Sunday, January 23, 2022

ஓரெழுத்து ஒருசொல்

ஓரெழுத்து ஒருசொல்

அ - 8ன் குறியீடு, சிவன், திருமால், சுட்டு, எதிர்மறை, அசை, திப்பிலி.

ஆ - கறவை மாடு, ஆச்சாமரம், ஆன்மா, வரை, அற்பம், மறுப்பு, நினைவு, உடன்பாடு, நிந்தை, துன்பம், இரக்கம்.

இ - அண்மைச்சுட்டு, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, உண்டி, கேட்டி, குறத்தி, வில்லி, ஊருணி, செவியிலி, எண்ணி.

ஈ -அம்பு, அழிவு, இந்திரவில், ஈ, குகை, கொசுகு ,தாமரையிதழ், திருமகள், நாமகள், தேன்வண்டு, தேனி, நரி, பாம்பு, பார்வதி, வண்டு

உ - 2க்கான குறியீடு போல, சிவபிரான், நான்முகன், உமையவள், சுட்டெழுத்து

ஊ - உணவு ,திங்கள், சிவன், ஊன், தசை, சதை

எ - 7க்கான குறியீடு போல

ஏ - இசை நிறைந்து நிற்கும் ஓர் இடச்சொல், எய்யுந்தொழில், குறிப்பு மொழி, சிவன், செலுத்துதல், மேல் நோக்குதல், திருமால், இறுமாப்பு, அம்பு, விளிக்குறிப்பு

ஐ - அசைநிலை, அரசன், அழகு, கடவுள், கடுகு, குரு, கோழை, சிலேட்டுமம், சர்க்கரை, சவ்வீரம், கன்னி, சிவன், தண்ணீர் முட்டான் கிழங்கு, தலைவன், தும்பை, துர்க்கை, நுண்மை, பருந்து, தந்தை, பெருநோய், யானைப்பாகன் அதட்டும் ஓசை, வியப்பு , ஐந்து எண்ணிக்கை, ஐயம், கணவன், பாசாணம்

ஒ - ஒழிவு

ஓ - மதகு நீர் தாங்கும் பலகை, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், வினா, எதிர்மறை, தெரிநிலை, பிரிநிலை, ஐயம், கொன்றை, நான்முகன், மகிழ்சிக்குறிப்பு

- நிலம், விழித்தல், அழைத்தல், வியப்பு, தடை, கடிதல், ஔவென்னேவல்

க - 1ஆன குறியீடு போல, அரசன், தீ, நான்முகன், ஒன்று என்னும் எண்ணின் குறி, ஆன்மா, உடல், கந்தர்வ சாதி, காமன், காறு, கதிரவன், செல்வன், திருமால், தொனி, நமன், மயில், மனம், ஆனைமுகக் கடவுள், காந்தாரமாகிய கைக்கிளை இசையின் எழுத்து, அடிக்கும் மணி, எமன், திங்கள், உடல், நலம், சூனியச்சொல்,தலை, திரவியம், நனைதல், நீர், பறவை, ஒளி, பொருத்து,முகில், வல்லவன்.

கா - காத்தல், காவடி, காவெனேவல், சோலை, துலை, தோட்சுமை, தோட்டம், வர்த்தம், வலி, பாதுகாப்பு, பூஙாவனம், காவடித் தண்டு, துலாக்கோல், ஒரு நிறையளவு, பூ முதலியன இடும் பெட்டி, கலைமகள், நிறை, காப்பாற்று, விழிப்பாயிரு, காவல்செய்

கீ - கிளிக்குரல்

கு - குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நிந்தை, பாவம், பூமி, இகழ்ச்சி, நீக்குதல், இன்மை,நீக்கம், நிறம்

