Sunday, February 12, 2023

ஊரும் சிறப்பு உற்பத்திப்பொருளும்

ஊரும் சிறப்பு உற்பத்திப்பொருளும்

உங்கள் ஊரானது ஏதாவது ஒரு உற்பத்திப் பொருளுக்குப் புகழ்பெற்றதாக இருக்கும்.  அது இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு பொருளாகவோ ஒரு உணவுப்பொருளாகவோ வேறொரு பொதுப் பயன்பாட்டுப் பொருளாகவோ இருக்கும்.  பல ஆண்டுகளாக அப்பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் உழைப்பையும் உற்பத்தி நேர்த்தியையும் அப்பொருளின் தரத்தில் ஏற்றியிருப்பதால், அப்பொருளானது மக்களிடையே புகழ்பெற்று விளங்குகிறது.  இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் தகவல்கள் பல இடங்களிலிருந்து சேகரித்தது.  இதில் தவறுகளோ விடுபடுதலகளோ இருந்தால் அவற்றை பின்னூட்டமாகத் தெரிவியுணக்கள்.

 🌐  - புவிசார் குறியீடு பெற்றவை

உணவு வகைகள்

அம்பாசமுத்திரம்கை முறுக்கு
அய்யம்பேட்டைஅச்சுவெல்லம்
அரியலூர்கொத்தமல்லி
முந்திரி
அருப்புக்கோட்டைபக்கோடா
பால் பண்
முட்டாசு
சேவ்
ஆத்தூர்வெற்றிலை 🌐
ஆம்பூர்பிரியாணி
ஆலங்குடிவேர்க்கடலை
ஆற்காடுமக்கன் பேடா
பிரியாணி
கிசேலி
இராசிபுரம்நெய்
இராமநாதபுரம்மிளகாய்
கணவாய் மீன்
கோலா உருண்டை
இறால் ஊறுகாய்
வட்டலப்பம்
ஈத்தாமொழிநெட்டை தென்னை வகை 🌐
ஈரோடுமஞ்சள் 🌐
உசிலம்பட்டிபிஸ்கட்
உடன்குடிகருப்பட்டி 🌐
ஊட்டிவருக்கி 🌐
காரட்
காவிக்கண்டு
ஊத்துக்குளிவெண்ணை
ஏற்காடுகாப்பி
மிளகு
ஆரஞ்சு
ஒட்டன்சத்திரம்காய்கறி
கடலூர்பலாப்பழம்
முந்திரி
வேர்க்கடலை
மீன்
கடையநல்லூர்தேங்காய் சோற்று
பிரியாணி
கம்பம்திராட்சை
கம்பம்பன்னீர் திராட்சை 🌐
கரூர்தேங்காய் மிட்டாய்
கல்லிடைக்குறுச்சிஅப்பளம்
கன்னியாகுமரிமீன்குழம்பு
தேங்காய் சோறு
காஞ்சீபுரம்இட்லி
காயல்பட்டினம்கஞ்சி
மாசி
வாடா
காரைக்கால்குலாப் சாமுன்
காரைக்குடிசெட்டிநாட்டு சமையல்
பணியாரம்
மிளகு கோழிக்கறி வறுவல்
கிருஷ்ணகிரிமாம்பழம்
புட்டு
கீழக்கரைநோதல் அல்வா
குடியாத்தம்நுங்கு
இளநீர்
குமரி மாவட்டம்கிராம்பு 🌐
செம்மட்டி வெற்றிலை 🌐
தேன்மட்டி வெற்றிலை 🌐
மலைமட்டி வெற்றிலை 🌐
கும்பகோணம்டிகிரி காபி
வெற்றிலை
பூரி பாசந்தி
குழித்துறைமுந்திரி
கூத்தாநல்லூர்தம்ருட்
கொடைக்கானல்மலைப் பூண்டு 🌐
பேரிக்காய்
காய்கறி
காவிக்கண்டு
பிளம்
கோயம்பத்தூர்தொப்பை சட்னி
கசாயம்
மைசூர் பாகு
காளான்
கோவில்பட்டிகடலை மிட்டாய் 🌐
இஞ்சிமறப்பா
அச்சுவெல்லம்
சங்கரன்கொவில்ஆட்டுக்கறி பிரியானி
சாத்தூர்காராச்சேவு
வெள்ளரிப்பிஞ்சு
மிளகாய்
கருப்பட்டி மிட்டாய்
இஞ்சிமறப்பா
சாயல்குடிகருப்பட்டிக் காப்பி
சிதம்பரம்கொத்சு
சிம்மக்கல்கறிதோசை
சிறுமலைமலை வாழைப்பழம் 🌐
சுசீந்திரம்அனுமார் வடை
சுவாமிமலைகொய்யாப் பழம்
செங்கோட்டைபரோட்டா-கோழி குருமா
நாட்டுக்கோழி வறுவல்
செஞ்சிமுட்டை மிட்டாய்
சென்னைவடை கறி
சேலம்மாம்பழம் 🌐
தட்டுவடை
தயிர் வடை
செவ்வரிசி 🌐
சோழவந்தான்வெற்றிலை 🌐
தர்மபுரிபுளி
திண்டுக்கல்பிரியாணி
திருச்சிவாழைப்பழம்
பாதுசா
திருச்செந்தூர்சுத்துமிட்டாய்
திருநெல்வேலிஅல்வா
சொதி
பழக்கூழ்
திருப்பாகம்
திருவண்ணாமலைஅதிரசம்
திருவரங்கம்அக்காரவடிசல்
திருவானைக்காவல்நெய் தோசை
திருவில்லிபுத்தூர்பால்கோவா 🌐
திருவையாறுஅசோகா
தூத்துக்குடிமக்ரூன்
உப்பு
கொத்துபரோட்டா
மசுகோத் அல்வா
நெய்மிட்டாய்
தென்காசிசூரியகாந்தி
நடுக்கடைஇடியாப்பம்-ஆட்டுக்கால் பாயா
நத்தம்மாம்பழம்
புளி
தேங்காய்
நாகப்பட்டினம்கோலா மீன்
மீன் குழம்பு
நாகர்கோவில்எத்தங்க்காய் வறுவல்
முந்திரிக்கொத்து
அடை பாயாசம்
அடை அவியல்
சுருக்கா
நாமக்கல்முட்டை
பரோட்டா
நீடாமங்கலம்பால்திரட்டு
நீலகிரிஉருளைக்கிழங்கு
நீலகிரி மாவட்டம்தேயிலை 🌐
நெய்காரப்பட்டிநாட்டு வெல்லம்
பணகுடிபதநீர்
பண்ருட்டிபலாப்பழம் 🌐
முந்திரி 🌐
முந்திரி சாம்பார்
பரமக்குடிகோழிக்கறி சால்னா
பழனிபஞ்சாமிர்தம் 🌐
பள்ளிப்பாளையம்கோழிக்கறி
புதுக்கோட்டைமுட்டைமாசு
புளியன்குடிஎலுமிச்சை
பொள்ளாச்சிதேங்காய்
இளநீர்
வெல்லம்
போடிநாயக்கனூர்ஏலக்காய்
மணப்பாறைஅரிசி முறுக்கு 🌐
மதுரைசிகர்தண்டா
பருத்திப்பால்
கறி தோசை
மல்லிகைப்பூ இட்லி
பைரி (முள்ளுமுருங்கைப் பூரி)
மாயவரம்கருவாடு
மார்த்தாண்டம்தேன் 🌐
மைலாடுதுறைபில்டர் காப்பி
மசால் வடை
வாணியம்பாடிபிரியாணி
வால்பாறைதேயிலை
விருதுநகர்எண்ணெய் பரோட்டா
விருபாட்சிமலை வாழைப்பழம் 🌐
வேதாரண்யம்உப்பு
வியாசர்பாடி  - மோலேசா/மோலெட்சங்

