வாழ்க்கை
அடிப்படையற்ற வாழ்க்கையடா - இதில்அடிக்கடி கவலை ஏதுக்கடா..
அழுகையும் புலம்பலும் பொருளற்றது - உள
அமைதி மட்டுமே நிறைவுதரும்
இடரென்பது குறுவரலாறு - நுகர்
இனிமை நொடியில் மறைபாடு..
இம்மையின்பின் உனை நினைப்பது யார் - இந்த
இயற்கைக்கு நீ வெறும் இமைப் பொழுது..
உறக்கக் கனவுகள் கானல் நீர் - நம்
உய்யக் கனவொரு கோதிக்கும் நீர்...
உளமுறிவும் பெறும் இன்சுவையும் - அது
உருகிடும் நேரமே வாழ்கையடா...
எத்தனை நம்முள் எண்ணங்கள் - அதில்
ஏக்கமும் நோக்கமும் பெரும்பகுதி..
எமன் வரவை நீ நினையாதே - உயிர்
எல்லையில்லை என முடித்துவிடு..
ஒரு ஞாலம் அதில் ஒரு யாக்கை - பின்
ஒற்றை உயிர் மறு உடல் பெறுமோ..
இன்னுலகோ இல்லை தீயுலகோ - இதை
ஒருவரு மறியார் மகிழ்விலிரு..
No comments:
Post a Comment