Wednesday, January 19, 2022

வட்டாரவழக்கைப் பாதுகாத்திடுங்கள்

வட்டாரவழக்கு

வட்டாரவழக்கு என்பது அந்தந்த மண்ணின் மரபையும் பண்பாட்டையும் சுமந்துவருவதாகும்.  இன்றய பேச்சுத்தமிழ் என்பது தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் போன்ற ஊடகங்களிள் தொடர்ந்து பேசப்பட்டுவரும் ஆங்கிலம் மற்றும் உருது கலப்புமிக்க சென்னை வழக்கை நோக்கியே நகர்த்தப்படுகிறது.

தமிழ்மொழியானது காலங்காலந்தொட்டே மக்களால், வட்டாரவழக்குப் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் ஆகிய, இருவழக்குகளிலேயே தமிழர்களால் தொடர்ந்து வெற்றிகரமாகக் கையாளப்பட்டுவருகிறது.    செந்தமிழ் என்பது  எக்காலத்திலும்  பரவலாகப் பொதுமக்களால் பேசுவதற்கு பயன்பட்டதில்லை.  காலங்காலமாக இலக்கியங்கள் வாயிலாக செந்தமிழும் பேசுவதுவாயிலாக வட்டாரவழக்குத்தமிழும் உயிர்ப்போடே இருந்ததுவருகிறது.  மேலும்   பலவகை வட்டாரவழக்கானது செந்தமிழுக்கு தெடர்ந்து வளம் சேர்த்தவண்ணம் இருந்துள்ளது.  

ஆனால் சென்னையை நடுவமாக அமைத்துக்கொண்ட  ஊடக ஞாலத்தில்,  வடதமிழக வட்டார தமிழ் மட்டுமே பேசப்பட்டுவருகிறது.  இதைத் தொடர்ந்து கேட்கும் வளருந்தலைமுறையினர் தத்தங்கள் மரபுகளை சுமந்துவரும் வட்டார வழக்குத்தமிழை வெகு வேகமாக மறந்து, ஊடகத்தில் பேசப்பட்டுவரும்  வழக்கை பேசத்தொடங்கியுள்ளனர்.  இது தமிழரிடையே இருக்கும் பன்மைத்தன்மை நிறைந்த மொழிவளத்திற்கும் தமிழுக்குமே நல்லதல்ல.  செந்தமிழைப் போலவே வட்டாரவழக்கையும் வெகுவாக பாதுகாத்து உயிர்ப்போடு வைத்துக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். வட்டாரவழக்கை பேணிகாப்பதால் தமிழானது வேறுவேறாகப் பிரிந்துவிடும் என்பது போன்ற கவலை தேவையற்றது.

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...