Friday, October 28, 2022

மகிமை

ண்மையில் எனது அலுவலக நண்பன் அருணின் தம்பியின் திருமண வரவேற்ப்புக்குச் சென்றிருந்தேன்.   அவன் எனது முன்னாள் அலுவலக நண்பனான சுந்தர் உட்பட பல பழைய நண்பர்களையும் அழைத்திருந்தான்.  கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.  அலுவலகத்தில் சுந்தரும் நானும் அடுத்தடுத்த இருக்கையாளர்களாக இருந்தோம். இருவரும் வெகுநேரம் பழைய கதைகளெல்லாம் கதைத்துக்கொண்டிருந்தோம்.  அருணும் சுந்தரும் நானும் ஒருமாவட்டத்துக்காரர்கள் என்பது சிறப்புச்செய்தி.  

சுந்தர் பேசும்போது அடிக்கடி தேவனுக்கு மகிமை என்பதைச் சொல்லிக்கொண்டிருந்தான்.  அவன் தென்னிந்தியத் திருச்சபையைச் சார்ந்தவன் என்பதை நன்கு அறிவேன்.  ஆனால் இந்த "அடிக்கடி தேவனுக்கு மகிமை" என்பதானது எனக்கு சற்று விந்தையாகப் பட்டது.  எனக்குத் தெரிந்த சுந்தர்  இவ்வளவு இறைப்பற்றாளனும் கிடையாது.  என்ன ஏது, என நான் மெல்லக் கேட்டபோது, ஆனால் அவன் அடுத்தடுத்து பேசியது எனக்கு சற்று அதிர்ச்சியூட்டியது;

௧} அவனது வீட்டிலுள்ளோர் எவரும் இதுவரையிலும் எந்த பெருந்தொற்றுத் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை.

௨} தன் திருமண வாழ்வைத் துறந்து முழுநேர போதகர் ஆகப்போகிறினாம்

௩} அவன் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில், சேயல்திறக் குறைபாடுக்காக இதுவரை இருமுறை எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.  ஏனென்றால் செபம் பாடச் செல்வதற்கும் நற்செய்தி பரப்பச் செல்வதற்கும் அடிக்கடிச் சேன்றுவிடுவதால் அலுவலகப் பணியில் கவனக்குறைவும் வேலை நாள்களில் துண்டும் விழுந்துவிடுகிறது.

௪} அவனது ஊரில் தென்னிந்திய திருச்சபையினர் முழுவதுமாக வாழ்ந்த ஒரு தேருவினர் அத்தனை பேரும் பெந்தகோசுத்தேவின் துணைப்பிரிவான 'கடவுளின் கூட்டம்' என்பதற்கு, இவனது வீட்டாரையும் சேர்த்து, கடந்த 2015ம் ஆண்டு மாறிவிட்டார்கள்.

[[என்னடா நடக்குது!.]] 

தென்னிந்திய திருச்சபை என்பதற்கும் கடவுளின் கூட்டம் என்பதற்கும் அப்படி என்ற வேறுபாடு என ஐய்யங்கொண்டு எனக்கேட்டேன்.  அதற்கு அவன் தெ.இ.தி ஊழியத்தில் ஈடுபட்டு நற்செய்தியைப் பரப்பி அறுவடையில் ஈடுபடுவதே இல்லை என்பதால், அது கிறித்துவ சமயத்தின் அடிப்படைக் கடமைகளிலிருந்து வழுவுகிறது.  கேத்தலிக்குகளும் அக்கடமையை செய்யாதது மட்டுமல்லாமல் தேவனால் வெறுக்கப்பட்ட சிலை வழிபாட்டையும் மேற்கொள்கிறார்கள்.  

நாங்கள் இருவரும் விடைபெறுவதற்கு சற்று முன்னர், சுந்தர் என்னைப் பார்த்து "நண்பா, நீங்களூம் தேவனையும் வாசியுங்கள்.  உங்களுக்கும் உங்கள் சுற்றத்தாருக்கும் தேவன் கட்டாயமாக திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்"..

டேய்...!! 

"சரி, பத்திரமாக போய்வாருங்கள்.  தேவனின் ஆசி  உங்களுக்கு எப்போதும் உடனிருக்கும்"  எனக்கூறி வழியனுப்பி வைத்தேன்.

No comments:

Post a Comment

பாலு

 பாலு "நான் என்னத் தப்புச் செய்தேன் கண்ணே உன் காதல் விட்டு என்னைக் கொல்ல...."  அலுவலகம் விட்டு ஓலா மகிழுத்துக்குள் ஏறும்போது, இப்ப...