Tuesday, February 22, 2022

ஒளியாடி நரம்பணு

 ஒளியாடி நரம்பணு

திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், உங்களுக்கு விருப்பமான நடிகர், மற்றொரு நடிகரை ஓங்கி அடிப்பது மாதிரி 'நடிக்கும்போது',  அதை பர்த்துக்கொண்டிருக்கும் நீங்கள், உங்களை அறியாமல் கையை லேசாக சட்டென்று நகர்த்துவதன் காரணம்... உங்கள் மூளையினுள் உள்ள ஒளியாடி நரம்பணுக்கள்.... உங்களுக்குள் இரக்கம், அன்பு, காதல் போன்ற உணர்ச்சிகளை/பண்புகளை ஏற்படுத்துவதும் இந்த நரம்பணுக்களே... ஒளியாடி நரம்பணுக்களின் செயல்பாடுகளின் குறைபாடே மந்தர்களின் தன்னுழப்பலுக்கு (ஆட்டிசம்) காரணமாகும்.. ஒளியாடி நரம்பணுக்களின் இருப்பானது நிரூபிக்கப்படாத ஒன்று.. நிரூபிக்கப்படாமலே போகலாம், காரணம் அவை கொள்கைரீதியான நரம்பணுக்களே.. ஆனால் பல ஆராய்ச்சிகளின் முடிவுகள் ஒளியாடி நரம்பணுக்களின் இருப்பை நோக்கியே செல்கின்றன..  ஒருவேளை மொத்தமூளையின் செயல்பாடும் ஒன்றிணைந்து, இவ்வகையான  நரம்மணுக்களை ஒரு மாயை போல உருவகப்படுத்தலாம்.. தன்னுழப்பல் போன்ற குறைபாடுகளிலிருந்து மெல்லமெல்ல விடுபட, ஒளியாடி நரம்பணுக்களை நோக்கி நகர்த்தப்படும் காய்கள் பலநேரம் பலனளிக்கிறது என கண்டறிய முடிகிறது.

விக்கி: ஒளியாடி நரம்பணு


No comments:

Post a Comment

கல்வியின் தரம்

கல்வியின் தரம் நேற்று புவனேசுவரைச் சோர்ந்த ஒரு சிறந்த! கல்லூரியில்  நான்காண்டுப் படிப்பான தொழில்நுட்பப் பொறியியலில் கணினியியலில் இளங்கலைப் ப...