Friday, May 27, 2022

எடுக்கும் முடிவுகளில் ஐயம் கொள்ளாதவர்கள்

எடுக்கும் முடிவுகளில் ஐயம் கொள்ளாதவர்கள்


மூளையின் செயல்பாடு பிறழியவர்கு, தாங்கள் செய்யும் தவறுகளை அவர்களால் உணரமுடியாது.  அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுகளிலும் அவர்களுக்கு துளியும் ஐயம் இருக்காது.  அதில் முழு நம்பிக்கையோடு இருப்பர்.  அதன் விளைவுகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு மற்றவர்களே காரணம் என முழு உள்ளத்தோடு நம்பியவண்ணம் பழிபோடுவர்.  அவர்களுக்கு  தாங்கள் செய்வதில் தவறேதும் இருக்காது என்று  அத்தனை உறுதிப்பாடும் தன்னம்பிக்கையும் இருக்கும்.  இவர்கள், தற்போது எந்த சமூக/பொருளாதார நிலையில் இருந்தாலும், தங்களை மீமிக உயர்வாகவும் மற்ற அனைவரையும் இழிநிலையிலும் வைத்துப் பார்ப்பவர்களாகவும் இருப்பர்.  இப்படிப்பட்டவர்கள் ஒன்றிலே பொதுமக்கள் இடையில் ஒரு முட்டாளாக வலம்வருவர் அல்லது ஒரு கொள்கைப்பிடிப்போடு இருக்கும் குழுவுக்குத் தலைவராக இருப்பர்.   இப்படிப்பட்ட தலைவர்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தால்  ஒரு மோசமான கொடுங்கோலராகத் திகழ்வதற்கு 99 விழுக்காடு வாய்ப்பு உள்ளது.

அதேவேளை, மூளையின் செயல்பாட்டில் ஓரளவு சமநிலை கொண்டவர்கள்  எப்பொழுதுமே தாங்கள் எடுக்கும் முடிவுகளின் மீதும் அதன் விளைவுகளின் மீதும் பல பரிமாணங்களில் ஐயப்படுபவர்கள்.  இதனால் பல முடிவுகளை வேகமாக எடுத்திட திணறுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படி ஐயங்கள் நிறையக்கொண்டவர்கள், தாங்கள் எடுத்த முடிவை துளியும் ஐயப்படாமல் முழு நம்பிக்கைகொள்வர்களை எளிமையாக தலைவர்களாக ஏற்று அவர்களின் முடிவுகளின்படி செயல்படத்தொடங்குவதற்கு 99 விழுக்காடு வாய்ப்பு உள்ளது.

- பெர்டிரண்டு ஆர்தர் வில்லியம் இரசல், ஏரணவியல் மெய்யியலாளர்.


No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...