Monday, February 14, 2022

கரிவண்டி

 கரிவண்டி

1983ல் என் அத்தைமகள் கீதா அக்காவின் திருமணத்துக்காக முதன்முதலாக பாம்பே வரும்வழியில்தான் நிலக்கரியிலியங்கும் தொடரியுந்துகளை நிறைய பார்த்தேன்.. இவ்வகையான உந்துகளை எங்காவது பார்க்கும்போதெல்லாம் கூஊஊ.. கூஊஊஊ என கூச்சலிட்டுக்கோண்டே வந்தோம், நானும் எங்கள் கூடவே வந்த என் அத்தான் நாகுவும். பூனே மலை ஏற்றத்தில் இழுவிசைக்காக இரு கரியுந்துகளை தொடரியின் இரு முனைகளிலும் பூட்டியிருந்தார்கள்.  எனக்கும்  நாகுவுக்கும் ஒரே மகிழ்ச்சி.. கம்பி சாளரத்தில் கன்னத்தை அழுத்தி  முடிந்தவரை கரியந்தும் அதன் குபுகுபு புகையும் தெரிகிறதா என எட்டிப்பார்த்துக்கொண்டே இருந்தோம்..  எங்கள் இருவரின்  முகத்திலும் ஒரே புகைக்கரி.. அந்த மகிழ்ச்சிக்கு ஈடிணையே இல்லை... அதற்குமுன்பும் அதன்பிறகும் கரிவண்டியை நேரில் பார்க்கவில்லை.. ஏதொ ஒரு நிறுத்ததில் தண்டவாளம் அருகே கடந்த நிலக்கரிக்கட்டியை இறக்கி எடுத்தோம்.. யாரும் பார்க்கவில்லை..   கடப்பாவில் நின்றபோது  தண்டவாளத்தினருகே குவிக்கப்பட்டுகிடந்த கடப்பா கற்களை எடுக்க இரண்டாவது முறையாக இறங்கியபோது எங்கள் இருவரையும் காணவில்லை எனத்தேடிவந்த அப்பா பார்த்துவிட்டார்.. இருவருக்கும் முதுகில் அடி வெளுத்துவிட்டார்...




No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...