ஸ,ஷ,ஜ,ஹ,ஶ,க்ஷ,ஶ்ரீ ஆகிய வடவொலிதரும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாமா?
எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப.சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
வடசொற் கிளவி வடவெழுத்து 'ஒரீஇ' எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
கிரந்த எழுத்துகளை தமிழில் முறைப்படுத்தி பயன்படுத்த தொடங்கிவிட்டால், இந்திய மொழிகளில் தமிழுக்கென்று மிச்சமிருக்கும் பிறமொழி கலவா தனித்தமிழ் கலைச்சொல்லாக்கம் என்பது அழிந்துவிட பெருமளவு வாய்ப்புண்டு. தமிழ் தவிர மற்ற இந்திய மொழிகளில் கலைச்சொற்கள் பெரும்பாலும் சங்கத மொழியிலேயே உருவாக்கப்படுகின்றன என்பதைக் காண்க.
வேற்றுமொழிச் சொற்களும் ஒலிகளும் அதற்கான (கிரந்தம் பொன்ற) எழுத்துகளும் 'கூடுமானவரை' தீண்டத்தகாத நச்சு வேதிப்பொருள் உணவு நிறமிகளாகக் கருதி (முறைப்படி தடைசெய்யப்பட்டு) தள்ளியே வைக்கப்பட்டு 'வேறுவழியேயில்லை' என்ற கட்டத்தில்மட்டும் (சட்டமீறுதல்களோடும், குற்ற உணர்ச்சியோடும்) சிறிது தொட்டுகொள்ளலாம். இந்த 'குற்ற உணர்ச்சியே' தனித்தமிழை நோக்கிய தேடலுக்கு வழிவகுக்கும்.
"தனித்தமிழ் வைத்து என்ன பயன்?; வேற்றுமொழிச் சொற்களை அப்படியே ஏற்பதில் அப்படி என்ன குறைச்சல் ஏற்பட்டுவிடப்போகிறது? இதனை ஏற்கனவே செய்திடும் பிற இந்திய மொழிகள் அழிந்தா பொய்விட்டது?; 'ஆங்கிலத்தை'ப்போல் பலமொழிக் கூறுகளை தன்னுள் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொண்டால் தானே தமிழானது பன்மடங்கு வளம்பெறும்?; வாயால் எழுப்ப இயலக்கூடிய ஒலிகளை எழுதமுடியாத ஒரு வரிவடிவத்தை வைத்துக்கொண்டு என்ன பயன்? இவ்வகை எழுத்துகளின் சேர்ப்பால் தமிழிலிருந்து இன்னொரு 'மலையாளம்' பிரிந்து சென்றாலும் அதனால் தமிழுக்கு என்ன இழப்பு? " போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் இங்கு உள்ளனர் என்று எனக்குத்தெரியும். :-) அதற்கு பதிலாக ஒரு ஆய்வுக்கட்டுரை நூலையே எழுதவேண்டிவரும் என்பது என் கணிப்பு.
பொதுவாக கிரந்த எழுத்துகள் பெயர்ச்சொற்களை எழுதுவதிலேயே பயன்படுவதைக் காணலாம். இவ்ழுத்துகளை தொல்காப்பியம் கூறும் முப்பது தமிழ் எழுத்துகளை மட்டும் வைத்தே எழுதிட முடியும் என்பது என் பட்டறிவு. அதை எப்படி எனப்பார்ப்போம்.
ஸ,ஶ
எ.கா:ஸர்ப்பம் >> சர்ப்பம்
எ.கா:ரோட்ரீகஸ் >> உரோட்ரீகசுரஸ்க் >> இரசுக்கு
எ.கா:ஶ்யாமளா >> சியாமளாவஸ்யம் >> வசியம்
எ.கா:ஸ்தாணு >> தாணுஸ்தலம் >> தலம்ஸ்டாலின் >> தாலின்
5} ஸ்' அல்லது 'ஶ்' ஆகிய எழுத்துகளுக்குப் பிறகு 'ட'காரம் வந்தால் அதனை 'த்த' ஆக எழுதலாம்.
