கண்ணுக்கு உணவு
உங்களுக்கு கண்பார்வையில் தோய்வு உள்ளதா? அதை முன்னேற்ற உங்கள் அன்றாட உணவில் கீழ்காணும் சத்துக்கள் அத்தனையும் இருந்திடல் வேண்டும்.
௧} உயிர்ச்சத்து A, C, E (வைட்டமின்)௨} ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்௩} உலுடெயின் (Lutein)௪} செக்சாந்தின் (zeaxanthin)௫} துத்தநாகம்௬} புரதம்
இச்சத்துக்கள் அத்தனையும் நீங்கள் முழுமையாகப்பெற்றிட கீழ்காணும் ஆறு வகை உணவுகளையும் நம் அன்றாட உணவோடு சேர்த்துக்கொள்ளுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
௧} கரும்பச்சை இலைகள் (கீரை, கறிவேப்பிலை, புரோகொலி)௨} பட்டாணி, பயிறு, பருப்பு, அவரை, மொச்சை, பீன்சு, அவகாடோ௩} முழு கூலம் (தானியம்), சூரியகாந்தி விதை௪} நாரத்தையினப் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு), பெரி பழங்கள்௫} கொட்டைகள் (பாதாம், பிஸ்தா, வால்னட்), ஆளிவிதை (Flax), ஆளிஎண்ணெய்௬} பலநிறங்கள் கொண்ட காய்கள், கனிகள், கிழங்குகள் (கேரட், சீனிக்கிழங்கு)
No comments:
Post a Comment