Sunday, January 23, 2022

தற்சமம், தற்பவம்

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

கிரந்த எழுத்து உருவாகி அறுநூற்று ஆண்டுகள் கடந்து கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில், நன்னூல் எனும் இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர், தற்சமம் (அதாவது, வேற்றுமொழிச் சொற்களை ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுவது) மற்றும் தற்பவம் (அதாவது, வேற்றுமொழிச் சொற்களை ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் அல்லது தமிழ் சொல்லாக்க இலக்கணப்படி எழுதுவது) எனப் பிரித்து இலக்கணம் வகுத்திருந்தார்.

சங்கதம், பாகதம், பாரசீகம், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தமிழிலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட,  பிறமொழி ஒலிக்காக தமிழ் எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத, வேற்றுமொழிச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் பிறமொழிகளிலும் ஒன்றுக்கொன்று நிகரான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளாலான சொற்கள் இவை, என்பது இதன் கருத்து.

சங்கதம், பாகதம், பாரசீகம், ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் மட்டும் உள்ள ஆனால் தமிழில் இல்லாத எழுத்தொலிகள் கொண்ட வேற்றுமொழிச் சொற்களில் உள்ள ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத வேற்றுமொழி ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இவை,  என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம், விமானம் போன்ற வடசொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம், சாமி, இலக்குவன், கிரந்தம், சன்னியாசி போன்ற வடசொற்களில் உள்ள சங்கத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

[[http://thirutamil.blogspot.com/2008/05/4.html]]

குறிப்பு: தற்சமம், தற்பவம் ஆகிய இரு சொற்களுமே தற்பவச் சொற்களே.  ஆம், இவ்விரு சொற்களும் சக்கதச் சொற்கள். அவை தத்மம் மற்றும் தத்வம் ஆகும்.


No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...