சிறப்புப் பொருட்கள்

அரியலூர்சுண்ணாம்புக்கல்
சீமைக்காரை(சிமெந்து)
அரும்பாவூர்மரச்சிலைகள் 🌐
ஆதங்குடிதரை ஓடு
பித்தளை பாத்திரங்கள்
ஆரணிபட்டு 🌐
இராசபாளையம்நாய்
ஈரோடுதுணி
உறையூர்சுருட்டு
கடலூர்கொலு பொம்மைகள்
கரூர்கொசுவலை
போர்வை
நார்த்துணி(இலெனின்)
கன்னியாகுமரிசிப்பி அணிகலன்கள்
காங்கேயம்காளை
காஞ்சிபுரம்பட்டு 🌐
காரைக்கால்முத்து
காரைக்குடிகண்டாங்கி சேலை
கடுமண்
கும்பகோணம்பட்டு
வெண்கலப் பாத்திரம்
கொடைக்கானல்இயூகலிப்டசு தைலம்
கோயம்பத்தூர்ஈரமாவாட்டிப் பொறி 🌐
கோரா பருத்திப் புடவை 🌐
இயூகலிப்டசு தைலம்
சடேரிநாமக்கட்டி/திருநாமம் 🌐
சத்தியமங்கலம்மூங்கில் கூடைகள்
சிவகங்கை மாவட்டம்செட்டநாடு கொட்டான் (பனையோலை கூடை) 🌐
சிவகாசிவெடி, தீப்பெட்டி
சின்னாளப்பட்டிபட்டு
சுங்குடி சேலை
சுவாமிமலைவெண்கலச்சிலை 🌐
செயங்கொண்டம்கைத்தறிப் பட்டு
பருத்தி ஆடைகள்
சேலம்துருவேறா-எஃகு(எவர்சில்வர்)
வெண்பட்டு 🌐
தஞ்சாவூரதலையாட்டி பொம்மை 🌐
கதம்பம்
ஓவியத்தட்டு 🌐
வரைபடங்கள் 🌐
வீணை 🌐
நெட்டி கைவேலைப்பாடு 🌐
திண்டுக்கல்பூட்டு 🌐
புகையிலை
திருச்சிசுருட்டு
திருநெல்வேலிசெடிபுட்டா சேலை 🌐
திருபுவனம்பட்டு சேலை 🌐
திருப்பாச்சிஅரிவாள்
திருப்பூர்உள்ளாடை
டி-சட்டை
துறையுர்கைத்தறி
தங்க நகை
தைக்கல்பிரம்புப் பொருள்கள் 🌐
நாகர்கோவில்கோவில்நகை 🌐
நாகூர்குல்லா
உலுங்கி
நாச்சியார்கோவில்கோவில் குத்துவிளக்கு 🌐
நீலகிரிஇயூகலிப்டசு தைலம்
நீலகிரி மாவட்டம்புக்கூர் (தோதர் பூப்பின்னல்) 🌐
நெகமம்பருத்தி சேலை 🌐
பணகுடிசெங்கல்
பத்தமடைபாய் 🌐
பரமகுடிபட்டு சேலை
பவானிசமுக்காளம் 🌐
மதுரைமல்லிகை 🌐
மருக்கொழுந்து
சுங்குடி சேலை 🌐
மாமல்லபுரம்கற்சிலை 🌐
மானாமதுரைகுண்டு மல்லிகை
கடம்
மண்பாண்டம் 🌐
மேட்டுர்துணி
மைலாடிகற்சிலை 🌐
மைலாடுதுறைதங்க நகை
வந்தவாசிபாய்
வாலாசாபேட்டைதெரிகாட்டன்
மூங்கில் பொருட்கள்


Wednesday, February 8, 2023

ஒண்ணுக்கு

ஒண்ணுக்கு


11சே பேருந்து தக்கலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.  வில்லுக்குறி தொட்டிப்பாலம் தாண்டியாயிற்று.  கிழட்டு யானை செல்வது போல ஆடி அசைந்து சென்றது பேருந்து.  அத்தனை கூட்டம்.   ஆண்கள் கூட்டத்தை விட பெண்கள் நான்கைந்து மடங்கு இருந்தனர்.  

