சோம்பேறித்தனம் வைக்கும் செலவுகள்
௧) வாங்கிப்போட்டபின் பயன்படுத்தப்படாமல் தூசிபிடித்தோ பயன்பாட்டுக்கெடுமுடிந்த செல்லரித்தோ கொண்டிருக்கும் பாழாகும் பொருள்கள்.
௨) வரி மீள்கொடையை கோராதிருத்தல்
௩) வெகுமதிப் புள்ளிகளை, உணவுச்சீட்டுகளை, பரிசுச்சான்றிதழ்களை பயன்படுத்தாது வீணடித்தல்.
௪) பேரம்பேசாது பொருள்களை வாங்குதல்.
௫) பல விற்பனை முகப்புகளில் நிறுவப்பட்டிருக்கும் விலையை மற்ற இட விலைகளோடு ஒப்பீடு செய்யாமல் முதல் பார்வையிலேயே பொருள்களை வாங்குதல்
௬) எதற்காக வாங்குகிறோம் என்ற திட்டம் இல்லாமலே பொருள்களை வாங்கிக் குவித்தல். என்னென்ன வாங்கப்போகிறோம் என முடிவுசெய்துகொள்ளாமலே கடைக்குச்செல்லுதல்.
௭) கடனட்டை, மின்கட்டணம் போன்றவை காலங்கடந்தபின் தாமதத்தண்டம் கட்டுவதை ஒரு வழக்கமாக வைத்திருத்தல்.
௮) பொருள்களை அடுக்கி வைத்திராதல்
௯) இலவசமான/விலை-குறைவான மாற்றுவழிகளைப்பற்றி எண்ணாது இருத்தல்.
௧०) ஈட்டும் வருவாய்க்கும் செய்யும் செலவுக்குமான தொடர்பை முற்றிலும் எண்ணாது திட்டமிடாது இருத்தல்.
௧௧) தாமே/வீட்டிலேயே சமைத்து உண்ணுவதை விடுத்து முன்னமே தயாரிக்கப்பட்டு பொதிகளில்/புட்டிகளில் விற்கப்படும் உணவுப்பொருள்களை கூடுதலாக வாங்குதல்.
௧௨) வியர்வை சிந்திடும்வண்ணம் தேவையான அளவு உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
௧௩) தேவையான தரத்தில் மின்காப்பு செய்யாததால் ஏற்படும் மின்கசிவினாலான இழப்பு.
௧௪) பயன்படுத்தாது தேங்கிக்கிடக்கும் பொருள்களை விற்காமல் வீணடித்தல்.
௧௫) பொதுப்போக்குவரத்தில் செல்ல இயலும் இடங்களுக்கு மகிழுந்துகளில் செல்லுதல்.
௧௬) பாத்திரம் ஆராயாமல் இலவசம்/பிச்சை வழங்குதல்.
௧௭) பயிற்சிக்கூடங்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டு பயிற்சி பெற்றுக்கொள்ளாதிருத்தல்.
௧௮) குழந்தைகளுக்கான பொம்மை, விளையாட்டுப்பொருள்கள், உடைகளுக்கு மிகையாக செலவழித்தல்.
௧௯) படிக்காமலேயே குவித்துவைக்கப்பட்டிருக்கும் நாள்/கிழமை/திங்கள்/ஆண்டு இதழுக்காகச் சலுத்தப்படும் சந்தா கட்டணம்.
௨०) தள்ளுபடி வாய்ப்புக்களை பயன்படுத்தாதிருத்தல்.
௨௧) பழை பொருள்களை அவற்றை ஒரு விலைபோட்டு வாங்குபவர்களிடம் விற்காமல் குப்பைத்தொட்டியில் வீசி எறிதல்.
௨௨) சுற்றிநடக்கும் நிகழ்வுகளைபற்றி ஆழ்ந்து ஆராயும் ஊக்கமில்லாமல் அதுபற்றி எதையாவது ஊகித்துக்கொளல்.
௨௩) வருங்கால/முதுமைகால சேமிப்புக்கணக்கு ஒன்றை ஏற்படுத்தாது இருத்தல்.
௨௪) தொடர்ச்சியாக தேவைக்குங்கூடுதலாக உறங்குதல்.
௨௫) வாழ்க்கையில் தற்போதுள்ள வசதிப்போக்கை விடுத்து புதிய/மாற்று வழியில் பயணிக்கத் தயங்குதல்
சொம்பேறித்தனம் உங்களுக்கு இழைத்த செலவுகள் என்னென்ன என்பதை பதிலாகப் பதிவிடுங்கள்.
நன்றி.
No comments:
Post a Comment