"வாட்சாப் குழுக்களில் புழங்குபவர்கள் மிக எளிதாக எதிரிகளாகின்றனர்"
கொள்கைரீதியான சொற்போர்கள், இவ்வெதிரிகளை உருவாக்குவதற்கு வித்திடுகிறது. பேசுபுக் துவிட்டர் போன்றவை ஒரளவிற்கு கட்டமைக்கப்பட்ட சமூக ஊடகங்கள். அங்கு ஒவ்வொரு சிக்கலும் தனித்தனியான ஒரு தலைப்பு மற்றும் இழையின்கீழ் அலசப்படுகிறது. அவ்வலசல்கள் அவ்வப்போது பாதைமாறிச்சென்றாலும் பெரும்பாலும் அவை துணை இழைக்களாகவே அமைந்துவிடுகின்றன. அப்பாதைமாறல்கள் மூல இழையில் நடக்குமானால், மெரும்பாலும் அவை அத்த இழையை ஆரம்பித்தவராலோ பக்கத்தின் உரிமையாளராலோ குழுநிர்வாகியாலோ பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிடுகிறது.
ஆனால் மக்கள் பெரும்பாலும் புழங்கும் வாட்சாப்பில் பெரும்பாலும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை கட்டமைப்பும் இல்லை. குறிப்பாக ஒருவருக்கொருவர் நன்கறிந்தவர்கள் நிறைந்த வாட்சாப் குழுவில் குழுநிர்வாகியின் நிலை படு திண்டாட்டம்தான். அடிப்படையில் வாட்சாப் ஒரு சமூக ஊடகமல்ல. ஒரு சமூக ஊடகத்திற்கான எந்த ஒரு கட்டமைப்பையும் கொண்டிராதது அது. அது கூகுள் சாட், எம்மெஸென் சாட், யாகு சாட் போன்ற குறிப்பிட்ட பயன்பாட்டிற்குரியதே. அதாவது, இருவருக்கிடையான உரையாடலுக்கும், குழுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமட்டும் ஒரு குறிப்பிட்டநேக்கத்திற்காக உரையாடிவிட்டு வெளியேறிவிடும் பயன்பாட்டிற்கு உரியதுதான். மக்கள் தான் அதனை ஒரு முடியாத உரையாடலாக மாற்றி, கண்டதையும் அந்த ஒரே ஒரு பேரிழையிலே தறுமாறாக உரையாடி, யார் எந்த கருத்துக்காக பேசுகின்றார்கள் என்பதறியாமல் தத்தம் திசைதிருப்பல் கருத்துக்களையும் அங்கு தூவிவிட்டு, அது பலரையும் புண்படுத்தி, குழுக்கள் வெகுவிரைவாகவே இரண்டாக மூன்றாக நான்களாக துணைக்குழுக் கூறுகளாகப் பிரிந்து, வெட்டிப்பேச்சும் எள்ளிநகையாடலும் பழையவைகிண்டுதலும் சுட்டிக்காட்டுதலும் குத்துவாக்கும் காழ்ப்புணர்வும் மிகையாகி வாட்சாப்பை தவறாகப்பயன்படுத்தியதன் விளைவாக பகைமை எனும் அதன் நச்சு விதையை நன்கே அறுவடை செய்கின்றனர்.
வாட்சாப் செயலியை உருவாக்கியவரான திரு.பிரயன் ஆக்சன், "இது சமூக ஊடகமல்ல, இது அதற்காக உருவாக்கப்பட செயலி அல்ல, இதில் பரந்துபட்ட சமூக ஊடகத்திற்கான எந்தவொரு கூறும் கிடையாது" எனத் தெளிவாக எச்சரித்துள்ளார் ( http://www.financialexpress.com/industry/technology/heres-why-whatsapp-is-not-turning-into-a-social-media-forum/566035/ ).
வாட்சாப்பை ஒரு முடிவில்லா குழு உரையாடலாக பயன்படத்திடவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.
No comments:
Post a Comment