மாலை மூன்றரை மணிக்கே நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இப்பேருந்தில் ஏறியிருந்தேன்.   ஒரு சாளரத்தோர இருக்கை கிட்டியதில் எனக்கு சிறு மகிழ்ச்சி.  சில நிமிடங்களிலே பேருந்துக்குள் கூட்டம் திமுதிமு என ஏறத்தொடங்கினர்.  பெரும்பாலா பெண்கள் பட்டுச்சேலையும் கழுத்தும் கைகளும் நிறைய நகைகளும் அணிந்திருந்தனர்.  ஏதோ திருமண நிகழ்ச்சிக்கு போய்விட்டு வருபவர்கள் போல இருந்தனர்.  அவர்களுடன் நிறைய சிறு குழந்தைகளும் வாண்டுகளும் ஏறி நின்றிருந்த பேருந்தில் ஒரே சலசலப்பு.   கூட்டம் மிகுந்ததால் காற்றோட்டம் குன்றி வியர்க்கத்தொடங்கியது.  எப்போதுடா வண்டி எடுக்கப்போகிறார்கள் என்றாகிவிட்டது.  சிறிது நேரத்திலேயே பள்ளிக்கூடங்கள் விட்டு மாணவர்களும் மாணவிகளும் ஏறத்தொடங்கலாயினர்.  

"டம்" என்ற ஓசையோடு பேருந்து சிறிது குலுங்கியது.  இது ஓட்டுனர் ஏறியதன் அறிகுறி.  சாளரத்தின் வழியாக சிறிது எட்டிப்பார்த்தேன்.  ஓட்டுனர் மீண்டுமுறை அவர் அருகிலிருக்கும் சிறு கதவை திறந்து இன்னும் வேகமாக "டம்" என அடைத்துக்கொண்டார்.  தன் இருக்கையில் அமர்ந்தவர், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் கால் சட்டை பையிலிருந்து கைலேஞ்சியை எடுத்து அதன் இரு எதிர் முனைகளை தன் இரு கைகளால் பிடித்து வேகமாகச் சுழற்றி கயிறு போலாக்கி கழுத்துக்குப் பின்னால் சொருகிக்கொண்டார்.  பின்பு கைகளை கட்டியபடி சாய்ந்து அமர்ந்துவிட்டார்.

"லேய் டைவறே.. வண்டிய எடுல.. நேலமாச்சில்லா.." என்றொரு உரத்த குரல் பின் இருக்கையிலிருந்து கேட்டது.  மக்கள் பொறுமை இழந்துகொண்டிருந்தனர்.  ஓட்டுனர் திரும்பிப்பார்த்து "யோம்ப்ல அது... கண்டட்டற் இயேறண்டாமால.. ஒனக்க அப்பனா வந்து டிக்கட்டு கொடுப்பாங்... சும்மா கடுப்புகள இயேத்திட்டு..".  

"அம்ம.. அம்ம.." எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த நல்ல பருமனான பெண்ணின் மடியில் ஒரு கைக்குழந்தை அழ்ந்த உறக்கத்தில் இருந்தது.  அவர் அருகில் நான்கு அகவையில் ஒரு சிறுவன்.  அவன்தான் "யம்மா..  ஏ யம்மா.." என கூப்பிட்டுக்கொண்டிருந்தான்.

"என்னல.. என்ன வியேணு...  அப்பலேலருந்து பிறாண்டிட்டே இருக்க..."  சிறுவனின் முகம் சுருங்கிவிட்டது.

"வீ...வீ..." நடத்துனர் ஏறிவிட்டார்.. அதற்குள் பள்ளி மாணவர்கள் புளி மூட்டைபோல பேருந்தெங்கும் அடைத்து நின்றுகொண்டிருந்தனர்.  ஒருவழியாக வண்டி மெல்லக் கிளம்பியது.  "டிகட்.. டிகட்..".  வண்டி கோட்டாரைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. 

முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த சிறுவன்.  சுற்றுமுற்றும் பார்த்தவாறு இருந்தான்.  நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  அங்கும் இங்கும் திரும்பிக்கொண்டிருந்தவன் சட்டென்று நான் பார்ப்பதை பார்த்துவிட்டான்.  நானும் சட்டென்று வெளியே பார்ப்பதுபோல பாவனை செய்து ஓரக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தேன்.  அவன் சிறிதாகச் சிரித்துவிட்டு தன் அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொள்ள முற்பட்டான்.

"என்னல.. கொடஞ்சிட்டே இருக்க.. மடீல பிள்ள ஒறங்குவுல்லா.. அது முளிச்சிடிச்சினா ஓ-னு அளத்தொடங்கும்.. பேசாம பராக்கு பாத்துட்டுவா மக்களே.. சரியா..".  பாவமாகத் தலை ஆட்டினான்.  "அம்ம.." என ஏதொ மெல்லவந்தவன், தன் இரு கைகளையும் இறுக்கக் கட்டிக்கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.  சட்டன நிமிர்த்து திரும்பி நான் அவனைப் பார்க்கிறேனா என பார்த்தான்.  நானும் எனது கண்ணை வேறுபக்கம் திருப்பிக்கொண்டேன்.  மீண்டும் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.  

