Sunday, January 23, 2022

 அ

உலக மொழிகளின் எழுத்துக்களானவை இயற்கையாகவே  மூவகையான குறியீடுகளால் உருவாக்கப்பட்டிருக்கும்..

௧} புள்ளி

௨} நேர்கோடு

௩} வளைகோடு

* நேர்கோடானது 

.     (அ) செங்குத்துக்கோடு 

.     (ஆ) குறுக்குக்கோடு 

.     (இ) சாய்கோடு 

.   என மூவகைப்படும்.

* வளைகோடானது 

.    (அ) ஆரம் 

.    (ஆ) வட்டம்/சுழி 

.   என இருவகைப்படும்.

எந்த ஒரு படத்தையும் எழுத்தையும் மேற்சொன்ன குறியீடுகளால் வரைந்துவிடலாம்.

தமிழின் முதல் எழுத்தான 'அ'  என்பதானது "வட்டம்", "ஆரம்", "குறுக்குக்கோடு", "செங்குத்துக்கோடு" என நான்கு குறியீடுகளைக்கொண்டது.  அந்த "செங்குத்துக்கோடு" தனை சற்று சரித்தெழுதி அதனை ஒரு "சாய்கோடாகவும்" ஆக்கலாம் (பலரும் அவ்வாறு எழுதுவர்).  'அ' மட்டும் எழுதிப்பழகிவிட்டால் போதும் உலகிலுள்ள 90% எழுத்துக்களையும் எளிதில்  எழுதிப்பழகிவிடலாம். 

'இ'யும் எழுதிப்பழகிவிட்டால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், பர்மியம் போன்ற 5% உலக எழுத்துக்களையும் எளிதில் கற்றுவிடலாம்.

நுணுக்கமான புள்ளியுடன் கூடிய 'ஈ'யையும் எழுதிப்பழகிவிட்டால் மிச்சமிருக்கும் 5% உலக எழுத்துக்களும் நமக்கு எளிதிலும் எளிது..

இப்போது சொல்லுங்கள் எந்த மொழியின் எழுத்துக்கள் அறிவியல் நுணுக்கம் கொண்டது என்று...

- இலங்கை திரு செயராசு

No comments:

Post a Comment

தொண்ணூற்றொன்பது வகையான மலர்கள்

குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழியரும் குவித்து வளையாடியதாக கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்றொன்பது வகையான மலர்களும் ...............