Wednesday, January 19, 2022

தோடர் மொழி

தோடர் மொழி

நீலமலைத்தொடரில் ஊட்டி அருகே வாழ்ந்துவரும் தோடர்களின் மொழியின் மேல் பற்பல மொழியியலாளர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப்போல எனக்கும் ஒர் பேரார்வம்...   தோடர் மொழியில்  உள்ள வேறுபாடும் தனிச்சிறப்பும் கொண்ட ஒலிகளை கண்டு பலரும் வியந்துள்ளனர்..   தோடர் மொழியில் 18 உயிர் ஒலிகளும் 47 மெய் ஒலிகளும் பயன்பாட்டில் இருக்கின்ற...  தென்னிந்திய மொழிகளிலே ஒலிவளமும் ஒலிநுணுக்கமும் மிகுந்த மொழியாக தோடர் மொழி ஒன்றே திகழ்கிறது..  மொழியிலாளர்களால் வெகுவாகப் போற்றப்பட்ட இம்மொழி தற்பொழுது கிட்டத்தட்ட அழியும் நிலையிலுள்ளது..  தற்போது 2000 பேருக்கு குறைவானவர்களே இம்மொழியை பேசத்தெரிந்துள்ளனர்...  அடுத்த தலைமுறையினர் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பேசுகின்றனர்...  ஒன்றிய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏதாவது செய்து இம்மொழி பேசுவேரை கணிசமாக  ஊக்குவித்திட வேண்டும்... 

http://en.wikipedia.org/wiki/Toda_language

தோடர் மொழியில் உள்ள சில சிறப்புமிக்க ஒலிகளைக் தமிழ்/உரோமானிய எழுத்துக்களால் கோர்க்க முற்பட்டுள்ளேன்...  கீழ்காணும் ஒலிகளில் உள்ள இரு எழுத்துக்களை ஒரே நேரத்தில் நீங்கள் ஒலிக்க முற்பட்டால் தோடர்ஒலி வர வாய்ப்புண்டு.  காட்டாக "ல்ஸ" என்பதை 'ல்' 'ஸ' என தனித்தனி ஒலிகளாக படிக்காமல் இரண்டையும் ஒரேநேரத்தில் ஒலிக்க முற்படவேண்டும்

fba, த்ஸ, dhz, ல்ஸ, ல்za, ட்ஸ, dza, ட்ர, dர, ட்ற, dற, ஷ்ஜ, ழ்ற, ஃக, ஃஷ, ற்ட்ர, ற்ட்ற ....

கீழ்காணும் உரலிகளில் தோடர்களின் ஒலிகளைக் கேட்டலாம் (மூலம்:   https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா%20பல்கலைக்கழகம்%20%28லாஸ்%20ஏஞ்சலஸ்%29 )

http://archive.phonetics.ucla.edu/Language/TCX/tcx.html

http://phonetics.ucla.edu/appendix/languages/toda/toda.html

https://www.youtube.com/results?search_query=%22toda+audio%22

https://m.facebook.com/story.php?story_fbid=1586999241574116&id=1402767490004331
தற்போது இந்த மொழி இங்குள்ள  பள்ளிக்கூடங்களில் ஒரு மொழிப்பாடமாக சொல்லிக்கொடுக்கிறார்களா?
இல்லை என்றால் அவர்களை  தங்களது தாய்மொழியையும் பாடல்களையும்  அடுத்த தலைமுறையினருக்கு முழுவதுமாக கடத்திட என்ன செய்யவேண்டும்.?
https://www.deccanchronicle.com/nation/in-other-news/200218/toda-and-kota-dialects-will-survive-tribal-leaders.html

தமிழகத்துப் பழங்குடியினர்களான தோடர், கோட்டர், இருளர், குறும்பர், குளுவர், காணியர்... போன்றவர்களது மொழிகளும் பண்பாடுகளும் பேணிகாக்கப்படவேண்டும்.  இது தமிழர்களிய நம் கடமையும் கூட.  அவர்களது அடுத்த தலைமுறையினர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிக்கூடங்கள் வாயிலாக அவர்களின் பண்பாடும் கலையும்  தரப்படுத்தப்பட்டு கற்பிக்கப்படவேண்டும்...  தமிழகத்தில் தொலைபரப்பப்படும் தொலைகாட்சிகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு (குறைந்தது 1%) நேரம் இப்பழங்குடியினரின் பண்பாடு மற்றும் கலைக்காக ஒதுக்கப்படவேண்டும்...
.
#தோடர் , #கோட்டர் , #கோத்தர் , #toda , #ooty , #trill , #retroflextrill , #nilgiri , #நீலகிரி , #நீலமலை , #தமிழ் , #தமிழ்வாழ்க

No comments:

Post a Comment

கல்வியின் தரம்

கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...