உங்கள் படைப்புகள் எப்படிப்பட்ட வீரியத்தோடு இருந்திட வேண்டும் தெரியுமா?
௧) (உங்கள் படைப்புகள் அமைந்த துறைகளில்) படைப்பாற்றல் குன்றியவர்கள், உங்கள் படைப்புகளை உணர்ந்து களித்தபின், அதனைப்போன்ற படைப்புகளை தாங்களும் படைக்கவேண்டும் என்ற உள்ளத்து உந்து ஆற்றலை உங்கள் படைப்புகள் உருவாக்கி அவர்களை அதைநோக்கி முயற்சிகொள்ளச்செய்யும் வண்ணம் உங்கள் படைப்புகள் இருந்திடல்வேண்டும்.
௨) (உங்கள் படைப்புகள் அமைந்த துறைகளில்) படைப்பாற்றல் (நிரம்பக்)கொண்டவர்கள் உங்கள் படைப்புகளை உணர்ந்து களித்தபிறகு, அப்படைப்புகளின் நுணுக்கங்களால் தூண்டப்பட்டு, புதிய அல்லது அதன் வேறு பரிமாணத்திலுள்ள படைப்புகளை படைத்திடத் தூண்டிடும் வண்ணம் உங்கள் படைப்புகள் அமைந்திடவேண்டும்.
அவ்வாறான வினைகளை உங்கள் படைப்புகள் உருவாக்கிவிடவில்லையென்றால், உங்கள் படைப்புகள் இன்னவும் முழுமையடையவில்லை எனவும் உங்கள் படைப்பாற்றல் இன்னும் கொம்புசீவப்படவேண்டியுள்ளது எனவும் பொருள்.
No comments:
Post a Comment