உனை என்றுமே அறிவேன்
(அமி சீனி கோ சீனி தொமாரே)
இயற்றியது: திரு இரவீந்திரநாதன்.
தமிழாக்கம்: அடியேன்.
தமிழாக்கம்: அடியேன்.
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
பல கடல்கள் கடந்து வாழும்
அன்பேயென் அயற்பெண்ணே
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
பல கடல்கள் கடந்து வாழும்அன்பேயென் அயற்பெண்ணேஉனை என்றுமே அறிவேன் நானே,அன்பேயென் அயற்பெண்ணே
கண்டேன்,
கார்காலக் காலையில் உனைக் கண்டேன்,
இளவேனில் இரவினில் உனைக் கண்டேன்,
கண்டேனே... எந்தன் உள்ளின் உள்ளேயே,
அன்பேயென் அயற்பெண்ணே
நான் வானத்தை கேட்கலானேன்காதேங்கும் கேட்பது உந்தன் பாட்டேஉந்தன் உயிராய் இருகக்கும் நான் தானேஅயற்பெண்ணே..
ஞாலத்தை சுற்றிய பின்னே,
நானும் வந்ததிப் புதிய நாடே
இப்போ புதிதாய் நிற்பதுன் வாசல்
அன்பேயென் அயற்பெண்ணே
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
பல கடல்கள் கடந்து வாழும்
அன்பேயென் அயற்பெண்ணே
உனை என்றுமே அறிவேன் நானே,
அன்பேயென் அயற்பெண்ணே
No comments:
Post a Comment