Friday, February 4, 2022

தமிழ்ச் சின்னமும் அன்னையும்

தமிழ்ச் சின்னமும் அன்னையும்


பல சமயதினரும் தனித்த அடையாளங்கள் கொண்டோரும் ஓன்றிணைந்து வாழும் தமிழ்நாட்டின் மாநில அரசின் சின்னமானது ஒரு இந்துக் கோயிலின் கோபுரமாக உள்ளதே, என எனக்கு இந்த கேள்வி பலமுறை வந்ததுண்டு.  ஒருசில பிற மாநில அரசுகளின் சின்னங்ககளைப் பார்த்தேன்.  அவர்கள் அந்தந்த மாநிலப்பகுதியை ஆண்ட கடைசி மன்னராட்சியின்போது பயன்படுத்தப்பட்ட அரசச் சின்னத்தையோ அதன் மருவலையோ பயன்படுத்துகின்றனர்.

தமிழ் மண்ணிற்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லை. ஒரு சில குறுநில மன்னர்களைத்தவிர மற்ற மொத்த இடத்தையும் கடைசியில் ஆண்டது பிரித்தானிய அரசு.  ஆதலால் அதற்கு முன்பாக இருந்துவந்த தமிழ் பேசும் அரசுகளின் முத்திரைகளை பார்கலானேன்.

சேரன்:


வில்-அம்பு
மற்றும் அங்குசமும் யானையும்

சோழன்:


புலி
மற்றும் இருமீன்களும் காட்டுப் பன்றியும் ஆமையும் சொசுத்திக்கும் குத்து விளக்கும் வெண்கொற்றக்குடையூம் வெண்சாமரமும் கதிரவனூம்.  இந்த சின்னத்தில் கதிரவன் இல்லை என்றாலும் சோழ நாணயங்களில் எல்லாம் கதிரவன் இருந்ததன், காரணம் சோழர்கள் தங்களை கதிரவ வழித்தோன்றல்களாக கூறிக்கொண்டனர்.  நீங்கள் இங்கு காண்பது இராசராசனின் அரசுச்சின்னம்.  ஒருசில சோழச் சின்னங்களில் வில்லும்-அம்பும் சேர்ப்பட்டிருந்தன.  புலியும் கதிரவனும் தான் அடிப்படை சின்னங்கள் என்றாலும், பாண்டிய நாட்டை சோழர்கள் ஆண்டபோது அவர்களது சின்னமான மீன்களையும், சேர நாட்டை ஆண்டபோது வில்லும் அம்பையும், சாளுக்கியர்களை ஆண்டபோது காட்டுப் பன்றியையும் தங்கள் சின்னத்தில் சேர்த்துக்கொண்டனர். இதே பழக்கம் பாண்டிய மற்றும் பல்லவ நாட்டு முத்திரையிலும் காணமுடிந்தது.

பாண்டியன்:






மீன் அ| இருமீன்கள்
மற்றும் யானையும் சூலாயிதமும், பிறையும் விண்மீனும், இருமீன்களும்.

பல்லவன்:




காளை
மற்றும் பாம்பும் பிறையும், சங்கு மற்றும் சொசுத்திகும் தாமரையும், இருமீன்களும்.  பல்லவன் அடிப்படையில் தெலுங்கு வடுகன், ஆரியம் போற்றுபவன் என்றாலும் காலப்போக்கில் தமிழை நிறையப் பேசியுள்ளான்.

காளபிரன்:

கன்னட வடுகனான `காளபிரன்` தமிழகத்தை ஆண்டது நானூறு ஆண்டுகள் என்றாலும் அவர்களது அரசாட்சியைப் பற்றி இன்றளவும்  சொல்லிக்கொள்கிற அளவுக்கு சான்றுகள் ஏதும் பெரிதாகக் கிடைக்கவில்லை.  அவர்கள் பயன்படுத்திய சின்னங்களும் கிடைக்கவில்லை. ஆனால் இவர்களது ஆட்சியில் தான் தமிழ் செழித்தோங்கிற்று என்றும் ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுங்காப்பியங்க்கள் திருக்குறள் போன்ற நூல்கள்  இயற்றப்பட்டன என்றும் வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.

இதில் நாயக்கனையும், பாளையக்காரர்களையும் மதுரை சுல்தானையும் ஆற்காட்டு நவாபையும் தஞ்சை மராட்டியனையும் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் சமசுத்தானத்தையும் இடாய்ச்சு, பிரஞ்சு மற்றும் பிரித்தானிய அரசுகளையும்  நான் சேர்க்கவில்லை. என்றாலும் கூடுதலான ஆண்டுகள் ஆண்ட நாயக்கன் காளையையே சின்னமாகக் கொண்டிருந்தான்.

இப்போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய தமிழகத்தின் பல அரசுகளினா சின்னங்களை ஒன்றிணைத்து ஒற்றைச் சின்னமாக உருவாக்கினால் அது எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணத்தில் உருவாக்கியத்தை இங்கே பாருங்கள் 


அதாவது, மீனின் வால் மற்றும் வயிற்றுப்பகுதியுடன் காளையின் கொம்பு÷திமிலோடு கூடிய புலிமுகம் கொண்டு யானையின் துதிக்கையும் கொண்ட யாளி போன்ற ஒட்டு விலங்கானது, கையில் வில்லும் அம்பும் ஏந்தி, கதிரவன், விண்மீன், பிறைநிலா, சங்கு தாமரை, சொஸ்திக் மற்றும் அசோகனின் நான்குதலை சிங்கச் சின்னமும் புடைசூழ அமைந்தது.

பார்க்க நன்றாகவே இல்லை. என் வடிவமைப்பு சொதப்பிவிட்டது போலும்.

இதில் சொசுதிகம், சூலாயுதம், பாம்பு போன்ற  மதச்சார்புடைய சின்னங்களை விட்டுவிட்டேன்.

சில ஆண்டுகளுக்குப்பிறகு இதே அடிப்படையில் தமிழ் அன்னையும் வடிவமைத்திட ஒரு எண்ணம் எழுந்தது.  அதன்படி, காலாக மீன்வாலும் புலித்தலையும் கொணடு, நிற்கும் கடற்கன்னி (அல்லது கடறாடவன்), ஐந்திணை நிலங்கள் சூழ, ஒரு கையில் பூட்டிய வில்லம்பையும் மறுகையில் சங்கத்தமிழ், காப்பியங்கள், திருக்குறள் போன்ற ஏடுகள் ஆகிய தமிழர் அடையாளங்களை வைத்திருக்கும் தமிழன்னை என்ற என் எண்ணத்தை பேசுபுக் வாயிலாக வெளியிட்டு, இதனை யாரேனுப் படமாக வரைந்துதர இயலுமா என நண்பர்களிடையே வினவியிருந்தேன்.  இந்த என் எண்ணத்தை பென்சில் படம்வரைத்து அனுப்பியிருந்த என் பேசுபுக் நண்பர் திரு.சுகந்திக்கு மிக்க நன்றி. 


சும்மா ஒரு வெட்டிவேலை தான். 😊


No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...