பேருந்து பார்வதிபுரத்தைத் தாண்டி மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது.  நிறுத்தங்கள் வரவர மாணவர் கூட்டம் குறைந்தவண்ணம் இருந்தது.  முன்பக்க வாசலுக்கு அருகே இன்னும் நிறைய பள்ளி மாணவிகள் நின்றுகொண்டிருந்தனர்.  மாணவிகள் முகத்தில் அத்தனை களைப்பு.  நான் பள்ளி படிக்கும் காலங்களில், மாலையில் பள்ளி விட்டபிறகு, வீடு செல்வதற்கு முன்னர் முகம் கழுவி துடைத்து, சிறு பெட்டலமாக்கிக் கொண்டுவந்த பூசுத்தூளைப் பூசி பொட்டு வைத்துக்கொள்வர்.  இக்காலத்து மாணவிகளிடம் அப்பழக்கம் இல்லாமல் போனதோ!

என் முன் இருக்கையில் இருந்த பெண் மடியில் உறங்கும் குழந்தையோடு தானும் தூங்கியாடத்தொடங்கியிருந்தார்.  சிறுவன் என்ன செய்கிறான் என எட்டிப்பார்த்தேன்.  இருக்கையில் கால்களை சம்மணம் போட்டவாறு அமர்ந்து தன் இரு கை விரல்களை விரித்துவிரித்து மூடிக்கொண்டிருந்தான்.

"சுங்காங்கடை.." என அடித்தொண்டையில் கத்தினார் நடத்துனர்.  முன் இருக்கையில் உறக்கத்தில் இருந்த அப்பெண் பதறி விழித்து வெளியே பார்த்தார்.  பின்பு மடியில் உறக்கத்தில் இருந்த குழந்தையை சரிசெய்துகொண்டார்.  

"இயம்மா.."

"என்ன மக்கா.."

"ஒண்ணுக்கு.."

"லேய்.. மண்டவத்ல வெச்சு கிளம்பதுக்கு முன்னால எத்தன தடவல கியேட்டேன்.. ஒண்ணுக்கு பேயிட்டுவா ணிட்டு.. அப்பல்லா வரல்லணுட்டு வண்டி பேயிட்ரிக்யும்போ ஒண்ணுக்கு வருதுணி சொன்னாக்க எப்பிடில.."

"இயம்மா..  முட்டுவுமா.."

"லே.. இன்னியூம் மூணு சிடாப் தாம்ல.. தக்கல வந்துரும்.. அங்கிண போயி மோண்டு உலுப்பு.. இப்ப சலம்பாம கட.." 

பேருந்து வில்லுக்குறி தொட்டிப்பாலம் தாண்டியாயிற்று.  

"அம்ம.. "

"என்னல..  முட்டுவா.."

"ஆமாம்மா.. ரெம்ப முட்டுவு.."

"லேய் மக்கா.. இங்கயே பேயிராதே.. நம்ம மானம் போயிரும்.."

"அம்மா.. " என சிறுவன் தன் கீழ் உதட்டைப் பிதுக்கி அழத்தொடங்கிவிட்டான்.  பார்க்க பாவமாக இருந்தது.  பையனுக்கு கடுமையாக முட்டுகிறது..

உடனே நான் நடத்துனரை நோக்கி வண்டியை நிறுத்துமாறு கூறினேன்.  அவர் "இங்கெல்லாம் வண்டி நிக்காது" என விபரீதம் அறியாமல் கூறினார்.  உடனே சிறுவனுக்கு வந்துள்ள சிறுநீர் சிக்கல் பற்றிக் கூறியதும், உடனே "வீ....." என தன் உதட்டாலேயே சீட்டி அடித்தார்.  வண்டி சட்டென்று நின்றது.  ஓட்டுனர் திரும்பிப்பார்த்தார்.  "சின்னப் பொடியனுக்கு ஓண்ணுக்கு வருதாம்.." என்றார் நடத்துனர்.  பொடியன் எழுந்து "அம்மா நீயும் வாமா.." என்றான் "நீ தைரியமா போயிட்டுவா மக்கா.. நான் இஙாகிணரிந்தே பாக்கேன்" என்றாள் அம்மா.. தன் நிக்கரை பிடித்தவாறே படியிறங்கி வெளியே ஓடினான்.  இறங்குமூன் ஓட்டுனரைப் பார்த்து "வண்டிய எடுத்துராதீங்க" என்று கூறிவிட்டு ஓடினான்.

வண்டி நின்ற இடத்துக்குப் பக்கத்தில் வரிசையாக ஒரே கடைகள்.  அவனுக்கு சிறுநீர் கழிப்பதற்கு ஏதுவான இடம் அங்கு இல்லை.  அங்கும் இங்கும் ஓடினான்.  அத்தனை பயணிகளும் "லே.. அங்கின போல.. இங்கின போல.." என பேருந்தில் இருந்தவாறே இடம் காட்டிக்கொண்டிருந்தனர்.  ஒருவழியாக, பேருந்தின் முன்பக்கம் சாலை ஓரமாக இருந்த ஒரு சிறு மரத்தின் அருகே சிறுநீர் கழிக்க நின்றான்.  பேருந்தில் இருந்த அத்தனைபேரும் கடைகளில் இருந்த அத்தனைபேரும் சிறுவன் எவ்வாறு சிறுநீர் கழிக்கப்போகிறான் என்பதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினர்.  இன்னும் சிலர் ஏவுகணை ஏவுவதுக்கு முன்பு எண்ணுவதைப்போல 9,8,7.. என்றெல்லாம் எண்ணத்தொடங்கிவிட்டனர்.   ஆனால் சிறுவன் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை.  அவ்வப்போது திரும்பித் திரும்பி பேருந்தை பார்த்தவாறு இருந்தான்.  முன்பக்க இருக்கையில் இருந்த மூதாட்டி "மக்கா பயறாம ஒண்ணுக்கிரு" என்றார்.  ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார்.. பக்கவாட்டு இருக்கையில் இருந்த வழுக்கை மாமா "பேடிக்காதே.. தாழ இருந்நு முள்ளிக்கோ.." என மலையாளத்தில் வேறு கூறினார்.  ஏவுகணைக்காக எண்ணியவராகள் 4,3,2.. என வந்திருந்தனர்..

