எதற்கு -> எவ்வாறு -> எதனை
ஏதாதது உருப்படியான செயலை செய்ய நினைக்கிறீர்கள் என்றால், எதனை செய்யப்போகிறீர்கள், எவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்று நினைப்பதற்கு முன் முதலில் "எதற்கு" எதையாவது செய்யப்போகிறீர்கள் என நினைத்துப்பாருங்கள். அதற்கான காரணங்களை அதன் ஆழங்களில் சென்று எண்ணிப்பார்த்து ஆராயுங்கள். அதன் விடையை அத்துறை சார்ந்த வல்லுனர்கள் பலரிடம் சொல்லிப்பாருங்கள். அதற்குரிய அவர்களது கருத்துக்களையும் ஆராயுங்கள். அதில் உளநிறைவு ஏற்பட்டால், அவைகளை "எவ்வாறு" செய்யப்போகிறீர்கள் என ஆராயுங்கள். பின்னர் "எதனை" செய்யப்போகிறீர்கள் என முடிவெடுங்கள்.
.......எதற்கு -> எவ்வாறு -> எதனை.......
"எதற்கு" என்ற கேள்வியானது, உங்களின் உள்ளத்தின் ஆழத்தில் உறைந்துள்ள மெய்யான விருப்புக்களையும் வெறுப்புக்களையும் வெளிக்கொணரும்.
"எவ்வாறு" என்பதானது, உங்களின் திறம் வளம், செல்வம், பாதுகாப்பு, உங்களால் பெறயியலும் உதவிகள் போன்றவற்றின் அளவை வெளிக்கொணரும்.
"எதனை" என்பது மேற்கூறிய முடிவுகளின் அடிப்படையில், உங்களுக்குக் கிட்டியிருக்கும் உங்களைப்பற்றியான அறிவின் அடிப்படையில், என்னென்ன செய்யப்போகிறீர்கள் என்பதை முடிவுசெய்து அதற்குரிய செயலை நோக்கி இயங்கிடும் பக்குவத்தை அளித்திடும்.
- சைமன் சினெக்
No comments:
Post a Comment