எ.கா:-அகஸ்டின் >> அகத்தின்
எ.கா:-ராக்ஷஸன் >> இராட்சதன் / இராக்கதன்
ஹஸ்தம் >> அத்தம்
ஷ
எ.கா:ஷாநவாஸ் >> சாநவாசுரோஷினி >> உரோசினி
எ.கா:ஜோதிஷம் >> சோதிடம்விஷம் >> விடம்விஷயம் >> விடயம், விசயம்ரிஷபம் >> இரிடபம், இரிசபம் >> இடபம்
பாஷாணம் >> பாடாணம்
எ.கா:ரேஷ்மா >> இரேசுமா
ரஷ்யா >> உருசியா
சிஷ்யர் >> சிசியர் >> சீடர்
எ.கா:
புஷ்கலா >> புசுக்கலா
குஷ்டம் >> குட்டம்
புஷ்பம் >> புட்பம், புசுப்பம்
எ.கா:விஷயம் >> விழயம் >> விழையம்ரிஷபம் >> இரிழபம்.
ஜ
எ.கா:ஜகன் >> சகன்ஜான்ஸன் >> சான்சன்ராஜராஜன் >> இராசராசன்
எ.கா:ஜ்வாலா >> சுவாலைராஜ்குமார் >> இராசுகுமார்
எ.கா:பூஜ்யம் >> பூசியம்
எ.கா:புஜங்கன் >> புயங்கன்.
ஹ
எ.கா:ஹளபீடு >> அளபீடுஹொகேனக்கல் >> ஒகேனக்கல்ஹோசூர் >> ஓசூர்ஹைதராபாத் >> ஐதராபாதுஹரி >> அரி
எ.கா:
ரஹ்மான் >> இரகுமான்
ராஹுல் >> இராகுல்
ரஹஸ்யம் >> இரகசியம்
எ.கா:ஹ்ருதயம் >> இருதயம் >> இதயம்.
க்ஷ
எ.கா:ரக்ஷகன் >> இரட்சகன்ராக்ஷஸன் >> இராட்சசன்தீக்ஷை >> தீக்கைருத்ராக்ஷம் >> உருத்திராக்கம்லக்ஷ்மி >> இலக்குமிலக்ஷ்மணன் >> இலக்குமணன் >> இலக்குவன்
எ.கா:க்ஷேத்திரம் >> சேத்திரம்க்ஷமை >> சமை.
ஶ்ரீ
எ.கா:ஶ்ரீநிவாசன் >> சீனிவாசன்ஶ்ரீதேவி >> சீதேவி
எ.கா:ஶ்ரீலங்கா >> சிறீலங்கா >> திருயிலங்கைதேவிஶ்ரீ >> தேவிசிறீ
எ.கா:ஶ்ரீரங்கம் >> திருவரங்கம்ஶ்ரீவைகுண்டம் >> திருவைகுண்டம்
F,Z
எ.கா:FeரோZ -> பெரோசுFaத்திமா -> பாத்திமாZiம்பாப்வே-> சிம்பாப்வே
எ.கா:
ராஜராஜன் >> மன்னர்மன்னன்
ஸ்தலம் >> இடம்
ஸர்ப்பம் >> பாம்பு
ஹளபீடு >> பழையவீடுஹொகேனக்கல் >> புகையுங்கல்
ஷூ >> காலணி
கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதில் உங்களுக்குச் சிக்கல் இல்லை என்றால் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஶ, க்ஷ ஆகிய எழுத்துகளையும் https://www.unicode.org/charts/PDF/U11300.pdf இதில் வரும் ga, da, dha, ba (𑌗, 𑌡, 𑌦, 𑌬) ஆகியவற்றிற்கான கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே பயன்படுத்துங்கள். வேண்டுமென்றால் kʰa, gʰa, chʰa, jʰa, tʰa, dʰa, thʰa, dhʰa, pʰa, bʰa (𑌖, 𑌘, 𑌛, 𑌝, 𑌠, 𑌢, 𑌥, 𑌧, 𑌫, 𑌭) இவற்றையும் தமிழ் எழுத்துகளுடன் பயன்படுத்திவிடுங்கள். பிறகு மிச்சம் என்ன இருக்கிறது.
இது பற்றி திரு வேதரத்தினம்