"சீக்கிரம் ஒண்ணுக்கிருந்திட்டு வண்டிக்குள்ள யாறுல" என்றாள் அம்மா

"யம்மா வரமாட்டேங்கி மா.. நீ இங்க வாமா" என கத்தினான் சிறுவன்.

உடனே அவர்கள் கூட வந்த திருமணகும்பல் இந்த பெண்ணிடம் "நீ போ.  குழந்தையை நங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றனர்.

"இவனோட ரோதனை.." என சலித்துக்கொண்டே உறங்கும் குழந்தையை முன் இருக்கையில் இருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு படி இறங்கி சிறுவனை நோக்கிச் சென்றார்.

சிறுவன் அம்மாவின் காதுகளில் ஏதோ சொன்னான்.  ஊடனே அந்த பெண் அச்சிறுவனை மறைத்தவாறு நின்று எங்களைப்பார்த்து "நீங்களெல்லாம் பாக்கக்கூடாதாம்.  அப்டி பாத்ததுனாலத்தான் அவனுக்கு ஒண்ணுக்கு வரல்லையாம்.  எல்லாரும் கண்ண மூடிக்கங்க" என்றார் நகைத்தவாறே.

"பாம்.. பாம்.." எங்கள் பின்னால் வந்திருந்த இன்னொரு பேருந்து வழிவிடு என கத்தியது.  உடனே நம் ஓட்டுனர் பேருந்தை "ர்ர்ர்.." என உயிர்ப்பித்தார்.  

"அம்மா வண்டி எடுத்துட்டாங்க.. டிரைவர் வண்டிய எடுக்காதீங்க.. எங்க பாப்பா உள்ள இருக்கு" எனக் கத்தினான்..

வண்டியை சற்று ஓரமாக நிப்பாட்டிவிட்டு "ஏ யப்பா.. ஒன்னோட பாப்பாவ எங்கேயும் கொண்டுபோவல்லை.   சீக்கிரம் மோண்டுட்டு வண்டீல ஏறு. " என்றார் ஓட்டுனர்.

சிறு மரத்துக்கு போதிய நீர் பாய்ச்சியபின்னர், தக்கலையை நோக்கிப் பயணித்தது பேருந்து.

"ஆத்திரத்த அடக்கினாலும் மூத்திரத்த அடக்கமுடியாது" என்கிற பள்ளிக்காலப் பழமொழிதான் நினைவுக்குவந்தது.

கொசுறு: அண்மைக்காலமாக பேருந்தில் அடிக்கடி பயணிக்கையில் ஒன்றை கவனிக்கிறேன்.  அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு பயணம் இலவசம் என தமிழ்நாடு அரசு சட்டமிட்டபிறகு, பெண்கள் மிகுதியாக பயணிக்கின்றனர்.  முன்பெல்லாம் இவ்வளவு பெண்கள் கூட்டத்தை பார்க்கமுடியாது.  தற்போதே ஆண்கள் இருக்கைகளிலும் அமர்ந்துவிடுகின்றர்.  வீட்டுக்கு உள்ளேயே அடைந்துகிடந்த பெண்களுக்கு இந்த இலவச பயணக் கட்டணத் திட்டமானது நல்லதொரு சமூக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.  

Wednesday, February 1, 2023

கருப்பு சூத்திரச்சி

 கருப்பு சூத்திரச்சி



1976

மாலை 4:10

அப்போது தான் மோர்க்கூழ் பருகிவிட்டு தாத்தா மடியில் அமர்ந்திருந்தேன்.  தாத்தா உள்திண்ணையில் இருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  நாற்காலியில் எதிரே மச்சில் செல்லும் ஏணிப்படியின் வாசல் திண்டில் அப்பாமை நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார்.  நான் வாசலில் செல்வோரையும் அப்பாமையையும் மாறிமாறி பார்த்துகொண்டு புன்னகைத்தவாறே எதோ சொல்லிக்கொண்டிருந்தேன்.  மாலைநேரக் கதிரவன் தெருவெங்கும் பரப்பிவைத்திருந்த மஞ்சள் வெயில் மயக்கத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது.  என் உடலெல்லாம் ஒரே குட்டிகூரா வாசம். தாத்தா என் பின்தலையை அவ்வப்போது முத்தம் கொடுத்தும் விரலால் நோண்டுவதுமாக இருந்தது எனக்கு குறுகுறுப்பாக இருந்தது.  

