிக்குள் நான் இங்கு குறிப்பிட்டிருப்பவை விருப்பத்தெரிவுகளே.

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...