புழு
அசோக்நகர் (உயர்தர) சரவண பவனில் சிலபல ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பகல் நேர உணவில், சாம்பாரில் மிதந்த காய்கறித் துண்டுகளிடையே சுண்டுவிரல் நீளத்துக்கு ஒரு புழு. விடுதி நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. வாயிலில் வேறு ஒரு 20-30 பேர் பெயரைக் கொடுத்துவிட்டு காத்திருந்தார்கள். நான் கூட முதலில் அதனை கொத்வரங்காய் எனத் தான் நினைத்தேன். பார்க்கவும் அப்படித்தான் இருந்தது. ஒரு குருட்டு ஐயத்தில் அதனை எடுத்து அருகில் பார்த்தபோது கொத்தவரங்காய்க்கு கண்ணு மூக்கெல்லாம் இருக்கு. ஆகா..
மெல்ல எழுந்து உணவக மேற்பார்வேயாளரை கை உயர்த்தி அழைத்தேன். சுற்றியிருந்தவர்கள் பசியிலும் உணவின் சூட்டிலும் சுவையிலும் தங்களை மறந்து உணவருந்திக்கொண்டிருந்தனர். அவர் அருகில் வந்ததும் எதுவும் பேசாமல் கண்ணசைவில் என் விரலின் அருகே காண்பித்தேன். அதை கவனித்த அவர் என் காதருகே வந்து "இந்த தட்டை அப்படியே நான் எடுத்துக்கொண்டுபோய், வேறு புதிய உணவுத் தட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன்" என்றார். அதற்கு நான் "இல்லை, புதிய தட்டு கொண்டுவரவேண்டாம். நான் கிளம்புகிறேன்" என அவர் காதருகே கூறிவிட்டு, வெளியேறினேன். கூடவே வந்த அவர், இதை பொறுத்தருளக் கூறிவிட்டு உணவுக்காக நான் ஏற்கனவே செலுத்தியிருந்த பணத்தையும் காசாளரிடமிருந்து பெற்றுத்தந்தார்.
மள்றொரு முறை திருப்பதியில் எனது அத்தை மகனோடு போயிருந்தபோது, ஒரு மாலை வேளை, அங்குள்ள ஒரு உணவுவிடுதியில் கொடுக்கப்பட்ட தோசைக்கான சட்னி கடுமையாக ஊசிப்போயிருந்தது. சட்டென சூடான அத்தை மகன் அங்கிருந்த சேவகரை திட்டலானான். அவனை நான் ஆற்ற முயன்றாலும், அவன் கேட்பதாக இல்லை. "உன் மேற்பார்வையாளரைக் கூப்பிடு, மேளாளரைக் கூபாபிடு" என மிகையாக சூடாகிக் கத்திக்கொண்டிருந்தான். எனகும் வேறு வழி தெரியவில்லை. நானும் எழுந்து என் அத்தை மகனுக்குத் துணையாகப் பேசலானேன். சபாரி உடை அணிந்த இருவர் வந்து எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சட்னி கிண்ணத்தை முகர்ந்துபார்த்துவிட்டு "சட்னி கெட்டெல்லாம் பொகவில்லையே, நன்றாகத்தானே இருக்கிறது" என்று சற்று கராராகவே கூறிவிட்டனர். அப்போதுதான் அதை கவனித்தேன். சுற்றியிருந்த அனைவரும் இதே சட்னகயைத் தான் சுவைத்துச் சுவைத்து இட்லியோ தோசையோ சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எனக்கே ஐயம் வந்து மீண்டுமொரு முறை அந்த சட்னியை முகர்ந்து பார்த்தேன். உண்மையில் அது கெட்டே தான் போயிருந்தது. "நீங்கள் அப்பட்ட பொய் சொல்கிறீர்கள். இது கெட்டுதான் பொயிருக்கிறது" என்னதற்கு "உங்களுக்காக புதிய சட்னி எல்லாம் அரைக்கமுடியாது. உங்களுக்கு வேண்டுமென்றால் இதைச் சாப்பிடுங்கள், இல்லையென்றால் எவருக்கும் மேலும் தொந்தரவு கொடுக்காமல்,- இடத்தைக் காலிபண்ணுகள்" என்று சற்று உரக்கவே கூறிவிட்டு நகர்ந்தனர். நாங்களும் கடுப்பில் வெளியேறினோம். அங்கிருந்தவர் அனைவரும் எங்களை நக்சல்களைப் பார்பதாக எனக்குத் தோன்றிற்று.
உணவு விடுதியாளர்கள் நமைப்போல ஆயிரம் ஆயிரம் பேரை நாள்தோறும் பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment