தமிழம்பு
சில நாட்களுக்கு முன், www.incometaxindiaefiling.gov.in வ.வ இணையதளத்தில் "ஒரு பணிவான வேண்டுகோள், ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர மற்ற இந்திய மொழிகளிலும் இத்தளத்தின் உள்ளடக்கத்தை கண்டிடும் வசதியை ஏற்படுத்திடுங்கள்" எனும் கோரிக்கையை தமிழிலும் ஆங்கிலத்திலும் தனித்தனியாக பின்னூட்டமாக இட்டிருந்தேன். இன்று காலை வருமான வரித் துறையிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் (ஆங்கிலத்தில்) பேசியவர், நான் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கத்தைக் கேட்டார்! எளிமையாக வினக்கினேன். நான் விளக்கவிளக்க அவர் தட்டச்சு செய்வது என் காதில் கேட்டது. பின்னர் "உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இதனை அதற்கான துறைக்கு அனுப்பி வைக்கிறேன்" எனக்கூறினார்.
பொதுவாகவே அரசு அல்லது அரசுசார்ந்த எந்தவொரு இணையதளத்திற்கு செல்ல நேர்ந்தாலும் நான் ௸ பின்னூட்டத்தை இட்டிடுவது வழக்கம். கடந்த பல ஆண்டுகளாகவே இதனைச் செய்துவருகிறேன். இதுவரைக்கும் எவரும் கண்டுகொண்டதில்லை. இன்று நடந்தது எனக்கு புதிது!..
நண்பர்களே, உங்களையும் இதுபோன்ற பின்னூட்டக்களை இட்டிடுமாறு வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் செவிமடுப்பார்களா மாட்டார்களா என்ற கோணத்தில் நோக்குவதைவிட, "வாய்பிருக்கும் இடுக்குகள் வழியாக எல்லாம் அம்பை எய்துகொண்டே இருப்போம், எதாவது ஒரு அம்பாவது இலக்கை தாக்கிவிடாதா என்ற குருட்டு நம்பிக்கையில். இதில் நமக்கு பெருத்த செலவேதும் இல்லையே" என எண்ணி இயங்கலாம்.
நம் ஒரே இலக்கு... "தமிழை" முழுவதுமாக பொதுப்பயனாக்குவதே!!!
No comments:
Post a Comment