4:15

அம்மா, கைகால்முகம் கழுவி தலைவாரி பவுடர் போட்டு போட்டுவைத்து கையில் வாரியலும் வாளியுமாக எங்ககளைக்கடந்து வாசல் திண்ணையை  நோக்கி சென்றார்.  அதேநேரத்தில்  பேபியக்காவும் இலதா அக்காவும் என் வீட்டுக்குள் துள்ளியவாறே வந்தனர்.  இலதா அக்காவின் ஒக்கலில் ஒரு குழந்தை இருந்தது.  அக்குழந்தை ஒரு சிறிய கால்சட்டை மட்டுமே போட்டுக்கொண்டிருந்தது.  எனக்கு சிரிப்பாக வந்தது. பேபியக்கா என்னை இருகைகளாலும் தாத்தா மடியிலிருந்து தூக்கி இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள்.  "பார்த்து தூக்குடீ கொழந்தைய தாழ கீழ போட்டுராதே" என அப்பாமை அதட்டினாள்.  அப்போதுதான் அதைப் பார்த்தேன்.  எனக்கு எந்தவித சட்டையும்  போட்டுவிட்டிருக்கவில்லை .  மிகவும் வெட்கமாகிவிட்டது.  பேபியக்காவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கும் தான்.  என்னை இடுப்பில் வைத்துக்கொண்டு "ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..." என பாடிக்கொண்டிருந்தாள்.  வாசலில் அம்மா கோலம் போடுவதை பார்த்துக்கொண்டிருந்த இலதா அக்கா, பாட்டைக்கேட்டு உள்திண்ணைக்கு வந்து அவளும் பாட ஆரம்பித்தாள்.  இலதா அக்கா கையில் இருந்த குழந்தையும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது.  தாத்தாவுக்கு ஏனோ அக்காக்கள் பாடுவது துளியும் பிடிக்கவில்லை போல, "போங்க போங்க வெளில போய் ஆடுங்க" என்றார்.  

4:30

நாங்கள் எல்லாரும் பக்கத்து பாம்படம் மாமி வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தோம்.  இலதா அக்கா கிழக்கே அத்தம் எதையோ பார்த்துக்கொண்டிருந்தாள். பேபி அக்கா இன்னும் பாடிக்கொண்டுதான் இருந்தாள்.  பேபியக்கா மீது பாண்ட்சு மனம் வீசிற்று, பூபோட்ட பாவாடை சட்டை அணிந்திருந்தாள்.  இலதா அக்கா பச்சை நிற பாவாடையும் வெள்ளைநிற சட்டையும் தலையில் பச்சை நிற இரிப்பனுடன் பள்ளிச்சீருடையிலேயே இருந்தாள் .

"பேபி பாருடீ பாருடீ கிழக்கே அத்தம் பாருடீ" என இலதா அக்கா எதையோ கையை நீட்டி காண்பித்தாள்.  நான் உற்றுப்பார்த்தேன்.  அதற்குள் இருவரும் எழுந்துநின்று "யேஏஏஏ.." என கையசைக்கலாயினர்.  தொலைவில் மாட்டுக்கொளத்தையும் தாண்டி தொடரி வண்டியானது பெட்டி பெட்டியாகப் போய்க்கொண்டிருந்தது. நானும் கையை அசைத்தேன். எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

4:45

"டீ இலதா, வாடி உள்ள, வந்ததும் வராத்ததுமா கொழந்தைய கொஞ்சிண்டிருக்கே" என்று  கையில் மாவரைத்த கையோடு மீனாட்சி மாமி அவர்வீட்டு திண்ணை கழிக்கொலை பிடித்தவாறே சொன்னார்.  "உள்ளவந்து கைகால் கழுவி சீருடைய மாத்துடி....  காப்பி கலந்து வெச்சேனே குடிச்சியா..." என வரிசையாக இலதா அக்காவைப்பார்த்து அடுக்கிக்கொண்டேயிருதார் மீனாச்சி மாமி.  "போடீ போ, அம்மாவுக்கு சினம் வருவதுக்குள்ள போயிரு" என்றாள் பேபியக்கா.  இலதா அக்கா எழுந்து அவர் வீட்டு வாசலுக்கு போகையில் "மொதல்ல கொழந்தைய அவவீட்ல கொண்டு கொடு. அவாள்ளாம் இன்னிக்கி சாயங்காலம் நாகராசா கோவிலுக்கு போகணும்னு சொல்லிண்டிருந்தா.. போ.. போ.." என்றாள் மீனாட்சி மாமி.

5:00

பெருமாள் கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது,  அம்மா வாசலில் வந்து எட்டிப்பார்த்தார். பின்பு திரும்பி எங்களைப்பார்த்து 
"என்ன பண்ணறான், இலதா எங்கே?" .  

"தேமேன்னு தான் இருக்கான்.. பராக்கு பாத்துண்டுருக்கன். இலதா சீருடை மாத்த போயிருக்கா".  

"கொழந்தை?".  

"ஏமாவோட அம்மாவும் பாட்டியும் நாகராசா கோவிலுக்கு போவாங்களாம்.  இலதா அவ வீட்ல கொண்டு விட்டுட்டா"

சிறிது தொலைவில் ஒரு சில அண்ணாக்கள் நிக்கர் அணிந்துகொண்டு பம்பரம் விளையாட ஆரம்பித்தனர்.  அப்போது பார்த்து இன்னொரு அக்கா அங்கு வந்து எங்கள் முன்னால் நின்றவாறு பேபியக்கவிடம் குசுகுசுவென ஏதோ  பேசிக்கொண்டிருந்தாள், எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ஆனால் அந்த அக்கா எங்களுக்கு முன்னால் நிற்பதால் எனக்கு பராக்கு பார்க்க முடியவில்லை.

அந்த நேரத்தில் "போங்கமா போங்க.. இங்கெல்லாம் நீங்களெல்லாம் வரப்டாது.." என்ற ஓசை வரவே நாங்கள் எல்லாரும் கோவிலை நோக்கி திரும்பிப்பார்த்தோம்.  கோவில் பூசாரி கோவில் வாசலில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்ணைப்பார்த்து சத்தம்போட்டு  சொல்லிக்கொண்டிருந்தார்.  அந்த பெண்ணின் இடுப்பிலும் ஒரு பாவாடைசட்டை அணிந்த ஒரு குழந்தை இருந்தது.