கூ - கூவென்னேவல், நிலம், பூமி

கோ - அரசன், அம்பு, வானம், ஆண்மகன், இடியேறு, இரக்கக்குறிப்பு, இலந்தை, உரோமம், எருது, கண்,கிரணம், கோவென்னேவல், சந்திரன், சூரியன், திசை, கோமேதகயாகம், தேவருலகம், நீர், பசு, பூமி, பொறிமலை, தாய், மேன்மை, வச்சிராயுதம், வாணி, வெளிச்சம், சக்கரவர்த்தி, பெருமையிற் சிறந்தோன், தகப்பன், தலைமை, மலை, குசவன், சொல், இரசம், சாறு, இரங்கற் குறிப்பு, சுவர்க்கம், அரசியல், இரங்கல், தொடு, வெந்நீர், ஒழுங்காக்கு

கௌ - கிருத்தியம், கொள்ளு, தீங்கு, வாயாற் பற்று

ங - குறுணிக் குறி

ஙா - குழந்தையின் அழுகை ஒலியினைக் குறித்த சொல்.  இங்கா→இங்ஙா→ஙா

ஙே  - ஆட்டின் ஒலிக்குறிப்பு

சா - சாவென்னேவல், இறத்தல், சோர்தல், சாதல்

சீ - அடக்கம், அலட்சியம், காந்தி, இகழ்ச்சிக் குறிப்பு, இலக்குமீகரம், சம்பத்து, கலைமகள், சீயென்னேவல், உறக்கம், பார்வதி, பெண், ஒளி, சிறி,விடம், விந்து, புண்ணின் சீழ், சளி, சிறப்புக் குறிக்கும் ஓர் அடைமொழி

சூ - விலங்குகளையோட்டும் குறிப்பு, வியப்புச்சொல், வாணவகை, சுளுந்து, நாயை ஓட்டும் ஒலிக்குறிப்பு

சே - அழிஞ்சில் மரம், இடபராசி,உயர்வு, எதிர்மறை, எருது, ஒலிக்குறிப்பு, சிவப்பு, சேரான் மரம், விலங்கேற்றின் பொது, வெறுப்புக்குறி, காளை, செங்கோட்டை, சேவென்னேவல்

சை - இகழ்சிக்குறிப்பு

சோ - அரண், உமை, வியப்புச்சொல்

ஞா - கட்டு , பொருந்து

- குபேரன், நான்முகன்

தா- அழிவு, குற்றம், கேடு, கொடியவன், தாண்டுதல், தாவென்னேவல், பாய்தல், பகை, நான்முகன், வலி, வருத்தம், வியாழம், வலிமை, குறை, பரப்பு, நாசம், தண்டுகை, கொடு, பெறு, பகை

தீ - அறிவு, இனிமை, உபாயவழி, கொடுமை, தீமை, தீயென்னேவல், நரகம், நெருப்பு, சினம், நஞ்சு, ஞானம்

து -அசைத்தல், அனுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், துவ்வென்னேவல், நடத்தல், நிறைதல், பிரிவு, பிறவினை, வருத்தல், வளர்தல்

தூ - சீ-எனால் , சுத்தம், தசை, பகை, தூவென்னேவல், பற்றுக்கோடு, புள்ளிரகு, வெண்மை, தூய்மை, இகழ்சிக்குறிப்பு, வலிமை

தே - கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு

தை - தாளக்குறிப்பின் ஒன்று, ஒரு திங்கள், தைக்கத்தக்கவை, தையென்னேவல், பூசநாள், மகரராசி,அலங்காரம், மரக்கன்று

தோ - நாயை கூப்பிடும் ஒலிக்குறிப்பு

- இன்மைப் பொருள், எதிர்மறைப் பொருள்

நா - நான்கு எண்ணிக்கை, அயலார், அயல், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நாக்கு, நடு நாக்கு, பொலிவு, துலைநா, பூட்டின் தாள், நாதசுரத்தின் ஊதுவாய்

