Tuesday, October 24, 2023

செந்தார்மிழி

செந்தார்மிழி


என்ன ஒரு அருமையான இசையமைப்பு.  திரு செயச்சந்திரன் உண்மையிலேயே மிகச் சிறப்பான செயலைச் செய்திருக்கிறார். பாடலின் மெட்டமைப்பாகட்டும், பின்னணி இசைக் கருவிகளின் ஒருங்கமைவு ஆகட்டும், சொர்கத்தின் இன்பத்தையே நம் கண்முன் காட்டியிருக்கிறார் திரு செயச்சந்திரன் அவர்கள். முதல் இடை இசையில் வரும் ஒத்திசைகளாயானது மெய்மறக்கச்செய்கிறது. "நீராம்பல் தேடி..." என்பதிலும் "அந்நக்ரகார ராத்ரியில்.."  என்பதிலும் வரும் வயலின் குழுவின் பின்னணி இசையைக் கேளுங்கள்.  ஆகா!, நம் உள்ளத்துக்குள் சிறகுகள் படபடக்கின்றன.

பின்னூட்டங்களைப் பார்த்தால்,  மலையாளிகளுக்கு இசை அமைத்தவர்களையும் வரிகள் எழுதியவர்களையும் விட பாடியவர்களையும் நடித்தவர்களையும் மட்டுமே புகழப் பிடித்திருக்கிறது.

மலையாளத் திரையிசைப் பாடல்களிலேயே,  சங்கதத்தை வேண்டுமென்றே மிகையாக சேர்க்கப்படாத சில பாடல்களில் இது ஒன்று எனலாம். மாறாக நிறைய அழகான தமிழ் சொற்களை கேட்கமுடிதிறது. இப்படிப்பட்ட பாட்டை வரைந்ததற்கு கவிஞர் திரு கைதப்புறமுக்கு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...