வாழ்வெனும் சோலை
வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும்.
மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.
வாழ்வெனும் சோலை...
நீங்கள் எனக்கே உடைமை.
என் கனவோ உங்கள் கடமை. இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கும் விடிந்திருக்கும். நீங்கள் எனக்கே உடைமை.
என் கனவோ உங்கள் கடமை. இவையிரண்டும் என்றும் நமக்கு ஏற்புடைமை. உங்களுள்ளம் மகிழும்நேரம் நமக்கு விடிந்திருக்கும்.
எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.
வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும்.
மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.
வாழ்வெனும் சோலை...
நான் அருகே இருப்பேன். நாம் இன்னும் நெருங்கி இருப்போம்.
இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.
மணமாலை மாற்றிக்கொண்டோம் நாம் இன்னும் நெருங்கிக்கொள்வோம். இன்னும் நெருங்கிக்கொள்வோம்.
நான் அருகே இருப்பேன்.
இடைவெளி இல்லாமல் நாம் இன்னும் இணைந்து இருப்போம்.
மணமாலை மாற்றிக்கொண்டோம் இன்னும் நெருங்கிக்கொள்வோம்.
எந்தன் சிறுதேனும் உங்கள் சிறுபூவும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.
வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும்.
மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.
வாழ்வெனும் சோலை...
எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம். அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்!
நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.
எனது அன்பு மன்னவா, நீ எனது வாழ்க்கையின் உயிராம். அன்பெனும் பூக்கள் பூத்தால், நம் காதலும் மலராம்!
நீங்கள் என் பகலிலின் ஞாயிறு, இரவானால் நிவும் மீனும்.
எந்தன் சிறுபூவும் உங்கள் சிறுதேனும் ஒன்றாகிப் போவதே, நம் செல்வம் ஆகும்.
வாழ்வெனும் சோலை முழுவதுமே மணம் கமழும் பூக் குலுங்கும்.
மகிழ்ச்சியில் அரும்பும் மொட்டுகள் மலர் குலுங்கி உளம் செழிக்கும்.
வாழ்வெனும் சோலை...
இவ்வளவு இனிமையான இசை கொண்ட 'சீவன் கி பகியா' என்ற. இந்திப் பாடலுக்கு காதுக்கு இனிய சொற்கள் (நமக்குப் பொருள் புரியாவிட்டாலும்) அமைத்து வரிகளும் எழுதி பாடலமைத்து இருக்கிறார்கள். சரி, அப்படி என்னதான் அந்த இந்தி வரிகளின் பொருளாக இருக்கும் என எனக்குள் ஒரே கேள்விகள். இருக்கவே இருக்கு கூகுள் மொழிபெயர்ப்பி. அதிலிட்டுப் பார்த்துவிட்டேன். வந்த மொழிபெயர்ப்பை பட்டிட்டிங்கரிங் பண்ணி அப்பாடலின் சந்தத்துக்கு ஏற்ப பொருள் மாறாது சொற்களை அங்குமிங்கும் மாற்றியமைத்து மேலே நான் இட்டிருக்கும் கவிதைமை சமைத்துவிட்டேன். பாடலின் இசையுடன் பாடிப்பாருங்கள். எங்கேனும் இடறினால் அதைத் எனக்குத் தெருவியுங்கள்.
இந்தச் செயலால் எனக்குக் கிடைத்த பட்டறிவில் நான் உணர்ந்த சில செய்திகள்:-
- தமிழை முறைப்படி கற்காது ஆங்கில வழியிலேயே பாடங்களைக் கற்ற எனக்கே, தமிழ் இவ்வளவு ஞெகிழித்தனத்தை அளிக்கிறது என்றால் (கடந்த இரு நாட்களாக பத்துப் பதினைந்துமுறை, என்னால் சொற்களை மாற்றியமைத்து பொருளையும் சுவையையும் மெருகேற்ற முடிந்தது) , சிறிதேனும் ஆழமாகத் தமிழைக் கற்றவர்கள் இன்னும் மிளிர்வான பெருட்சுவை மிகாக கவிதையை எழுதிவிடுவார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
- இந்தியில் (நிறைய பாரசீகச் சொற்களும் இபாபாடலில் உளாளதால் இதனை உருது என்றுகூடச் சொல்லிவிடலாம்) இருந்த பாடலை கோபால்தாசு என்ன நீரசு என்பவர் எழுதியுள்ளார். இவர் பத்மசிறீ, பத்மவிபூசனம் போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளார். என்றாலும் அவர் எழுதியிருந்த இக்கவிதையில் சொற்சுவை இருக்கே தவிர பொருட்சுவை என்பது துளியும் இல்லை. தமிழில் இப்படிப்பட்ட பாடல்வரிகளை டப்பாங்குத்துப் பாடல்களுகாகுத்தான் போடுவார்கள். ஆக அந்த இந்திக் கவிதையில் தரம் இல்லை என்பதே அடியேனின் கருத்து.