நி - இன்மை, அன்மை, அதிகம், சமீபம், நிறைவு, உறுதி, ஐயம், வன்மை,

நீ - நின்னை

நு - ஐயம், சங்கை, வினா, தியானம், தோணி,நிந்தை, நேரம், புகழ்

நூ - எள், யானை, ஆபரணம், நூவென்னேவல்

நே - அன்பு, அருள், நேயம்

நை - இகழ்சிக்குறிப்பு, நையென்னேவல்

நொ - துன்பம், நொவ்வென்னேவல், நோய், வருத்தம்,நொண்டி

நௌ - மரக்கலம், கோணி

- 1/20க்கான குறியீடு போல, காற்று, சாபம், பெருங்காற்று

பா -அழகு, கடிகாரவூசி, கிழங்குப்பா, நிழல், நெசவுப்பா, பஞ்சுநூல்,பரப்பு, பரவுதல்,பாட்டு, பாவென்னேவல், பிரபை, தூய்மை, காப்பு, தேர்தட்டு, கைமரம், பூனைக்காலி, பாம்பு

பி - அழகு

பீ - அச்சம்,மலம், தொண்டீ

பூ - அழகு, இடம், இந்துப்பு, விளைவுப்போகம் இருக்குதல், இலை, ஓமாக்கினி, ஒரு கண்ணோய், ஒரு நரகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, புட்பம், பூமி, பூவென்னேவல், பொலிவு, மகளிர் பூப்பு, மலர், நிறம், புகர், பூத் தொழில், சேவலின் தலைச்சூடு, மென்மை

பே - நுரை,மேகம்,அச்சம், இல்லை

பை - அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பாம்பின் படம், பையென்னேவல், பொக்கணம், மந்தக்குணம், மெத்தனவு, இளமை, உடல்வலி, கொள்கலம், உடல் உள்ளுறுப்பு

போ - போவென்னேவல், அசைச்சொல்

- இயமன், ஒருமந்திரம், காலம், சந்திரன், சிவன் நஞ்சு, நேரம்

மா - அசைச்சொல்,அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடித்தமா, இடை, இலக்குமி, எதிர்மறை, ஓரசைச்சொல், ஓரெண், ஒருமரம், கட்டு, கறுப்பு,( குதிரை, பன்றி, யானை- இவற்றின் ஆண்), குதிரைப்பொது, சரசுவதி, சீலை, செல்வம், தாய், துகள், நச்சுக்கொடி, நிறம்,பரி, பிரபை, பெரிய, பெருமை, மகத்துவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, விலங்கின் பொது, வெறுப்பு

மீ - ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம்

மூ - மூன்று எண்ணிக்கை, மூவென்னேவல், மூப்பு

மே - அன்பு, மேம்பாடு.

மை - அஞ்சனம், இருள், எழுதுமை, கறுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடராசி, மையென்னேவல், வெள்ளாடு, தீவினை,மசி, மந்திரமை, வண்டிமை, களங்கம், பசுமை, பாவம், அழுக்கு, மலடு, இளமை,

மோ - மொத்தல், மோதென்னேவல்

ய - 10க்கான குறியீடு போல

யா - அசைச்சொல், ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், ஒருவகைமரம், அகலம்

ரு - 5க்கான குறியீடு போல

- 1/4க்கான குறியீடு போல

வா - வாவென்னேவல்

வி  - அறிவு, அதிகம், இன்மை, நிச்சயம், பிரிவு, முகாந்திரம், வித்தியாசம், வெறுப்பு, ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசிம்பு, விசை

வீ - கருத்தரித்தல், கொல்லுதல், நீகம், பறவை, பூ, போதல், விரும்புதல், வீயென்னேவல், மகரந்தம்

வே - வேயென்னேவல், வேவு

வை - கூர்மை, புல், வைக்கோல், வையகம், வையென்னேவல்

வௌ - ஒலிக்குறிப்பு,கௌவுதல், கொள்ளை அடித்தல், வௌவென்னேவல்

-தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்

ளு - நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்

று - எட்டில் ஒரு பகுதி அரைக்கால் என்பதன் வடிவம்.



No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...