"என்ன சொன்னேள்.. யாரப்பாத்து கோவிலுக்குள்ள வரப்டாதுனு சொல்லறேள்".. என்று அந்த பெண் பெருங்குரலெடுத்து கத்தலானார்.

"பிராமணன் யாரு சூத்தரன் யாருனு வித்தியாசம் தெரியாம நீங்கள்ளாம் எதுக்கு  கோவில் குக்ளிக்கறேள்.."

"கோவில் நடத்தற இலச்சணம் இப்பிடியாயிருந்ததுனா உள்ளருந்து பகவான் வெளிய ஒடிப்போயிருவார் "

"எங்காத்து புருசாளுக்கு மட்டும் இது தெரிஞ்சிதுனா, ஒய், ஒம்ம நாக்கறுத்து ஊறுக்காய் போட்டுருவா..."

என்று சொல்லிவிட்டு விசும்பலானார், முந்தாணையால் கண்களை துடைத்துக்கொண்டார். பின்பு அப்படியே கோவில் வாசல் படியில் அப்படியே அமர்ந்துவிட்டார்.

நாங்கள்ளாம் அதிர்ச்சியில் சற்று திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.  எல்லார் வீட்டு வாசலிலும் மக்கள் கூடிவிட்டனர்.  இன்னொரு அக்கா, பேபியகாவைப் பார்த்து, "யாருடி அந்த மாமி. இதுக்கு முன்னாடி பாத்ததேயில்லையே" என்றாள்.  என்னுடைய அம்மாவும் பேபியகாவைப் பார்த்து அதே கேள்வியை கேட்டார்.  பேபியக்கா சிறிது யோசித்துவிட்டு, "பெரிய தெருவுல புதுசா யாரோ வந்துருக்கானு அப்பா சொன்னார்னு நினைக்கிறேன்.. அவாத்து மாமியா இருப்பாளோ?, எனக்கும் தெரியல்ல மாமி" என்று உதட்டை பிதுக்கினாள்.  அக்காவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான்  என் உதட்டை அதுமாதிரியே பிதுக்கி பார்த்துக்கொண்டேன்.

வெலவெலத்துப்போன பூசாரி தன் குரல் தாழ்த்தியவாறு "மாமி மன்னிச்சிக்கோங்கோ.  ஒங்கள இதுக்கு முன்னாடி முன்னப்பின்ன பாத்ததில்ல... சொல்லறேனேன்னு தப்பா நெனச்சுக்காதேங்கோ, நீங்க கொஞ்சம் நெறம் மட்டா தெரியறதுனால பிராமணாள் இல்லையோனு நெனச்சுட்டேன், என்ன மன்னிச்சுக்கோங்கோ, என்ன மன்னிச்சுக்கோங்கோ" என்றார்..

மறுபடியும் எழுந்து நின்ற அந்த மாமி, ஆவேசமாய், "டேய், என்ன கறப்புங்கறையா.. ஆமாண்டா நான் கறப்பு தான்.. அதுக்காக கோவிலுக்கு வரும்போது ஒனக்காக பூணூல் எல்லாம் போட்டுண்டு வரமுடியாது, தெரிஞ்சுக்கோ"

"மாமீ, கொஞ்சம் மரியாதையா பேசுங்கோ, நான் ஒங்கள விட வயசுல பெரியவனாக்கும், இதுவும் கொவிலாக்கும், தெருவுல வேற எல்லாரும் பாக்கறா"

"ஒனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை. போம்மனாட்டிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியல்லை... இது கோவில்னு நீ சொல்லித்தான் தெரியணம்னில்லை, எல்லாரும் பாக்கட்டுமே ஒன்னோட சந்தத்த... இரு இரு இப்போ போய் எங்காத்துக்காரர கூட்டிண்டு வரேன்.  அவர்ட்ட பேசிக்கோ. நன்னா கொடகொடயா குடுப்பார் வாங்கிக்கோ"

அதற்குள் அம்மங்கார் பகவதி மாமியும் இன்னும் சில மாமா மாமிகளும் கிடுகிடு என்று கொவிலுக்கருகில் சென்றுவிட்டார்கள்.  

"மாமி.. மீனா மாமி, அவர் செஞ்சது மகா  தப்புத்தான், அவரும் மன்னிப்பு கேட்டுட்டார், நாங்களும் தெருக்காரா சார்பா மாப்பு கேட்டுக்கறோம். இனிமே இதுமாதிரி நடக்காது." என்றார் அம்மங்கார் மாமி.

பூசாரியைப்பார்த்து "என்ன ஓய், கொஞ்சம் கவனமா இருக்கண்டாமா "

கோவில் மாமாவின் முகம் கொவத்தாலும் அவமானத்தாலும் வியர்த்து சிவந்திருந்தது.

"வாங்கோ மாமி நாம எல்லாரும் கோவிலுக்கு போகலாம்", அழுது முகம் வீங்கியிருந்த மீனா மாமியின் கண்களை துடைத்து கோவிலுக்குள் அழைத்துச்சென்றார்.

பதட்டத்தில் நான் பேபியக்காவின்  கழுத்தை இறுக்க பிடித்துக்கொண்டிருந்தேன்.  அம்மங்கார் பாகவதி மாமினா எனக்கு எப்பவுமே பயம் தான். நான் பார்த்த பெண்களிலே நல்ல உயரமும் பருமனும் ஆண்தன்மையும் கொண்டவர் அம்மங்கார் பாகவதி.  சிறிதாக மீசையும் உண்டு.

