குற்றியலகரம்?
குற்றியலிகரம், குற்றியலுகரம் பற்றித் தெரியும். அதென்ன குற்றியலகரம்? அப்படி ஒன்று தமிழில் உண்டா? ஆய்வோம்..!!
பேச்சுத்தமிழில் 'குற்றியலகரம்' போன்ற ஒன்று இருப்பதாக எண்ணுகிறேன். 'அ'வின் உயிர்மெய் எழுத்துக்கள் கொண்டு பெருப்பாலும் தமிழ்ச்சொற்கள் முடிவதில்லை. (குறிப்பு: மலையாளத்தில் முடிகிறது. காட்டாக தமிழில் 'மீனா' என்று எழுதவதை மலையாளத்தில் 'மீன' என்றே எழுதுகின்றனர். தமிழில் 'மீனா' என்பதே எழுதுபெயராகவும் விளிப்பெயராகவும் அமைந்துவிட [மீனா! இங்க வா.], மலையாளத்தில் 'மீனே' என்பது விளிப்பெயராகிவிடுகிறது. [மீனே! இவிடெ வரு.]).
குற்றியலகரத்திற்கு வருவோம். இங்கே, அங்கே போன்றவை பேச்சுத்தமிழில் இங்க, அங்க என்றே புழக்கத்திலுள்ளது. இதில் 'இங்க, அங்க' ஆகிய சொற்களில் ஈற்று ஒலிகள் 'அ' ஒலியாக இல்லாமல் 'எ'வுக்கும் 'அ'வுக்கும் இடைப்பட்ட ஒரு ஒலியாகவே ஒலிக்கப்படுகிறது. அதன் உயிரொலியை இக்கட்டுரைக்காக '@' எனும் குறியைக்கொண்டு குறித்துக்கொள்கிறேன். (குறிப்பு: பல பள்ளிகளில், குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் சொல்லிக்கொடுக்கும்போது, 'அ'வுக்குப்பதிலாக '@' என்றே சொல்லிக்கொடுக்கிறார்கள். அதாவது: @, ஆ, இ, ஈ... க@, ங@, ச@, ஞ@.. இது தவறு என எண்ணுகிறேன்.)
சொல்லின் ஈற்றில் வரும் 'அ' ஒலியானது குன்றுவதை குற்றியலகரம் எனலாமா?
கூகுளில் குற்றியலகரம் எனத்தேடிப்பார்த்ததில் திரு.மணி மணிவண்ணன், சில காலம் முன்பு மின்தமிழில் யாரும் பதிலிடாக் கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார்.
https://groups.google.com/forum/m/#!topic/mintamil/NkhLjFNjqf0
நன்றி
No comments:
Post a Comment