மும்முடிச்சோழபுரம்
நாகர்கோவில், வடிவீசுவரம் அழகம்மன் கோவிலில் உள்ள சிவன் கருவரையின் தெற்குச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள கல்வெட்டு. - கன்னியாகுமரி கல்வெட்டுகள் தொகுதி 3. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை. 1972.
யாரோ ஒருவர் கோவிலில் நாள்தோறும் பூசை செய்வதற்கு தேவையான பொருளுதவிக்காக, தோவாளை அருகே உள்ள பெரியகுளம் எனும் ஊரில் இரண்டு மா (0.46 ஏக்கர்) நிலத்தை தானமாகக் கொடுத்ததற்கான கல்வெட்டு.
இக்கல்வெட்டில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன:-
- பொறிக்கப்பட்ட ஆண்டு: கிபி 1488
- கல்வெட்டுக்கான ஓலை எழுதிய இடம்: 23ம் பண்ணையான திருவேங்கடமுடையார் வீடு, பொருந்தக்கரை, கல்லிடைக்குறிச்சி
- ஆவணப்படுத்திய பதிவாளர்: சுந்தரன் விக்கிரமன், கோட்டாறு
- நாகர்கோவிலின் அப்போதைய பெயர்: கோட்டாறு என்ற மும்முடிசோழபுரம் . ('தமிழகம் ஊரும் பேரும்'_ எனும் நூலில் இப்பகுதிக்கு மும்முடிச்சோழ நல்லூர் என்ற பெயர் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்). இதில் மும்முடிச்சோழன் என்பது இராசராசனையே குறிக்கும். இவர் கிபி 999ம் ஆண்டு நாஞ்சில் நாட்டைக் கையகப்படுத்தி கன்னியாகுமரிக்கும் இராசராசேச்சுரம் என்ற பெயரிட்டுள்ளார். மும்முடிசோழபுரம் போன்ற பெயர்கள் கொண்ட மற்ற ஊர்கள்: திண்டிவனம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சோழபுரம், ஆந்திராவிலுள்ள திருக்காளத்தி, குமரியிலுள்ள முட்டம் மற்றும் கடியப்பட்டினம், தஞ்சை அருகே உள்ள விண்ணணூர்ப்பட்டி.
- தோவாளையின் அப்போதைய பெயர்: அழகிய சொழநல்லூர்
- வடிவீசுவரத்தின் அப்போதைய பெயர்: வடிவினீச்சுரம்
- கோவிலின் இறைவனது அப்போதையப் பெயர்: வடிவினீச்சுரமுடைய நாயினார் (தற்போது: சுந்தரேசுவரன்)
- கோவிலின் இறைவியது அப்போதையப் பெயர்: அழகியமங்கை நாச்சியார் (தற்போது: அழகம்மன்)
- கருவறை: உண்ணாழி
No comments:
Post a Comment