சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து நெருங்கிய நண்பர்களுக்கு, ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அவர்களின் உரையாடலில் ஒரு பகுதி:
:
#நண்1: ஆமாம், உங்கள் குழந்தைகளின் பெயர் என்னென்ன? அதற்கு முன்னால் எனது மகளின் பெயரைச் சொல்லிவிடுகிறேன். அவள் பெயர் 'கிறிசா பாபு'. பொறியியல் முதலாம் ஆண்டு படிக்கிறாள்.
#நண்2: எனது மூன்று அகவை மகனின் பெயர் 'துருவ் தர்சன்'
#நண்1: அருமை!
#நண்3: எனது மகனின் பெயர் 'பிராங்க்லின்'. ஆறாவது படிக்கிறான்.
#நண்1: அருமை! முழுப்பெயரைச் சொல்லுப்பா?
#நண்3: [சிரித்துக்கொண்டே] 'பிராங்க்லின் உரூசுவெல்ட் செபர்சன்'..
#நண்1: செமசெம. பெயரைக் கேட்கவே கெத்தா இருக்கு.
#நண்4: என் மகள் பெயர் 'அபீகா ஆப்ரீன்'. எட்டாவது வகுப்பு படிக்கிறாள்.
#நண்2: போனதடவை #நண்4 வீட்டுக்குப் போயிருந்தபோது 'அபீகா' மிக அழகாகப் பாடினாள்.
#நண்5: எந்தன் மகனின் பெயர் 'கவின்வழுதி'. ஏழாவது படிக்கிறாள்.
#நண்1: ஓ!!!!, 'கவின்வழுதி' என்றால் என்ன பொருள்?
:
No comments:
Post a Comment