தமிழ் எண்கள்: 0-௦ ; 1-௧ ; 2-௨ ; 3-௩ ; 4-௪ ; 5-௫ ; 6-௬ ; 7-௭ ; 8-௮ ; 9-௯ ; 10-௰ ; 100-௱ ; 1000-௲
விட்டம் ➔ `வி`
ஆரம் ➔ `ஆ`
விட்டம் ➔ `வி`
ஆரம் ➔ `ஆ`
வட்டத்தின் சுற்றளவு:-
விட்டமோர் ஏழு செய்துதிகைவர நான்கு சேர்த்துசட்டென இரட்டி செயின்திகைப்பன சுற்றுத்தானே- காக்கைப் பாடினியம்??
விட்டம் ஓரேழு செய்து ➔ `வி × ௧ / ௭`
திகைவர நான்கு சேர்த்து ➔ `வி + ௪ × வி / ௭ `
திகைவர நான்கு சேர்த்து ➔ `வி + ௪ × வி / ௭ `
குறிப்பு: திகைவரம் = விட்டம்
சட்டென இரட்டி செயின் ➔ `௨ × ( வி + ௪ × வி / ௭ )`
➔ ` ௨ × வி + ௮ × வி / ௭`
➔ `( ௧௪ × வி + ௮ × வி ) / ௭
➔ `௨௨ / ௭ × வி`
சட்டென இரட்டி செயின் ➔ `௨ × ( வி + ௪ × வி / ௭ )`
➔ ` ௨ × வி + ௮ × வி / ௭`
➔ `( ௧௪ × வி + ௮ × வி ) / ௭
➔ `௨௨ / ௭ × வி`
இதுவே தற்போது வழங்கப்பட்டுவரும் சுற்றளவுக்கான சூத்திரமான `π × வி` அல்லது `π × ௨ × ஆ` ஆகும்
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அழகான கணக்குச் செய்யுளானது 'காக்கைப் பாடினியம்' எனும் நூலில் வருவதாக இங்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 'காக்கைப் பாடினியம்' எனும் நூலானது முழுமையாகக் கிடைக்கபெறாத யாப்பிலக்கணச் சங்கத்தமிழ் நூல் எனத் தெரிகிறது . இணையத்தில் இச்செய்யுளைப் பற்றித் தேடிப்பார்த்தமட்டில் தரமான சான்றுகள் எதுவும் கிட்டவில்லை.
எளிமைப்படுத்துதல்:-
மேலே காக்கைப்பாடினியத்தில் உள்ளது துல்லியமான கணக்குக்குப் பொருந்தும். ஆனால் அன்றாடப்.பொறியியலில் இவற்றை பயன்படுத்த இந்த அளவையும் எளிமையாக்கி கூறுகிறது, கொறுக்கையூர் காரி என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் இயற்றிய, 'கணக்கதிகாரம்' எனும் நூல்.
அப்பாடல்:-
விட்ட மதனை விரைவா யிரட்டித்துமட்டு நான்மா வதினில் மாறியே - எட்டதினில்ஏற்றியே செப்பிடி லேறும் வட்டத்தளவும்தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்- கணக்கதிகாரம் (௫௦)
இதன்படி,
விட்டம் அதனை விரைவாய் இரட்டித்து ➔ `௨ × வி`
மட்டு 'நான்மா'வதினில் மாறியே(பெருக்கல்) ➔ `௨ × வி × ௧ / ௫`
குறிப்பு: நான்மா = `௧ / ௫`
எட்டதினில் ஏற்றியே(பெருக்கல்) ➔ ௨ × வி × ௧ / ௫ × ௮`
➔ வி × ௧௬ / ௫
➔ `௩.௨ × வி` ≈ `௨௨ / ௭ × வி` ஆகும்.
விட்டம் அதனை விரைவாய் இரட்டித்து ➔ `௨ × வி`
மட்டு 'நான்மா'வதினில் மாறியே(பெருக்கல்) ➔ `௨ × வி × ௧ / ௫`
குறிப்பு: நான்மா = `௧ / ௫`
எட்டதினில் ஏற்றியே(பெருக்கல்) ➔ ௨ × வி × ௧ / ௫ × ௮`
➔ வி × ௧௬ / ௫
➔ `௩.௨ × வி` ≈ `௨௨ / ௭ × வி` ஆகும்.
நடைமுறை:-
வண்டித் தச்சர்கள் அச்சாணி செய்ய பயன்படுத்தப்படும் அளவையின் படி, விட்டத்தை மூன்றில் அரைக்கால் சேர்த்து அதை விட்டத்தோடு பெருக்கிக் கொள்கின்றனர்.
குறிப்பு: அரைக்கால் = `௧ / ௮` = ०.௧௨௫)
இதன்படி, ( ௩ + ०.௧௨௫ ) × வி = ௩.௧௨௫ × வி ஆகும்.
இவை அனைத்தையும் ஒப்புநோக்கினால் துல்லியக் கணக்கிற்கும் நடைமுறை கணக்கிற்கும் தமிழர் பாகுபடுத்தி கணக்கியல் தந்ததனை அறிந்து கொள்ளலாம்.
வட்டத்தின் பரப்பளவு:-
வட்டத்தரை கொண்டு விட்டத்தரை தாக்கசட்டெனத் தோன்றுங் குழி.- கணக்கதிகாரம் (௫௬ - ௪௯)
இதன்படி,,
வட்டத்தரை (அரைச்சுற்றளவு) = `( ௨௨ / ௭ × வி ) / ௨`
விட்டத்தரை (அரைவிட்டம் = ஆரம்) = `வி / ௨`
இதன்படி,
வட்டத்தின் பரப்பளவு = `( ௨௨ / ௭ × வி / ௨ ) × ( வி / ௨ )`
➔ `௨௨ / ௭ × வி ^ ௨ / ௪`
➔ `௨௨ / ௭ × ௪ × ஆ ^ ௨ / ௪`
➔ `௨௨ / ௭ × ஆ ^ ௨`
வட்டத்தரை (அரைச்சுற்றளவு) = `( ௨௨ / ௭ × வி ) / ௨`
விட்டத்தரை (அரைவிட்டம் = ஆரம்) = `வி / ௨`
இதன்படி,
வட்டத்தின் பரப்பளவு = `( ௨௨ / ௭ × வி / ௨ ) × ( வி / ௨ )`
➔ `௨௨ / ௭ × வி ^ ௨ / ௪`
➔ `௨௨ / ௭ × ௪ × ஆ ^ ௨ / ௪`
➔ `௨௨ / ௭ × ஆ ^ ௨`
No comments:
Post a Comment