6:00

தீபாராதனைக்கான மணி கேட்டது, நாங்கள் எல்லாரும் கோவிலின் நேரே உடைந்து போயிருந்த சாலையில் போய் உம்மாச்சியை பார்த்தவாறே கும்பிட்டுக்கொண்டு நின்றோம்.

தீபாராதனை முடிந்ததும் பேபியக்கா என்னை அம்மாவிடம் கொடுத்துவிட்டாள், வீட்டுப்பாடம் இருக்காம்.  அம்மா என்னை ஒக்கல்லேல தூக்கிக்கொண்டு வாசல் கல் படியில் காலை தேய்த்தவாறே நடந்து சென்றபோது, கோவில் பக்கமாய் மீண்டும் திரும்பிப்பார்த்தேன்.  மெல்லியதாக இருட்ட ஆரம்பித்திருந்தது.

கோவிலின் முன்னால்  தெருவுக்குள் வரும் இரு பெரும் படிகளின் மீது நின்றவாறே அப்பாமையும் மீனாச்சி மாமியும் அம்மங்கார் பாகவதி மாமியுடன் எதோ மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

இதில் கதையின் கரு மட்டுமே உண்மை நிகழ்வு.  மற்றவை என் கற்பனையே.

Sunday, January 1, 2023

உணவும் உடல்நலமும்

உணவும் உடல்நலமும்


பொதுவான அறிவுரைகள்: 

௧} காலை எழுந்தபின் காலைக்கடன்கள் முடிந்தபின் காலை உணவை உண்டுவிடவும்.  எழுவதற்கும் உணவு உட்கொள்வதற்கும் இடையே வேறு எதையும் கொறிக்கவோ (நீர் உட்பட எதையும்) குடிகவோ வேண்டாம். 

௨} காப்பி, கொக்கோ கலந்த உணவுகள், மது, மிகச் சூடான உணவுகளை தவிர்க்கவும்.  தேநீரைக் குறைத்துக்கொள்ளவும்.   மிகச் சூடான உணவுகளை வாய் தாங்கினாலும் வாய்க்கும் இரைப்பைக்கும் இடையே இருக்கும் உணவுக்குழாயால் பலநேரம்  தாங்கிக்கொள்ள முடியாது.

௩} ஒவ்வொரு முறை உணவு உண்ட ஐந்து நிமிடத்துக்குப் பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் வீட்டுக்குள்ளேயோ அலுவலகத்திலோ வேளியேவோ மிதமான வேகத்தில் நடை பயிலவும்.  (வேக நடையோ மெல்ல நடையோ வேண்டாம்).  நடையானது உங்கள் உணவுச் செரிமானத்தை இயற்கையாகவே சீராக்கும்.  அப்படி நடக்கும்போது ஏப்பங்கள் வருவதை உணர்வீர்கள்.  இந்த நடைப் பயில்தலானது வேறுபல வகையிலும் உங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

௪} உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரோ பின்னரோ மட்டுமே நீர் அருந்துங்கள்.  உண்ணும்போது நீர் அருந்துவதை தவிர்க்கவும்.  தேவைப்பட்டால் ஒன்றிரண்டு மடக்குகள் அருந்தலாம். பொதுவாகவே எந்தவேளையிலும் நிறைய தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும்.  இது இரைப்பை அமிலத்தை நீர்த்துப்போகச்செய்துவிடும்.  உண்ணும் உணவானது சீராகச் செரிமானமாக இரைப்பையில்  இயற்கையாக ஊறும் நீர்மமாகாத (ஐதரோகுளோரிக்) அமிலம் நிறையத்தேவை.  தாகத்தின்போது நீர் அருந்தியே ஆகவேண்டும். மேலும் ஒவ்வொருமுறை சிறுநீர் கழித்தபிறகு ஒரு குவளை நீர் அருந்தலாம்.

௫} எண்ணையில்/பிறகொழுப்புகளில் பொரிக்கப்பட்ட உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். 

௬} நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்கவும்.  அதிலும் இனிப்புகளை நொறுக்குத்தீனிகளாக உண்பதைத் தவிர்க்கவும்.  வேண்டுமென்றால் உணவொடு சேர்த்து அளவான  நொறுக்குத்தீனிகளை உண்ணலாம்.   வெறுமனே நொறுக்குத்தீனி மட்டும் உண்ண நேர்ந்தால் 20 நிமிடம் நடக்கவும். 

௭} 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்தே இருக்கவேண்டாம்.  அப்படி இருக்க நேரிட்டால் இடையிடையே எழுந்து  கழுத்தை கையை முதுகை அசைந்துத் திருப்பி நடந்தபின் அமரவும். 

௮} படுப்பதற்கு முன் குறைந்தது ஒரு மணிநேரத்துக்கு முன்பே உணவு அருந்திவிட்டு நடக்கவும் செய்திருக்கவேண்டும்.

௯} படுக்கும்போது இடதுபக்கமாகச் சரிந்தோ நிமிர்ந்தோ படுக்கவும். வலது பக்கமாகச் சரிந்தோ வயிறு அமுங்கியபடி கவிழ்தோ படுக்கவேண்டாம்.

௰} எந்த வகையான உடல்நலச் சிக்கலுக்கும் கை மருத்துவத்தை மட்டும் நம்பியிராமல் மருத்துவரை அணுகி பரிந்துரைகளைப் பெறவும்.

அரங்கநாத எண்பா

இயற்றியது : ஆதிசங்கரர் தமிழாக்கம் : அடியேன்   பேரின்ப வடிவே பேரருள் வடிவே  பெருங் கதிர் ஒளிர்வு தரும் மறை சாறின் வடிவே  குளிர் நிலவின் வடிவே...